Thursday, November 10, 2011

Soladi Un Manam Kaloodi? சொல்லடி உன்மனம் கல்லோடி?

சொல்லடி உன்மனம் கல்லோடி?

குரு அரவிந்த​ன்


(அத்தியாயம் - 1 - 6 September 2010ல் பார்க்கவும்.)

(அத்தியாயம் - 7 - 12 January 2011ல் பார்க்க‌வும்.)

(அத்தியாயம் - 13 - 17 April 2011ல் பார்க்க‌வும்.)

காட்சி - 18


போலீஸ் அதிகாரி இப்படி ஒரு கீழ்த்தரமான கேள்வியைக் கேட்பார் என்று மாலதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஐயோ, அப்படி ஒண்ணுமில்லை! கேட்கக்கூடாத வார்த்தைகள் என்பதால் பதறிப்போய் அவசரமாக மறுத்தாள்.

இந்தா பாரம்மா, புருசனை நடுவழியில் விட்டிட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப்போகிறாள் என்று இன்ஸ்பெக்டர் கோபாலனுக்கு யாரோ கம்பிளைன் எழுதிக் கொடுத்திருக்கிறாங்க. அதனாலேதான் உன்னை நான் விசாரிக்கிறேன். தப்பாய் எடுத்திடாதையம்மா!

இன்ஸ்பெக்டர் கோபாலனா?

அவளுக்குச் சட்டென்று புரிந்து போயிற்று!  அன்றொருநாள் அவள் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்தபோது, அவரை அவமானப்படுத்தி வெளியே அனுப்பியதற்கு இன்று காத்திருந்து என்னைப் பழி வாங்கப் பார்க்கிறாரா?

மாலதி நடந்த எல்லாவற்றையம் ஒன்றும் விடாமல் அவருக்கு விளக்கமாகச் சொன்னாள். அவர் எல்லாவற்றையும் பொறுமையாக அவர் கேட்டுவிட்டு, அவளுக்காகப் பரிதாபப்பட்டார்.

புரியுதம்மா, ஒரு குடும்பப் பெண்ணைப் பார்த்து இப்படி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாதுதான். எனக்கும் உன்னோட வயதில் ஒரு பெண் இருக்கிறா. நீ பயப்படாம பேயிட்டுவாம்மா. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கிறேன்!
அவள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்ப, அவரும்கூட வந்து, அவளை வண்டியில் ஏற்றிவிட்டார்.
மாலதிக்காகக் கவலையோடு பிளாட்போமில் காத்திருந்த கண்ணனுக்கு அவளைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.
யாரிடமாவது நடந்ததைச் சொல்லி ஆறதலடைய வேண்டும் என்று ஆவலோடு இருந்த மாலதி கண்ணனைக் கட்டதும் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

கதையைக் கேட்டுவிட்டுக் கண்ணன் ஏதாவது சொல்லுவான் என்று மாலதி எதிர் பார்த்தாள். ஆனால் கண்ணனோ அதைக்கேட்டுவிட்டு, தனக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல எதுவும் சொல்லாது மௌனம் சாதித்தான்.

கள்ளக் காதலனா..? என்று கண்ணனைப் பற்றிப் போலீஸ் அதிகாரி கேட்டது மட்டும், பயணம் முழவதும் அவள் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

சென்னை தொடர்வண்டி நிலையத்திற்கு கமலினியும் கணவரும் வந்திருந்தனர். மாலதி வெளியே வந்ததும் கமலினி ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள். ஆரணியைத் தூக்கி முத்தம் கொடுத்துக் கொண்டே கணவரை அறிமுகம் செய்து வைத்தாள்.
கண்ணன் பொதிகள் அடங்கிய வண்டியைத் தள்ளி வந்தான்.
வீடு வந்து சேர்ந்ததும் கண்ணன் பொதிகளை மேலே எடுத்து வந்தான். கண்ணனின் அறைக்கு எதிர்த்தால் போல இருந்த அறையை மாலதியும், ஆரணியும் தங்குவதற்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்.

ஆரணிக்குத் தற்காலகமாக பிரத்தியேக சிறுவர் பாடசாலையில் இடம் எடுத்திருந்தனர். எனவே தினமும் கண்ணன் வேலைக்குச் செல்லும்போது ஆரணியை அங்கே விட்டுவிட்டுச் செல்வான். பள்ளிக்கூடம் முடியம் நேரம் மாலதி அங்கு சென்று ஆரணியை அழைத்து வருவாள்.

ஒரு நாள் ஆரணியை ஏதோ காரணத்திற்காக மாலதி கண்டித்தபோது, அருகே வந்த, ஆரணியோடு படிக்கும் யூலியின் தாய்,
'நீங்கதான் கண்டிக்கிறீங்க, காலையிலே இவங்க அப்பா கூட்டிவரும்போது இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுப்பாரு" என்றாள்.

'அப்பாவா..?" மாலதிக்கு சுருக்கென்றது.

கண்ணனை ஆரணியின் அப்பா என்றே இவர்கள் முடிவெடுத்து விட்டார்களா?
நடந்தது என்ன என்று ஆரணியிடம் மெல்ல விசாரித்த போது, ஆரணி எதுவும் சொல்லாது மௌனம் சாதித்தாள்.

நான் ஒன்றும் சொல்ல மாட்டேன், என்ன நடந்தது என்று சொல்லம்மா! தாயின் வார்த்ததைகள் நம்பிக்கை ஊட்டவே ஆரணி வாய்திறந்து சொன்னாள்.

என்னோட கிளாஸில எல்லாருக்கும் அப்பா இருக்கிறாங்க, எனக்கு மட்டும் அப்பா இல்லையே என்று எனக்கு ஏக்கமாய் இருந்திச்சு. அதுதான் கண்ணன் அங்கிளை அப்பான்னு கூப்பிடட்டா என்று கேட்டேன்! முதல்ல அவர் நீங்க ஏசுவீங்க என்று சொல்லி மறுத்திட்டார். அவர் மறுத்ததும், நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாய் அழுதிட்டே இருந்தேன். அப்புறம்தான் அவர் என்னை சமாதானப் படுத்தி, அம்மாவிற்கு முன்னாலே அங்கிள் என்றுதான் கூப்பிடனும், ஸ்கூல்லை வேணுமென்றால் அப்பான்னு கூப்பிடலாம் என்று சொன்னார். ஆதனாலே ஸ்கூலை அவரை அப்பான்னுதான் கூப்பிடுவேன். எனக்கு அப்பா இல்லையே என்று யாரும் இப்போ என்னைக் கேலி செய்வதில்லை! என்று முகம் மலரச் சொன்னாள் ஆரணி.

முதலில் பயந்துபோன ஆரணி, தாயிடம் உண்மையைச் சொல்ல மறுத்தாலும்,     பக்குவமாய் மாலதி விசாரிக்கவே நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

மற்றவர்களிடம் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தப்பான அபிப்பிராயத்தை மாற்ற வேண்டுமானால், கண்ணனோடு அனுப்பாமல், காலையிலும் தானே ஆரணியைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துத் செல்லவேண்டும் என்று உடனேயே முடிவெடுத்துக் கொண்டாள் மாலதி.

காலையில் எழுந்து கண்ணன் ஆரணியை பாடசாலைக்குக் கூட்டிச் செல்லத் தயாரானான். மாலதி வேண்டாம் என்று மறுத்து, தானே ஆரணியை கூட்டிச் செல்வதாக சொன்னாள். கண்ணன் மறுப்புச் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டான்.

ஏதோ நடந்திருக்கிறது என்பது கமலினிக்குப் புரிந்து போயிற்று.
மாலதியின் விஸாவின் கால அவகாசத்தை நீடிக்க முடியுமா என்பதை அறிவதற்றகாக அவசரமாக விஸா அலுவலகத்திற்குப் போகவேண்டி யிருந்தது. வீட்டிலே யாருக்கும் வசதியில்லாதபடியால், மாலதியை அழைத்துச் செல்லும்படி குடும்ப நண்பனான சங்கரைக் கமலினி கேட்டிருந்தாள்.

