Thursday, September 9, 2010

அகதிக் கப்பல் - Refugee Boat

Tamil refugee boat




அகதிக் கப்பல்

அவனுக்கு ஒரு பெயர் இருந்த​து
அவன் பெற்றோரை இழந்த‌தால்
அனாதை என்றார்கள்

அவர்களுக்கென்று ஒரு மண் இருந்த​து
அந்த‌ மண்ணை இழந்த‌தால்
அகதி என்றார்கள்.

இந்தக் கப்பலுக்கும்
ஒரு பெயர் இருந்த​து
ஆனாலும் அகதிக்கப்பல் என்றார்க‌ள்

இழ‌ப்பு எவ்வ‌ள‌வு கொடுமை
என்று எண்ணிப் பாருங்க‌ள்.

குரு அரவிந்தன்

No comments:

Post a Comment