Wednesday, June 1, 2011

Mahajana - மகாஜனாவின் மொன்றியல் முத்தமிழ் விழா - 2011

மகாஜனாவின் மொன்றியல் முத்தமிழ் விழா - 2011
குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை (28-05-2011) மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடா கிளையினர் நடத்திய மொன்றியல் முத்தமிழ் விழா – 2011 மொன்றியலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சென்ற 100 வருடக் கொண்டாட்டம் போலல்லாது இந்த வருடம் மொன்றியல் கலைஞர்களே முற்று முழுதாக இந்த நிகழ்வில் பங்கு பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப உரையைக் கனடா கிளையின் மொன்றியல் ஒருங்கமைப்பாளர் திரு. சரவணமுத்து ரவிக்குமார் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திரு. திருமதி ஜெகன், திரு வி. நந்தீஸ்வரர், திரு திருமதி சாந்திநாதன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். அடுத்து திரையில் மகாஜனா என்ற நூற்றாண்டு நிறைவை ஒட்டிக் கனடாக் கிளையினரால் தயாரிக்கப்பட்ட மகாஜனாக்கல்லூரி பற்றிய நூற்றாண்டு ஆவணம் திரையிடப்பட்டது. 

தொடர்ந்து திருமதி. கஜசாந்தி அகிலன் அவர்களின் மாணவிகளான எஸ். தாரணி, என். கஜதீபா, என். தர்சிபா, ரீ. சிசாந்த், எஸ். ஆகாஸ், எஸ். அபிலாஸ் ஆகியோர் தேசிய கீதம், கல்லூரிக்கீதம் போன்றவற்றை இசைத்தனர்.

அடுத்த நிகழ்ச்சியாக இசை ஆசான் கீதவாணி தர்மாகரனின் வாத்திய மஞ்சரி நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தர்மாகரனின் ஸ்வரலய மாணவர்களான ரி. துஸ்யந்தன், கே. சஞ்ஜீவ், கே. பாரதி, ஜீ. நிரூசன், பி. பவிதாஸ், ரி. சுபாசினி ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.


வரவேற்புரையைத் திருமதி. லோகேஸ்வரி கனகரட்ணம் நிகழ்த்தினார்.

தொடர்ந்து திருமதி. யோகா இரவீந்திரனின் உருவாக்கத்தில்  மொன்றியல் திருமுருகன் கோயில் கலைநெறிக் கல்விக் கழக மாணவர்களின் கும்மி நடனம் இடம் பெற்றது. இதில் பி.நிலுஜா, எஸ். மதுரா, ஜி. அர்ச்சனா, பி. துவாரகா, ரி. மிதுஷா, எஸ். சபிதா, எஸ். நிவேதா, ரி. விதுஷா, ரி. நிவேதிகா, எஸ். குகதாரணி, பி. ஜசிக்கா, பி. ஜசிந்தா, ஆகியோர் கலந்து கொண்டனர்.


அடுத்து கனடா கிளைத் தலைவர் திரு. நாகமுத்து சாந்திநாதனின் உரை இடம் பெற்றது.

தொடர்ந்து திருமதி. சீதா தமிழ்ச்செல்வனின் உருவாக்கத்தில் மதுராலய நாட்டியப் பள்ளி மாணவர்களின் லயநாட்டியம் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் ரி. சப்தா, பி. மேனகா, எஸ். விதுசிகா, ரி. தர்சிகா, ஜே. நிவேதா, ஜே. சபிர்னா  ஆகியோர் பங்கு பற்றினர்.


பிரதம விருந்தினரான வைத்திய கலாநிதி சர்வலக்ஸ்மி ஜெகனின் உரையைத் தொடர்ந்து கணித, பொதுஅறிவுப் போட்டியில் பங்குபற்றிப் பரிசுபெற்ற மொன்றியல் மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம் பெற்றது.


இடைவேளையின் பின் திருமதி தாரகா சற்குணபாலனின் உருவாக்கத்தில் நாட்டிய ஸ்ருங்கா மாணவர்களின் சலங்கைகளின் ரீங்காரம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே. ஹனிஷா, கே. ஹம்ஷா, எஸ். மேரிடினுஜா, ஆர். நேருஜா, பி. ஜனித்தா, ஏ. பிரியங்கா, ஏ. சஞ்சிகா ஆகியோர் பங்குபற்றினர்.

அடுத்ததாகப் பலராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, திரு. பி. குகானந்தத்தின் நெறியாள்கையில் பிச்சை வேண்டாம் என்ற நாடகம் இடம் பெற்றது. இதில் பி. கனகலிங்கம், ரி. உமா, எஸ். குணபாலசிங்கம், ரி. குகானந்தம், எஸ். பேரின்பநாதன், ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். இந்த நாடகத்திற்கான கதை வசனத்தை எம். உதயன் எழுதியிருந்தார்.

அடுத்து மொன்றியல் மாணவர்களுக்கான கனடா ரீதியிலான பரிசளிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் திரு. இரவீந்திரன் இரத்தினசிங்கத்தின் நன்றியுரை இடம் பெற்றது. இறுதியாக ராம் சண்முகராஜாவின் உருவாக்கத்தில் நவரச மாலை இடம் பெற்றது. இதில் எஸ் ராம், எஸ். சங்கீத், ஏ. நெல்சன், ஏ. தினுசன், எஸ். கீர்த், கே. சரன், எஸ். இளங்கோ ஆகியோர் பங்கு  பற்றி சபையோரை மகிழ்வித்தனர்.


இந்த விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக திரு. கதிர் துரைசிங்கம் கடமையாற்றினார். அறிவிப்பு உதவியாளர்களாக திரு. நவரட்ணம் வசவதேவன், திருமதி ஸ்ரீதரன் குமுதா ஆகியோர் கடமையாற்றினர். மொன்றியல் விழா மிகவும் சிறப்பாக முடிவுற்றது. ரொறன்ரோ விழா செப்ரம்பர் மாதம் 2011ல் நடைபெற இருக்கின்றது.

No comments:

Post a Comment