விஸா அலுவலக் வேலையை முடித்துக் கொண்டு வரும் வழியில் காபி அருந்தி விட்டுப் போவோம் என்று சங்கர் கேட்கவே நாகரிகம் கருதி மாலதியும் ஒப்புக் கொண்டாள். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தனர்.
தற்செயலாகத் திரும்பிப் பார்த்தாள் மாலதி. சற்றுத்தள்ளி இருந்து மேசையில் யூலியும் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். மாலதியைக் கண்ட யூலி தகப்பனை அழைத்து வந்து ஆரணியின் அம்மா என்று மாலதியை அறிமுகம் செய்தாள்.
'எங்கே ஆரணி வரலையா?" என்ற கேட்டாள்.
மாலதிக்கு எதிரே உட்கார்ந்திருந்த சங்கரைப் பார்த்துவிட்டு, வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

ஆரணியின் அம்மாவின் பாய்பிரண்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் எதுவுமே சொல்லாமல், அறிமுகம் செய்யாமல் விட்டு விட்டாள். மறுநாள் ஆரணியிடம் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் சென்றதும், சங்கர் நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.
'மாலதி உன்னைப்பற்றி, உன் கடந்தகாலம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். கமலினி அனுப்பிய கமலினியோட குடும்பப்படத்திலே உன்னை முதன் முதலாய்ப் பார்த்தபோது எனக்கு உன்னை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. உன்னைத் திருமணம் செய்யலாமோ என்று நான் யோசித்து முடிவு எடுக்குமுன்பே எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு. இப்போ எனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இனியும் கால தாமதம் செய்ய எனக்கு விருப்பமில்லை. இவ் யூ டோன் மைன்ட், உன்னைத் திருமணம் செய்து உன்னை எனது வாழ்க்கைத் துணையாய் ஏற்றுக் கொள்ள நான் விரும்புகிறேன்." என்றான் சங்கர்.

காபி அருந்துவதற்றகாக தன்னை அங்கே அழைத்து வந்துவிட்டு இவன் இப்படிப் பேசுவான் என்று மாலதி எதிர்பார்க்கவில்லை.

எதிர்பாராமல், திடீரென சங்கர் கேட்டதால், அவள் அதிர்ச்சியில் இருக்கவே, அவளது மௌனத்தை சங்கர் சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும்  தொடர்ந்தான்.
'உன்னை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையுமில்லை மாலதி, ஆனால் குழந்தைதான் இப்போ பிரச்சனையாக இருக்கிறது..!"
ஏதோ சிந்தனையில் இருந்து மீண்ட மாலதி,
'குழந்தையா..? எந்தக் குழந்தை..?" என்று கேட்டாள்.

'ஆமா! உங்க குழந்தை ஆரணியைத்தான் சொல்கிறேன். அவளை யாரிடமாவது பொறுப்புக் கொடுத்துவிட்டோ, அல்லது குழந்தைகள் பராமரிபு;பு நிலையத்திலோ சேர்த்துவிட்டு வந்தால் சரி, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!" என்றான்.

இதுவரை மௌனமாய் இருந்த மாலதிக்கு சங்கரின் கதையைக் கேட்டதும் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
தன்னுடைய சுகத்திற்காக தாயும், குழந்தையும் பிரியவேண்டுமாம்!
சந்தையிலே பசுவிற்கும், கன்றுக்கும் தனித்தனியாக விலை பேசுவது போல, என்னதான் நாகரிகத்தில் முன்னேறிய நாட்டில் இருந்தாலும் இப்படியான விடயங்களில் இவனைப் போன்றவர்களின் குணம் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பதை புரிந்து கொண்டாள்!

'என்னை திருமணம் செய்யும் படி இப்ப நான் உங்களைக் கேட்டேனா..?" என்றாள் சற்று குரலை உயர்த்தி.

'இல்லை, வந்து ரவியும், கமலினியும் தான் கேட்டாங்க..!" சங்கர் மென்று விழுங்கினான்.

"அப்படியா மன்னிக்கணும், உங்க மேல தப்பில்லை! ஏற்கனவே இதுபற்றி நான் முடிவு எடுத்திட்டேன். நேரமாச்சு நாங்க போவோமா..?" சொல்லிக் கொண்டே மாலதி கிளம்புவதற்குத் தயாரானாள்.

ஒரு பெண் தனியவே வாழமுடியாதா? தனியவே இருக்க விடமாட்டார்களா? ஆரணியின் எதிர் காலம் இதனால் பாதிக்கப்படுமா? தனது எதிர்காலம் பற்றி மாலதி நிறையவே சிந்தித்தாள்.
மறுநாள் ஆரணியை பாடசாலையால் அழைத்து வரும்போது ஆரணி கேட்டாள்.

'அம்மா, உனக்கு பாய்பிரண்ட் இருக்கா..?"
மாலதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதறிப்போனாள். பெற்ற தாயைப் பார்த்து மகள் கேட்கக்கூடிய கேள்வியா இது?
'ஏனம்மா, ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்றாள்.
'இல்லை, யூலி நேற்று உங்களை பாய்பிரண்டோட கண்டதாகச் சொன்னாள்"

'ஓ.. அதுவா..?" மாலதிக்குப் புரிந்துவிட்டது.
இந்த நாட்டுக் கலாச்சாரம். வேறு ஒரு ஆணோடு அடிக்கடி ஒரு பெண்ணைக் கண்டால் இப்படித்தான் காதலன் என்று பேசுவார்கள். ஆனால் அதைத் தப்பு என்று சொல்ல மாட்டார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தம். யூலி சின்னக் குழந்தை. அன்றைய சூழ்நிலை அவளை அப்படி நினைக்கத் தூண்டியிருக்கிறது.

மாலதியின் தயக்கம், ஆரணியை மேலும் பேசத்தூண்டியது.
'ஐடோன் மைன்ட், இவ் யூ காவ் ஏ போய்பிரண்ட் மம்!" என்றாள் ஆரணி.
உனக்கு ஒரு காதலன் இருப்பதில், எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

ஒரு சின்னக் குழந்தை பேசும் பேச்சா இது?
வீடு வந்து சேர்ந்த மாலதிக்குத் தலை விறுவிறுத்தது. இங்கே வந்து ஆறு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் என் குழந்தையே என்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கி விட்டதா?

யோசனையோடு சோபாவில் உட்கார்ந்தாள். எதிர்காலம் பயங்கரமாய் அவளுக்குப் பூச்சாண்டி காட்டியது.

இந்த உலகம் எதையும் சொல்லும், எப்படியும் சொல்லும்! ஒரு நாள் சங்கரோடு வெளியே போய்வந்ததற்கே, என்னுடைய பாய்பிரண்ட் என்று சொன்ன உலகம் இது! இதே உலகம்தான் கண்ணனை ஆரணியின் அப்பா என்று சொன்னபோது தேவை இல்லாமல் கண்ணன்மேல் தான்கோபப்பட்டதை நினைத்துப் பார்த்தாள். உன்னுடைய மனதை எக்காரணம் கொண்டும் நோகடிக்க மாட்டேன் என்று தன்னைப் பார்த்துச் சொன்ன கண்ணனின் மனதை தேவையில்லாமல் தான் நோகடித்து விட்டதற்காக இப்போது மனம் வருந்தினாள். யார் என்ன சொன்னாலும் இனி கவலைப்படப் போவதில்லை என்று அந்தக்கணமே அவள் தீhமானித்துக் கொண்டாள்.

மறுநாள் காலை கண்ணன் வேலைக்குப் போவதற்குத் தயாராக வெளிக்கிட்டு வெளியே வந்தபோது, ஆரணி வாசலில் காத்திருந்தாள்.அங்கிள் நானும் உங்ககூட ஸ்கூலுக்கு வர்றேன், கூட்டிட்டுப் போறிங்களா? என்று ஓடி வந்தாள் ஆரணி.

இல்லை ஆரணி, அம்மாவிற்கு விருப்பமில்லாதது எதையும் நான் செய்யமாட்டேன். நீ அம்மாகூடவே போயிடு..! பிளீஸ்..! என்றான் கண்ணன்.
அம்மாதான் சொன்னா, உங்ககூடப் போகச்சொல்லி..! இல்லையாம்மா? அறை வாசலில் நின்ற மாலதியைப் பார்த்துக் கேட்டாள் ஆரணி.

ஆமா, அங்கிளோட போயிட்டுவா..! என்றாள் மாலதி.

கண்ணன் முகம் மலர மாலதியைப் பார்த்தான். ஆரணி ஓடிவந்து கிளம்புவதற்குத் தயாராக கண்ணனின் கையைப் பற்றிக் கொண்டாள்.
சரி போகலாம், அம்மாகிட்ட சொல்லிவிட்டு வா என்றான் கண்ணன்.
ஆரணி மீண்டும் ஓடிச்சென்று வாசலில் நின்ற மாலதியை இழுத்து எட்டி முத்தம் கொடுத்துவிட்டு, பாய் சொல்லிக்கொண்டு கண்ணனிடம் திரும்பவும் ஓடினாள்.

கண்ணன் உதட்டுக்குள் சிரித்தபடியே, ஆரணியின் கையைப் பக்குவமாய்ப் பற்றிக் கவனமாக அவளை அழைத்துச் சென்றான்.

அக்கறையோடு அவன் ஆரணியை அணைத்து, அழைத்துச் செல்வதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. ஆரணிக்கு ஏற்ற நல்ல துணை, இரண்டுபேரும் நல்லாய் ஒட்டிக் கொள்ளுறாங்க என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.காட்சி - 19

மாலதி கைக்கடிகாரத்தைப் பாhத்தாள். ஆறு மணி காட்டியது. கமலினி வீட்டிற்கு வரும் நேரம். ஆரணியையும், அவளையும் ஆரணியின் சிநேகிதி யூலியின் பாhத்டே பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தாள். கமலினியின் வருகைக்குப் பதிலாக அவளிடம் இருந்து தொலைபேசி அழைப்புத்தான் வந்திருந்தது. அலுவலகத்தில் அவசரவேலை இருப்பதாகவும் வருவதற்குச் சற்றுத் தாமதமாகும் என்றும், கண்ணனிடம் சொல்லியிருப்பதாகவும், அவன் வந்து அவர்களைப் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வான் என்றும் குறிப்பிட்டாள்.

கண்ணன் வந்து அவசரமாக உடை மாற்றி, நான் ரெடி நீங்க ரெடியா? என்றான்.
நாங்களும் ரெடி! என்று சொல்லிக் கொண்டே ஆரணி துள்ளிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தாள்.
மாலதி காபி போட்டு, கேக் துண்டுகளோடு கொண்டு வந்து நீட்டினாள்.
ஏது கேக்..? என்று கேட்டான் கண்ணன்.
நான் தான் செய்து பார்த்தேன். கொன்விக்ஸன் அடுப்பில் இலகுவாக செய்ய முடிகிறது, அது மட்டுமல்ல நல்ல பதமாகவும் வருகிறது என்றாள் மாலதி.

கண்ணன் ருசித்து, ரசித்துச் சாப்பிட்டு விட்டு நல்ல ருசியாய் இருக்கு என்று மாலதிக்குப் புகழாரம் சூட்ட மாலதி குளிர்ந்து போனாள்.
கண்ணன் அவர்களை அங்கே இறக்கிவிட்டு வருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் யூலியின் அப்பா அவனையும் உள்ளே வரும்படி விடாப்பிடியாக நின்று கொண்டதால், வேறுவழியில்லாமல் அவனும் உள்ளே சென்றான்.

உள்ளே மியூசிக் குறுப் ஒன்று இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. இளைஞன் ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.  யூலியின் அம்மாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அப்பா டேவிட் கெஞ்சம் வயது போனவராகத் தெரிந்தார். மனைவியின் வயதை ஒத்த பெண் ஒருத்தியை மூத்த மகள் மரீனா என்றும், காலம் சென்ற தனது முதல் மனைவியின் பெண் என்றும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மியூசிக் குறுப்பில் பாடிக் கொண்டிருக்கும் நிக்கி என்ற இளைஞன்தான் தனது காதலன் என்று மரீனா வெட்கப்பட்டுக் கொண்டே பெருமையாகக் குறிப்பிட்டாள்.
கண்ணன் திரும்பி அவனைப் பார்த்தான்.
என்ன பார்க்கிறீங்க, நிக்கி சின்னப் பையன் மாதிரி இருக்கிறானே என்றா? என்னைவிட அவனுக்கு வயது குறைவுதான். ஆனாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். வயசைப் பார்த்தா காதல் வரும்..? என்றாள் மரீனா.
யூ ரைட்..! என்றான் கண்ணன்.

அவனது ஆற்றாமையின் வெளிப்பாடுதான் அந்த வார்த்ததைகள் என்பதை மாலதி கவனிக்கத் தவறவில்லை.
பாடல் முடிந்ததும், ரொம்ப நல்லாப் பாடினாய் என்று மரீனா ஓடிச் சென்று அவனை வாழ்த்தி, கட்டியணைத்து முத்தம் கொடுத்து விட்டு இவர்களிடம் அழைத்து வந்து அவனையும் அறிமுகம் செய்து வைத்தாள். நிக்கி எல்லாரோடும் கலகலப்பாய் பேசினான்.

காதல் வயசைப் பார்த்து வருவதல்ல, மனசைப் பார்த்து வருவது! மாலதியின் மனதைப் படித்துப் பார்த்தவள் போல மரீனாவின் பதில் வந்ததால், மாலதியின் முகம் சட்டென்று சிவந்து போயிற்று.
ஹப்பிபார்த்டே பாட்டுப்பாடி, பார்த்டேகேக் வெட்டி, சிற்றுண்டி கொடுத்தார்கள். மதுபானம் கொண்டு வந்து நீட்டிய போது வேண்டாம் என்று கண்ணன் மறுத்து விட்டான். விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகு வர்த்தியின் மங்கிய வெளிச்சத்தில் சோடி சேர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நடனமாடத் தொடங்கினார்கள். இவர்கள் அவசரமாகக் கிளம்ப வேண்டும் என்று சொல்லி இரவு உணவை அவசரமாக முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

மாலதி குழம்பிப் போயிருந்தாள். வீடு திரும்பிய பின்னும் மரீனா சொன்ன வார்த்தைகள் அவளின் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததால், இரவு முழுதும் தூக்கமில்லாமல் தவித்தாள் மாலதி. கண்ணன் தன்மீது வைத்திருக்கும் காதலும் அந்தரகம் தான் என்பதையும், சமுதாயக் கட்டுப்பாடு மீறமுடியாமல் அவர்களுக்குக் கடிவாளம் போட்டு வைத்திருப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள். கென்டக்கியில் உள்ள நியூபோட் அக்கூறியத்திற்கு ஆரணியின் சினேகிதி யூலி குடும்பத்தோடு சென்று பார்த்தாகச் சொல்லவே தானும் போகவேண்டும் என்று ஆரணி ஆசைப்பட்டாள். பேச்சுவாக்கில் கமலினியிடம் ஆரணி சொன்னபோது, ரவி தான் கூட்டிக் கொண்டு போவதாகச் சொல்லவே எல்லோரும் அன்று காலை அடுத்த மாகாணமான கென்டக்கிக்கு கிளம்பிச் சென்றார்கள்.
வெளி அரங்கத்தில் சீருடை அணிந்த பாடசாலைப் பிள்ளைகளின் பான்ட் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நுழைவுச் சீட்டு எடுத்து உள்ளே சென்றார்கள். ரவியும் கமலினியும் முன்னே செல்ல ஆரணியின் கையைப் பற்றியபடி கண்ணன் ஒவ்வொன்றாக விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தான். ஆரணியைவிட மாலதிதான் அதிகம் ஆர்வத்தோடு ஒவ்வொரு நீர்த்தொட்டியையும் பார்த்துக் கொண்டு வந்தாள். கண்ணனுக்கு விலங்கியலில் ஆர்வம் இருந்ததால் ஆரணி கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தான். நான்கு கண்களோடு கூடிய மீன், தண்ணீரில் நடப்பதுபோலப் பாவனை செய்து காட்டும் மீன், ஆறடி துரம்வரை தண்ணீரைத் துப்பித் தனது இரையைப் பிடிக்கும் மீன் இப்படிப் பலவிதமான நீரில் வாழும் அதிசயப் பிராணிகளைப் பார்த்தார்கள். கண்ணன் இவற்றைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறான் என்பதை, அவன் ஆரணிக்கு அவ்வப்போது விளக்கம் சொல்லிக் கொண்டு வருவதை நேரில் பார்த்துப் புரிந்து கொண்ட மாலதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

கடலிலும், நன்னீரிலும் வாழும் அனேகமான உயிரினங்களை எல்லாம் அங்கே நீர்த்தொட்டிகளில், நேரேபார்ப்பது போல மிகவும் அழகாகக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். சிலவகையான நண்டுகள், நட்சத்திர மீன்கள் போன்றவற்றை வருடிப் பார்க்கவும், அவற்றைக் கையிலே வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கவும் வசதிகள் செய்திருந்தனர்.
கடல் ஆமைகள் விரைவாக அழிந்து கொண்டு போவதற்கு என்ன காரணம் என்று, வேறு ஒரு பகுதியில் விரிவான விளக்கம் கொடுத்திருந்தார்கள். ராட்சதபசுபிக் ஒக்டோபஸ் முதல் சின்னஞ் சிறிய ஜெலிபிஸ் வரை அங்கே காணக்கூடியதாக இருந்தது.

கடற்குதிரைகள் உள்ள தொட்டியை ஆரணியால் சரியாகப் பார்க்க முடியாமல் போகவே அவள் கண்ணனிடம் முறையிட்டாள். கண்ணன் அவளை உயரத் தூக்கிக் காட்டினான். ஆரணி வியப்போடு அவற்றைப் பார்த்தாள்.
கடற் குதிரைக்குப் பாக்கட் இருக்கா அங்கிள்..? என்று ஆரணி ஆச்சரியமாய் கேட்டாள்.
ஆமா! கங்காரு மாதிரி இதற்கும் வயிற்றிலே ஒரு சின்னப்பை இருக்கிறது. இங்கே என்ன அதிசயம் என்றால் பெண் கடற்குதிரை முட்டையிட, ஆண்தான் பாவம் அதைச் சேகரித்து தனது பையிலே வைத்துச் சுமந்து கொண்டு திரிகிறது. என்றான் கண்ணன்.
அப்படின்னா, உங்களைப் போலவா அங்கிள்..? என்ற ஆரணி கண்ணனின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு திரும்பி மாலதியை நக்கலாகப் பார்த்தாள்.

ஆமா, என்னைப் போலத்தான், ஆனால் கடற் குதிரையில முட்டையிட்ட பெண்ணும், சுமக்கிற ஆணோட அன்பாய் இருக்குமாம்! சின்னக் குழந்தைக்குக் கதை சொல்வது போலக் கொஞ்சம் உரக்கவே சொன்னான் கண்ணன்.
கண்ணன் வேண்டும் என்றே தன்னைச் சீண்டிப் பார்க்கிறான் என்பது மாலதிக்கப் புரிந்து போகவே, சொண்டுக்குள் சிரித்துக் கொண்டு,
இப்போ அவளைச் சுமக்கச் சொல்லி நான் உங்ககிட்ட கேட்டேனா..? பொய்யாய் கோபம் காட்டினாள்.

நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்தச் செல்லம் எனக்கு என்றுமே சுமையாய் இல்லை, என்னம்மா..? என்று சொல்லி ஆரணியைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் கண்ணன்.
ஆரணி மீது அவன் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தைப் பார்த்து மாலதி நெகிழ்ந்து போனாள். விஸா முடிந்து திரும்பி ஊருக்குப் போகும்போது இவன் அவள் பிரிவை எப்படித்தான் தாங்கிக் கொள்வானோ என்றும் எண்ணிப் பார்த்தாள்.

தண்ணீருக்கு அடியில் உள்ள கண்ணாடிக் குகையைக் கடந்து போகும் போது தண்ணீருக்கு அடியில் அவர்களும் இருப்பது போன்ற வித்தியாசமான உணர்வை அந்தக் குகையின் அமைப்பு அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆறு முதல் பத்தடி வரை நீளமான சுறாக்கள் தலைக்குமேலால் சுற்றிச் சுழன்று நீந்திக் கொண்டிருந்தன.  திடீரென பெரிய சுறா ஒன்று வாயைப் பிளந்து கொண்டு வந்து கண்ணாடியில் வேகமாக முட்டியபோது, கண்ணாடிக் கரையில் நடந்து வந்த மாலதி, இதைச் சற்றும் எதிர் பார்க்காததால் பயந்துபோய் கண்ணை மூடிக்கொண்டு வீல் என்று கத்தித் தடுமாறி, அருகே நடந்து வந்த கண்ணனின் தோளை இறுகப் பற்றி அவனோடு ஒட்டிக் கொண்டாள். மறுகணம் சுற்றிவர நடந்து வந்த எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும் வெட்கப்பட்டு சட்டென்று கைகளை விலக்கிக் கொண்டு ஸாரி என்றாள்.
பயந்துபோன அவள், கண்ணனை அணைத்தபடி மூச்சுவாங்கியதில், அவளது சிறியமார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியதை அவனால் உணரமுடிந்தது.
ஆர் யூ ஓகே..? என்ற கண்ணன், ஆதரவாய் அவள் கைகளைப் பற்றி, நிதானமாக அவளை ஆசுவாசப் படுத்தினான்.

அவள் பதட்டம் மெல்ல மெல்லத் தணிந்ததும், ஐ.. ம்.. ஓ.கே! என்று தலை அசைத்து, தனது கைகளை அவனிடம் இருந்து மெல்ல விடுவித்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
பென்குவின் காட்சி நடந்தபோது கண்ணனுக்கும் மாலதிக்கும் நடுவே உட்கார்ந்து, இருவரின் கைகளையும் பற்றிப் பிடித்தவண்ணம் ஆரணி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பென்குவின்கள் ஒன்றின்பின் ஒன்றாக வந்து தண்ணீரில் குதித்து, அடிமட்டம் வரை மூழ்கிச் சென்று திரும்பி வரும் காட்சி, கண்ணாடிக்குள்ளல்  பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. ஆர்வமிகுதியால் கரகோசம் செய்தபடி அடிக்கடி ஆரணி எழுந்து செல்லவே இருவரும் தனித்து விடப்பட்டனர். இளம் பெற்றோர்கள் சிலர் ஒருவரை ஒருவர் அணைத்தபடியும், சிலர் கைகோத்தபடியும் தங்கள் குழந்தைகளுடன் சிரித்து விளையாடி மகிழ்வதைக் கண்ணன் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணனின் செய்கையில் இருந்து அவனது மனநிலையை, ஏக்கத்தை மாலதியால் புரிந்து கொள்ள முடிந்தாலும், அதைத் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் பாவம் கண்ணன் என்று அவனுக்காக அவள் மனம் பரிதாபப்பட்டது.
ஆரணி குட்நைட் சொல்லி படுத்தபடி, அந்தக் கடற்குதிரைகள் பற்றியும், பெரிய சுறாக்களைப் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தவள், அப்படியே மெல்ல அயர்ந்து தூங்கிப் போயிருந்தாள்.

ஆரணியின் கட்டிலுக்கு அருகே உள்ள கட்டிலில் ஒருக்களித்துப் படுத்தபடி தூக்கம் வராமல் சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள் மாலதி. பகலில் நடந்த அந்தச் சம்பவம் அவளை நிறையவே பாதித்திருந்தது. தண்ணீருக்கடியில் சுறாவைக் கண்டு பயந்தபோது, தான் ஏன் கண்ணனைக் கட்டிப் பிடித்தேன் என்பது இதுவரை அவளுக்கும் புரியாத புதிராகவே இருந்தது. ஒருவேளை காலமெல்லாம் கண்ணன்தான் தனக்குத் துணையாக, பாதுகாப்பாக வரக்கூடியவன் என்று தன்னிச்சையாக அவளது உள்மனம் முடிவு எடுத்து விட்டதால்தான், இப்படி எல்லாம் நடந்ததோ என்று நினைத்தாள்.
காட்சி - 20

ஆரணியின் பாடசாலையில் இருந்து மாலதியை உடனே வரும்படி தொலைபேசியில் செய்தி வந்தது. என்னவோ ஏதோ என்று பயந்துபோன மாலதி டாக்ஸி ஒன்றை எடுத்துக் கொண்டு உடனே அங்கே சென்றாள்.
ஆரணி சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்ததால் உடம்பில் அலேஜிக் என்று சொன்னார்கள். பீனட்பாட்டரும் கிறாக்கரும் சாப்பிட்டதாக ஆரணி சொன்னாள். கம்பளிப்பூச்சி பட்டதுபோல ஆங்காங்கே உடம்பு தடித்து சிவந்து போயிருந்தது.

ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வது நல்லது என்று தெரிவிக்கவே மாலதி ஒரு டாக்சியில் ஆரணியை மருத்துவ மனைக்கு அழைத்து வந்தாள். டாக்டர் உடனடியாக பரிசோதித்துவிட்டு நிலக் கடலையில் செய்த பட்டர்தான் காரணம் என்றுகூறி, அதற்கு மருந்து, மாத்திரை களும் கொடுத்தார். கொடுத்த மருந்து பலன் தருகிறதா என்று பார்ப்பதற்காக, ஒப்சவேசன் அறையில் சிலமணி நேரம் தங்கி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்.

மாலதி கமலினியை அழைத்து, பயப்படும் படியாக ஒன்றுமில்லை என்று நடந்த விடயத்தைச் சொன்னாள். மூன்று மணிநேரம் கழித்து டாக்டர் வந்து பார்த்துவிட்டு, பயப்பட ஒன்றுமில்லை, வீட்டிற்குப் போகலாம் என்றார்.
மாலதி ஆரணியைக் கூட்டிக் கொண்ட வரும்போது, ஒரு நார்ஸ் அவர்களைத் தொடர்ந்து வேகமாகவந்து அவளது பெயர் சொல்லி அழைத்தாள்.
மாலதி நின்று நிதானமாய் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.
'உங்க பெயர் மாலதிதானே..?" என்றாள் அருகே வந்த நார்ஸ்.
'ஆமா..!" என்றாள் மாலதி.
'பன்னிரண்டாம் நம்பர் அறையிலே இருக்கும் பேஸன்ட் உங்களைப் பார்க்கணும் என்று ஒரேயடியாய்ப் பிடிவாதம் பிடிக்கிறார். என்கூட கொஞ்சம் வர்றீங்களா?"
'பேஸன்ட்டா.? எனக்கு இங்கே யாரையும் தெரியாதே!"
'அவருக்கு உங்களைத் தெரியுமாம், பிளீஸ் கொஞ்சம் வாங்களேன்!"
நார்ஸ் வலிந்து கேட்கவே, ஆரணியை நிற்கச் சொல்லிவிட்டு அவளுடன் சென்றாள்.
கட்டிலில் வெள்ளைத் துணிகளுக்கிடையே ஒரு பேஸன்ட் படுத்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. உடம்பில் பொருத்தப்பட்ட மெல்லிய குழாய்கள்தான் காட்டிக் கொடுத்தன. அருகே சென்று குனிந்து அவரைப் பார்த்தாள்.
தாடியும் மீசையுமாய் அவளுக்கு யார் என்றே புரியவில்லை.
'நீங்க மாலதி தானே? என்னைத் தெரிகிறதா?" என்று நோயாளி அனுங்கினார்.
மாலதி 'தெரியவில்லை' என்று தலை அசைத்தாள்.
'நான்தான் காந்தன். காந்தரூபன்! கண்ணணோட கிளாஸ்மேட், ஊரிலே ஒரு பள்ளிகூடத்தில்தான் நாங்க ஒன்றாய்ப் படிச்சோம், ஞாபகம் இருக்கா?"
'ஆமா, காந்தன்! கண்ணனோட ஃபிறென்ட்! இப்போ புரியுது. என்னாச்சு உங்களுக்கு?" மாலதி படபடத்தாள்.

'எல்லாமே முடிஞ்சு போச்சு, மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று அமெரிக்கா வந்தேன். படிச்சு நல்ல வேலையும் கிடைச்சுது. ஆனால் விதி யாரை விட்டது, இப்போ எல்லாவற்றையும் இழந்திட்டு நிக்கிறேன்!"
'என்ன சொல்றீங்க காந்தன், ஏன் இந்த நிலைமை உங்களுக்கு?"
'கான்ஸர்! கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்து விட்டது. டாக்டர் எனக்கு நாள் குறிச்சிட்டார். கடவுள் மேல பாரத்தைப் போட்டிருக்கிறேன்" என்றான் விரக்தியோடு.

'கடவுளே!" என்றாள் மாலதி தன்னை மறந்து.
'உடம்பு வலியைவிட மனசிலே தான் வலி அதிகம், மனசிலே இருக்கிறதை எல்லாம் என்னைக்காவது ஒருநாள் கொட்டிடணும் என்று தான் இருந்தேன். நடந்ததை உங்களுக்கு எழுத முடியலை. நல்ல காலம் நீங்களே இங்கே வந்திட்டீங்க!"
'ஏன்? அப்படி என்ன மனசிலே பாரம்?"
'இப்பவாவது மனம் திறந்து சொன்னால்தான் இத்தனை வருசமாய் இருக்கிற இந்தப் பாரம் நீங்கும் மாலதி.  உங்களுடைய இந்தக் கோலத்திற்கு நாங்க தான் காரணம். அந்த சம்பவம் ரொம்ப நாளாய் மனசை அரிச்சிட்டே இருக்கு!"
'நாங்க என்றால்..?" மாலதி ஆர்வ மிகுதியால் கேட்டாள்.
'நாங்க என்றால் தெரியும்தானே, படிக்கிற காலத்தில ஊரிலே ஒன்றாய் திரிவோமே, நான், கண்ணன், சிவம், குமார்..!"
'அதற்கென்ன இப்போ..?"
'எங்க கூட்டத்தைக் கண்டாலே எல்லோரும் ஓரமாய் ஒதுங்கிப் போவாங்க..!"
'ஆமா, தெரியும்.. சொல்லுங்க..!"
'உங்க கணவன் ராஜன் விபத்திலே இறந்திட்டான் என்றுதானே நீங்க நம்பிக் கொண்டிருக்கிறீங்க, உண்மையிலே அது விபத்தில்லை!"
'அப்போ..?" சந்தேகம் கலந்த வியப்போடு கேட்டாள்.
'அது ஒரு கொலை!" என்றான் காந்தன்.
'கொலையா.. என்ன சொல்லுறீங்க..?" மாலதி அதிர்ந்தாள்.
'ஆமா, அது ஒரு கொலைதான். நாங்க அதை ஒருவருக்கும் தெரியாமல் உடனே மறைச்சிட்டோம். எதுசரி, எதுபிழை என்று புரியாத இளமைப்பருவம். மறைத்ததாலே பொலீஸிற்க்கோ, ஊருக்கோ தெரியாமல் போயிடிச்சு.  ஆனால் மனச் சாட்சியிடம் இருந்து மறைக்க முடியலை! அதுதான் இத்தனை வருடமாய் என்னை வேதனைப் படுத்திக் கொண்டே இருக்கிறது."

'இவன் ஏதேதோ சொல்லி என்னை ஏன் குழப்புகிறான்..?' மாலதி அதிர்ச்சியில் உறைந்துபோய் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'நைட்மயர்! அந்த சம்பவத்திற்குப் பிறகு கண்ணைத் திறந்தலும், மூடினாலும் ராஜனின் முகம்தான் கண்ணுக்குள் நிற்கிறது! ஊரைவிட்டு இங்கே ஓடி  வந்தாலும் தூக்மில்லாத எத்தனையோ இரவுகள்! எதையுமே என்னால் மறக்கமுடியலை! ஊரிலேயே குடிப்பேன், இங்கே வந்ததும் இன்னும் மோசமாச்சு! லிவர் எரிஞ்சு போச்சு என்று சொன்னாங்க...!" சொல்லிக் கொண்டே 'கக்கக்' என்று இருமினார்.
'நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க, நான் அப்புறம் பேசிறேன்..!" அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமே என்று மாலதி தயங்கினாள்.
'இல்லை கொஞ்சம் இருங்க, தப்பு செய்தவன் நிம்மதியாய் வாழமுடியாது என்பதற்கு நான் நல்ல உதாரணம். இப்போ நடந்த எல்லாவற்றையும் உங்ககிட்ட சொன்னபின்தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கு, இனிமேல் நான் நிம்மதியாய் தூங்கலாம்!"

மாலதியின் சிந்தனை எல்லாம் கண்ணனைச் சுற்றியே இருந்தது.
'கண்ணனும் உங்க கூ.. ட..?" அவள் வாய்திறந்து கண்ணனைப் பற்றி ஏதோ விசாரிக்க முற்படவே, திடீரென டாக்டர் உள்ளே வந்தார்.
'எத்தனை தடவை சொல்லிட்டேன், நோயாளியைத் தொந்தரவு செய்ய வேண்டாம், ஒரு வாட்டி சொன்னா புரியாதா?" என்று நர்ஸிடம் எரிந்து விழுந்தார்.

பயந்துபோன நார்ஸ், மாலதியைப் பரிதாபமாய்த் திரும்பிப் பார்த்தாள்.
புரிந்து கொண்ட மாலதி தன்னிச்சையாக வெளியே வந்தாள்.
ராஜனின் மரணம் ஒரு கொலையா? கண்ணனுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்புண்டா? அப்படி என்றால் கண்ணனும் ஒரு கொலையாளியா? கொலை செய்யத் துணியுமளவிற்கு ராஜனோடு இவர்களுக்கு என்ன மனஸ்தாபம்..?

கண்ணனைப் பற்றி இத்தனை காலமும் மெல்ல மெல்ல கட்டி எழுப்பியிதிருந்த நல்ல பக்கங்கள் எல்லாம் பட்டென்று உடைந்து சிதறிவிட்டது போன்ற வெறுமையை உணர்ந்தாள் மாலதி.
ஆரணியைக் அழைத்துக் கொண்டு விடுவிடுவென்று வீட்டிற்கு வந்தாள். காந்தன் சொன்னதைக் கேள்விப்பட்டதில் இருந்து மனசு நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

காந்தன் சொன்னதை வைத்துக் கொண்டு கண்ணனைப் பற்றித் தப்புக் கணக்குப்போட அவளது மனம் இடம் கொடுக்க மறுத்தது. அவனிடம் இருந்து முழுவிபரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வெறி பிடித்துக் கொள்ளவே, ஆரணியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளும்படி கமலினியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் மருத்துவ மனைக்கு விரைந்து சென்றாள்.

உள்ளே டாக்டர் இருக்கக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டு சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
'என்ன, என்னாச்சு..?" நர்ஸிடம் விசாரித்தாள்.
'நீங்க அவருக்கு உறவா..?"
'இல்லை, தெரிஞ்சவங்க..!"
'உங்ககூடத்தான் அவர் கடைசியாய்ப் பேசினாரு, திடீரென நோய் கொஞ்சம் தீவிரமாயிடிச்சு. டாக்டர் திரும்பவும் வந்து பார்த்திட்டு, உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போகச் சொன்னார். கொஞ்ச நேரத்திற்குள் எல்லாமே குழப்பமாயிடிச்சு! என்றாள் நர்ஸ்.

'அப்படியா, இப்போ அவர் எங்கே..?"
'டூ லேட் பார் கிம், அவரை எங்களாலே காப்பாற்ற முடியலை!"
மர்மக் கதையில் கொலையாளி யார் என்ற முடிவு தெரியாமல் தவிக்கும் வாசகி போல, மாலதி சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் அங்கே நின்றாள்!
'ஐயாம் ஸாரி!" என்று அனுதாபம் சொல்லிவிட்டு நார்ஸ் அப்பால் நகர்ந்தாள்.

மனசிலே இருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்ட நிம்மதியில் தவித்துக் கொண்டிருந்த சீவன் பிரிந்துவிட்டதா? காந்தன் சொன்னதெல்லாம் உண்மையா? 
காந்தன் கொடுத்த அதிர்ச்சியில் குழம்பிப்போன மாலதி, விடை தெரியாக் கேள்விக் குறியோடு, பேய் அறைந்தவள் போல, சோர்ந்துபோய் வீடு திரும்பினாள்.

கொஞ்ச நாட்களாகச் சந்தோசமாக இருந்த மாலதியை மீண்டும் ஏதோ சோகம் பிடித்துக் கொண்டுவிட்டதை அந்த வீட்டில் எல்லோரும் அவதானித்தார்கள். ஏதோ குழப்பத்தில் மாலதி இருக்கிறாள் என்பது கமலினிக்குப் புரிந்து போயிற்று. எனவே தனிமையில் இருந்தபோது கமலினி வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

'ஒன்றுமில்லை" என்று சொல்லி மாலதி சமாளிக்கப் பார்த்தாள்.
'அப்போ இங்கே எங்களோடு தங்கி இருக்க உனக்குப் பிடிக்கலையா?"
'இல்லை, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. மனசுதான் சரியில்லை..?"
'ஏன் கண்ணன் ஏதாவது சொன்னானா?"
'இல்லை!" என்று ஏதோ யோசனையில் தலை அசைத்தாள்.
'இல்லை என்றால், வேறு என்ன பிரச்சினை..?"
'கமலி, கண்ணனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்..?" என்றாள் மாலதி திடீரென்று!

'கண்ணனைப்பற்றியா, என்னுடைய தம்பி கண்ணனைப் பற்றியா? அவனைப் போல ஒரு வடிகட்டின முட்டாளை நான் இதுவரை காணவில்லை. இப்படி ஒரு பைத்தியம் எனக்குப் போய் தம்பியாய் பிறந்தானே!" என்றதும், மாலதிக்கு முகம் சிவந்தது.

'ஏன் கண்ணனை அப்படித் திட்டுறாய்..?" என்றாள் மாலதி.
'அவனைத் திட்டாமல் என்னடி செய்யச் சொல்கிறாய்? காதல், காதல் என்று தன்னையே அழிச்சுக்கிட்டிருக்கிறதை என்னாலே பார்த்து சகிக்க முடியலையடி! வேண்டாம், மனசிலே இரக்கமே இல்லாத உன்னோட இதைப்பற்றிப் பேசினால் நீயும், நானும் தேவையில்லாமல் மனஸ்தாபப்பட வேண்டிவரும்."

'இரக்கமே இல்லாதவள்' என்று கமலினி அவளைக் குத்திக் காட்டியதும், மாலதி குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
அவள் அழுவாள் என்று கமலினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அருகே வந்து சோபாவில் அமர்ந்து அவளது கன்னத்தைத் தொட்டு நிமிர்த்தினாள்.
'மாலு, ஐ'ம் ஸாரி..!"

மாலதி எதுவும் சொல்லாமல், விம்மிக் கொண்டே கமலியை பரிதாபமாய் ஏறிட்டுப் பார்த்தாள். விழி ஓரம் கண்ணீர்த் துளி முட்டி நின்றது.
'தினமும் கண்ணன் படுற அவஸ்தையை என்னாலே பார்க்க முடியலையடி, அதுதான், மனசு தாங்கமுடியாமல் அப்படி சொல்லிட்டேன்.

ஐ'ம் ஸாரி!" என்று மறுபடியும் சமாதானம் சொன்னாள் கமலி.
மாலதி கண்களைத் துடைத்துவிட்டு சிரித்துச் சமாளிக்க முயன்றாள். முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. அவளே பேசட்டும் என்று கமலி காத்திருந்தாள்.
'என்னை என்ன செய்யச் சொல்கிறாய் கமலி..?" மாலதியின் குரல் இயலாமையின் வெளிப்பாடாய் உடைந்து வந்தது.
'வேண்டாம் மாலதி, நாங்க வேறு ஏதாவது பேசுவோமே!"

'நீ என்ன கேட்கப் போகிறாய் என்று எனக்குப் புரியுது கமலி, என்னுடைய கல்யாணத்தைப் பற்றித்தானே கேட்கப் போகிறாய்? ஆனால்..!
'மாலு..! ப்ளீஸ்.. வேண்டாம்!"

'அதற்கு முதல் எனக்கு வேறு ஒருவிடயம் தெரிஞ்சாகணும்!" என்றாள் மாலதி தீhமானமாக!காட்சி - 21

கொஞ்ச நாட்களாகச் சந்தோசமாக இருந்த மாலதியை மீண்டும் ஏதோ சோகம் பிடித்துக் கொண்டுவிட்டதை அந்த வீட்டில் எல்லோரும் அவதானித்தார்கள். ஏதோ குழப்பத்தில் மாலதி இருக்கிறாள் என்பது கமலினிக்குப் புரிந்து போயிற்று. எனவே தனிமையில் இருந்தபோது கமலினி வாய் விட்டே கேட்டுவிட்டாள்.
'ஒன்றுமில்லை" என்று சொல்லி மாலதி சமாளிக்கப் பார்த்தாள்.
'அப்போ இங்கே எங்களோடு தங்கி இருக்க உனக்குப் பிடிக்கலையா?"
'இல்லை, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. மனசுதான் சரியில்லை..?"
'ஏன் கண்ணன் ஏதாவது சொன்னானா?"
'இல்லை!" என்று ஏதோ யோசனையில் தலை அசைத்தாள்.
'இல்லை என்றால், வேறு என்ன பிரச்சினை..?"

'கமலி, கண்ணனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்..?" என்றாள் மாலதி திடீரென்று!
'கண்ணனைப்பற்றியா, என்னுடைய தம்பி கண்ணனைப் பற்றியா? அவனைப் போல ஒரு வடிகட்டின முட்டாளை நான் இதுவரை காணவில்லை. இப்படி ஒரு பைத்தியம் எனக்குப் போய் தம்பியாய் பிறந்தானே!" என்றாள்.
மாலதிக்கு முகம் சிவந்தது.

'ஏன் அப்படித் திட்டுறாய்..?"
'அவனைத் திட்டாமல் என்னடி செய்யச் சொல்கிறாய்? காதல், காதல் என்று தன்னையே அழிச்சுக்கிட்டிருக்கிறதை என்னாலே பார்த்து சகிக்க முடியலையடி! வேண்டாம், மனசிலே இரக்கமே இல்லாத உன்னோட இதைப்பற்றிப் பேசினால் நீயும், நானும் தேவையில்லாமல் மனஸ்தாபப்பட வேண்டிவரும்."

'இரக்கமே இல்லாதவள்' என்று கமலினி அவளைக் குத்திக் காட்டியதும், மாலதி குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
அவள் அழுவாள் என்று கமலினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அருகே வந்து சோபாவில் அமர்ந்து அவளது கன்னத்தைத் தொட்டு நிமிர்த்தினாள்.
'மாலு, ஐ'ம் ஸாரி..!"

மாலதி எதுவும் சொல்லாமல், விம்மிக் கொண்டே கமலியை ஏறிட்டுப் பரிதாபமாய் பார்த்தாள். விழி ஓரம் கண்ணீர்த் துளி முட்டி நின்றது.
'தினமும் கண்ணன் படுற அவஸ்தையை என்னாலே பார்க்க முடியலையடி, அதுதான், மனசு தாங்கமுடியாமல் அப்படி சொல்லிட்டேன். ஐ'ம் ஸாரி!" என்று மறுபடியும் சமாதானம் சொன்னாள் கமலி.
மாலதி கண்களைத் துடைத்துவிட்டு சிரிக்க முயன்றாள். முகம் தெளிந்திருந்தது. அவளே பேசட்டும் என்று கமலி காத்திருந்தாள்.
'என்னை என்ன செய்யச் சொல்கிறாய் கமலி..?" மாலதியின் குரல் இயலாமையின் வெளிப்பாடாய் உடைந்து வந்தது.

'வேண்டாம் மாலதி, நாங்க வேறு ஏதாவது பேசுவோமே!"
'உன்னோட விருப்பம் என்ன என்று எனக்குப் புரியுது கமலி, என்னுடைய கல்யாணத்தைப் பற்றித்தானே கேட்கப் போகிறாய்? ஆனால்..!
'மாலு..! ப்ளீஸ்.. வேண்டாம்!"

'அதற்கு முதல் எனக்கு வேறு ஒருவிடயம் தெரிஞ்சாகணும்!"
'என்ன? தாராளமாய்க் கேள், செல்றேன்."
'நான் அதுபற்றிக் கண்ணனோடதான் பேசணும்."
'எதுவாய் இருந்தல் என்ன, உன்னடைய முடிவு நல்ல முடிவாய் இருந்தால் சரி!" என்றாள் கமலினி.

அன்று சாயந்தரம் கண்ணனின் வருகைக்காகப் பொறுமையோடு ஹாலில் காத்திருந்தாள் மாலதி.

'நீ என்னைவிட்டு எங்கேயும் போயிடாதே மாலதி, உன்னுடைய சிரித்த முகத்தை எட்ட இருந்து பார்த்துக் கொண்டே மீதிக் காலத்தைக் கழிச்சிடுவேன்" என்றானே! எவ்வளவு பண்போடு, நகரிகமாய் நடந்து கொண்ட கண்ணன் இப்படிச் செய்திருப்பானா? அவளால் நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாமல் இருந்தது.

கண்ணன் வேலையால் சீக்கிரமே வந்திருந்தான். வீட்டிலே யாரும் இல்லை. ஆரணி அறைக்குள் பொம்மை விளையாடிக் கொண்டிருந்தாள். மாலதி காபி போட்டுக் கொண்டு வந்து கண்ணனுக்குக் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள். கண்ணன் காபி அருந்தி முடிக்கு மட்டும் காத்திருந்து கோப்பையைத் திரும்ப வாங்கிக் கொண்ட மாலதி,
'கண்ணா உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே!" என்றாள்.

கண்ணன் விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். கொஞ்ச நாட்களாக மாலதி ஒரே குழப்பத்தில் இருப்பதை அவனும் அவதானித்திருந்தான்.
'நினைச்சேன், சொல்லு மாலதி..!" என்றான்.
'உன்னோட கூட்டாளியை நேற்று சந்தித்தேன்!"
'என்னுடைய கூட்டாளியா..? யாரது?" என்றான்.

'காந்தரூபன்! உன்னோட ஒன்றாய்ப் படித்தானே காந்தன், ஞாபகமிருக்கா..?"
'காந்தனா? ஆமா, இங்கே அமெரிக்காவில் தான் இருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி இருக்கிறான், என்ன சொன்னான்..?"

காந்தனைப் பற்றிக் குறிப்பிட்டபோது கண்ணனின் முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று மாலதி அவதானித்தாள். அவள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் கண்ணனின் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.
'நிறையவே சொன்னான்! அதைப்பற்றித்தான் உன்கிட்ட கேட்கணும்!"
'அப்படியா? உன்கிட்ட நான் எதையுமே மறைச்சதில்லை மாலதி, என்ன கேட்கணும்? சொல்லு..!" என்றான் கண்ணன்.

மாலதி எப்படிக் கேட்பது என்று ஒரு கணம் தயங்கினாள். எப்படியும் உண்மை தெரிந்து ஆகணும் என்பதால், தன்னை சுதாரித்துக் கொண்டு கண்ணனின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
'ராஜனுடைய மரணம் ஒரு விபத்தா..?"
நிலை குலைந்த கண்ணன் மாலதியைத் தீர்க்கமாய்ப் பார்த்தான். அவனது பதட்டமே அவனைக் காட்டிக் கொடுத்தது.
'மாலதி நீ என்ன கேட்கிறா..ய்..?" வார்த்தைகள் விக்கி, விக்கி வெளி வந்தன.
'ராஜனுடைய மரணம் ஒரு விபத்தா இல்லை கொலையா என்று எனக்குத் தெரிஞ்சாகணும்!" என்றாள் மாலதி.

மாலதியின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்த கண்ணன், எதுவும் பேசாமல் கண்ணை மூடி, எல்லாம் இவளுக்குத் தெரிந்து விட்டது, இனி மறைப்பதில் பலனில்லை என்பதுபோலப் பெருமூச்சு விட்டான்.

கடந்த காலம் பற்றிய போராட்டம் அவன் மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மாலதி புரிந்து கொண்டாள்.காட்சி - 22

நாங்க அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்பிறோம். என்றாள் மாலதி.
தெரியும்! ஆரணி சொன்னாள். என்றான் கண்ணன்.
ஆரணி தான் பாவம், உன்னைப் பிரிஞ்சு எப்படித்தான் சமாளிக்கப் போறாளோ தெரியலை!

அவளுக்கென்ன சமாளிப்பாள். உன்னோட மகளாச்சே! குத்திக் காட்டினான் கண்ணன்.

மாலதி எதுவும் பேசாது சிறிது நேரம் மௌனமாய் இருந்தாள். கண்ணன் பிடிவாதக்காரன், எந்தக் காரணம் கொண்டும் தன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான் என்ற எண்ணம் கொஞ்ச நாளாக அவனது நடவடிக்கைகளில் இருந்து அவளுக்குள் பதிந்திருந்தது. 
கண்ணா, நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டியே..?
என்ன..?

நீயும் எங்ககூட வர்றியா..?

எங்கே?
ஊருக்கு!

என்ன மாலு, என்னாச்சு உனக்கு..?

எங்களைவிட்டு நீ நிரந்தரமாய் பிரிஞ்சிடுவியோ என்று எனக்குப் பயமாயிருக்கு!

அது என்னோட தப்பா? எல்லாப் பழியையும் என்மேல போடுறியே மாலதி! கிடைக்காது என்று தெரிந்தால் எப்பவுமே ஆசைப்படக் கூடாது. நான் தெரியாம ஆசைப்பட்டேன், அதற்காக இப்போ அனுபவிக்கிறேன். நான் படிச்ச வாழ்க்கைப் பாடம் இதுதான் மாலதி!

கண்ணன் தத்துவம் பேசினான்.
வயது குறைந்த ஒரு ஆணைத் திருமணம் செய்யத் தயங்கிய அவளது மனசு, மேலை நாட்டு நாகரிகத்தைப் பாhத்ததும், அதில் கொஞ்சநாள் ஊறியதும், இதெல்லாம் தப்பில்லை என்று இறங்கி வந்து விட்டதோ என்று கண்ணன் நினைத்தான்.

மூன்று இருக்கைகள் கொண்ட யன்னலோர ஆசனம் அவர்களுக்குக் கிடைத்தது. நடுவிலே உட்கார்ந்திருந்த ஆரணி யன்னல் கரையில் உட்காரப்போவதாகச் சொல்லி இடம் மாறவே, மாலதி அவனுக்கு அருகே உட்காரவேண்டி வந்தது. நீண்ட பயணமாதலால், இரவு உணவு முடிந்ததும் பயணிகள் தூங்குவதற்கு வசதியாக உள்ளே எரிந்த  விளக்குகளை அணைத்தார்கள். தூக்கத்தில் கண்ணனின் தோள்மீது மாலதி சாய்ந்தபோது, பூத்துக் குலுங்கும் பூங்கொடி ஒன்று அவனது தோளிலே சாய்ந்ததுபோல, ஒரு இதமான  உணர்வில் கண்ணன் பூரித்துப் போனான். உடம்பிற்கு மட்டுமல்ல அந்த சுகம் மனதிற்கும் இதமாய் இருந்தது. இந்த சுகம் இப்படியே தொடரக்கூடாதா என்று மனசு ஏங்கியது.

ஆனாலும் இந்த சுகம் இதமா அல்லது சுமையா என்பதை அவனால் இனங்காணமுடியாமல் இருந்தது. மாலதி தெரிந்துதான் தன் தோள்மீது சாய்ந்தாளா என்பதில் அவனுக்குப் பலத்த சந்தேகமும் இருந்தது. வாய் திறந்து இதுவரை எதுவுமே அவள் சொல்லாததால் ‘சொல்லடி உன்மனம் கல்லோடி’ என்று இவனது மனம் ஆற்றாமையால் துடித்தது.

அமெரிக்காவிற்கு வரும்போது அவர்களுக்கிடையே கொஞ்சம் அதிகமாகவே இருந்த விரிசல், ஊர் திரும்பும் போது குறைந்திருப்பது போலவும், நெருக்கம் கொஞ்சம் அதிகமாகி இருப்பது போலவும் தெரிந்தது. சூழ்நிலை, சந்தர்ப்பம், நாட்டுக்கு நாடு உள்ள கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் இந்த மாற்றங்களுக்குக் காரணமாய் இருந்திருக்கலாம் என்று கண்ணன் நினைத்தான். ஊரிலே இருக்கும்போது சில விடயங்களில் எது சரி என்று நினைத்தோமோ அதெல்லாம் பிழைபோலவும், எதைப் பிழை என்று நினைத்தோமோ அதெல்லாம் சரியாக இருப்பது போலவும் புகுந்த மண்ணில் தெரிந்தன.

விமானப் பணிப் பெண்கள், சிரிப்பதற்கு என்றே பயிற்றப் பட்டவர்கள் போலச் சிரித்த முகத்தோடு குளிர்பாணம் கொண்டு வந்தார்கள். தூக்கம் கலைந்த மாலதி தலை நிமிர்த்திப் பார்த்து, வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் கண்ணனின் தோள்களில் சாய்ந்து, இன்னும் அதிகமாகவே ஒட்டிக் கொண்டாள். அவள் நித்திரைத் தூக்கத்தில் அல்ல, முழு உணர்வோடு, தெரிந்து கொண்டுதான் தன் தோளில் சாய்ந்தாள் என்பதை உணர்ந்து கொண்டபோது, வானத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே சுதந்திரமாய்ப் பறப்பது போன்ற உணர்வில் அவனது உடம்பு சிலிர்த்தது.

கண்ணன் அவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஆரணி, கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்.

தான் சாய்ந்த தோள்களும், பரந்த மார்பும் பறிபோய் விட்டதைக் கண்டதும், கண்ணனைப் பார்த்துக் கண்சிமிட்டி, தலையை அசைத்து ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு, மீண்டும் யன்னலுக்கால் வானத்தைப் பார்த்தாள்.

இப்படி ஒரு உறவைத்தான் அந்தப் பிஞ்சு மனம் இதுவரை காலமும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது என்பதை அந்த அழகிய சின்னஞ்சிறு உதடுகளில் பூத்த புன்சிரிப்பு உறுதி செய்தது.

கிளைகள் எங்கே பரந்தாலும், வேர் அந்த மண்ணில்தான் இருக்கிறது என்பதுபோல, விமானம் தாயகம் நோக்கிப் பறந்து கொண்டிருக்க, வானத்து நட்சத்திரங்களும் அவளோடு சேர்ந்து கண்சிமிட்டி அவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தன

No comments:

Post a Comment