Monday, September 16, 2013

தமிழ் பயில்வோம் - நூல் வெளியீடு

தமிழ் பயில்வோம் - நூல் வெளியீடு


திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் எழுதிய 'தமிழ் பயில்வோம்' ஆரம்ப நிலைக்கான நூல் வெளியீட்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை (15-09-2013) கனடா ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிற்பகல் 5:30 மணிக்கு மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் விழா ஆரம்பமாகியது. தொடர்ந்து தாயகத்தில் எம் இனத்திற்காக உயிர் தந்த உடன் பிறப்புக்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து வனிதா குகேந்திரனின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. திருமதி சிவநயனி முகுந்தனின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு சின்னையா சிவநேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி செல்வம் ஸ்ரீதாஸ் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றன. அடுத்து விழாவிற்குத் தலைமை தாங்கிய அறிஞர் சாமி அப்பாத்துரையின் தலைமையுரை இடம் பெற்றது.

தொடர்ந்து ஆசிரியை திருமதி கோதை அமுதன் நயவுரை வழங்கினார். மதிப்புரையை ஆசிரியை திருமதி வாசுகி நகுலராசா வழங்கினார். அடுத்து கனடாவில் தமிழ்க் கல்வியும் அதன் எதிர் காலமும் பற்றி ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபையைச் சேர்ந்த பொன்னையா விவேகானந்தனின் சிறப்புரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து எழுத்தாளரும், ஆசிரியருமான குரு அரவிந்தன் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.  அவர் தனது உரையில்:

இன்று கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானதொரு நாளாகும். தமிழ் பயில்வோம் ஆரம்பநிலைப் புத்தகம் ஒன்று திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களின் ஆக்கத்தில் இன்று வெளிவருகின்றது. வெளியீட்டுரை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றது.

1983ம் ஆண்டுக்குப்பின் தமிழர்கள் உள்ளாட்டு யுத்தம் காரணமாகப் புலம் பெயர்ந்து அதிக அளவில் வெளிநாடுகளில் குடியேறத் தொடங்கினர். அந்த வகையில் அதிக தமிழர்கள் வாழும் இடங்களில் மூன்றாவது இடத்தை இன்று கனடா வகிக்கின்றது. தமிழகத்து, ஈழத்து சிறுவர் இலக்கியத்துடன் எங்கள் சிறுவர் இலக்கியத்தை ஒப்பிட முடியாது. இந்த மண்ணில் எங்கள் சிறுவர் கல்வி 1987ல்தான் பெரிய அளவில் ஆரம்பமாகியது எனலாம். எனவே எமது சிறுவர் இலக்கியம் சுமார் 26 வருடகால வளர்ச்சியை மட்டுமே கொண்டது எனலாம். ஆனால் அது வளர்ந்து வந்த வேகம் வியப்பிற்குரியது.

மதிப்புக்குரிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ரொறன்ரோ கல்விச்சபையின் தேவைக்காக தொடக்கத்தில் தமிழ் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தமிழில் ஆரம்ப நிலைத் தமிழ் புத்தகங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பலரும் இந்த முயற்ச்சியில் குழுவாகவும், தமிழ் கற்பிக்கும் நிறுவனங்கள் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் ஈடுபடத் தொடங்கினர். தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. ஆரம்ப நிலை தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையான தமிழ் பயிற்சிப் புத்தகங்கள், சிறுவருக்கான தமிழ் பாட்டுப் புத்தகங்கள், சிறுவர் கதைப் புத்தகங்கள், இசையோடு கூடிய தமிழ் பாடல்கள் அடங்கிய குறுவட்டுக்கள், காணெளிகள் என்று பல வடிவங்களில் இதுவரை இங்கே வெளிவந்திருக்கின்றன. 1997ல் தமிழ் ஆரம் பயிற்சி நூலையும், காணெளி ஒன்றையும் வெளியிட்டிருந்தேன். அதற்கு அந்த நேரம் முற்று முழுதிலும் உதவியாக இருந்தவர்கள் பேராசிரியர் டாக்டர் பாலசுந்தரம் தம்பதியினரும், திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களும் என்பதை மறக்க முடியாது. இது போலப் பலரும் தமிழ் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகத் தங்கள் அர்ப்பணிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்து எனது வெளியயிட்டுரை பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நூலின் ஆசிரியர் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் எம். ஏ பட்டதாரி மட்டுமல்ல, ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச்சபையின் அனைத்துலக மொழி;த்திடத்தின் கீழ் தமிழாசிரியராகத் தற்போதும் கடமையாற்றி வருகின்றார். நூலகராகவும் கடமையாற்றிய இவர் அவை சம்பந்தமாக சில நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். 15 வருடகாலதிற்கு மேற்பட்ட கற்பித்தல் அனுபவம் பெற்ற இவர், இந்த நூலின் முதற் பக்கத்திலேயே ‘ட ப ம’ என்று பயிற்சி ஆரம்பிப்பதில் இருந்தே அவரது கற்பித்தல் அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நூல் சிறுவர்கள் விரும்பக்கூடிய வண்ண அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கிறது. அட்டைப் படத்தில் உள்ள கனடிய தேசியக் கொடியும், சீஎன் டவரும் இந்த நூல் எங்கே வெளியிடப்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 112 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் உள்ள அத்தனையும் முத்துக்கள். பெரும்பான்மையான சொற்கள் எளிமையானதாகவும், மூன்று எழுத்துக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன. சுமார் 46 பக்கங்கள் வரை வண்ணப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக நான் இருந்தபோது பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் ரொறன்ரோ கல்விச் சபையினரின் தமிழ் பாடப் புத்தகங்கில் வரும் படங்கள் வண்ணத்தில் இருந்தால் பிள்ளைகளை அதிகம் கவரக்கூடியதாக இருக்கும் என்று கருத்துச் சொன்னார்கள். அந்தக் குறைகூட இப்போது இந்தப் புத்தகத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த நூலுக்கு ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச்சபை முன்னாள் பல்கலாச்சார ஆலோசகர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் அணிந்துரை எழுதியிருக்கின்றார். கொத்தணிப் பாடசாலை முன்னாள் அதிபர் சிவபாலு தங்கராசா அவர்கள் ஆசிரியரைப் பற்றி அறிமுக உரை எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் இதுவரை வெளிவந்த சிறுவர்க்கான புத்தகங்களில் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் குறைகளை எல்லாம் இந்தப் புத்தம் நிவர்த்தி செய்திருக்கிறது என்றுதான் சொல்வேன். பல சிரமங்களுக்கு மத்தியில் எமது சிறுவர்கள் தமிழ் பயில வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகத் தனது கடின உழைப்பால் அழகிய நூல் உருவத்தில் இந்தப் புத்தகத்தை எங்கள் சமூகத்திற்குத் தந்த திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களுக்கும், இந்த நூல் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த அவரது கணவர் பேராசிரியர் டாக்டர் பாலசுந்தரம் அவர்களுக்கும், அச்சுரு ஏற்றித்தந்த பைன் பிறின்ற் அன்ட் கிப்ற் நிறுவனத்தினருக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன். நன்றி.

குரு அரவிந்தனின் வெளியீட்டுரையைத் தொடர்ந்து முதற்பிரதி, சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்ச் சிநடைபெற்றது.  தொடர்ந்து நூலாசிரியர் திருமதி விமலா பாலசுந்தரத்தின் ஏற்புரையுடனும், நன்றியுரையுடனும் விழா இனிதே முடிவுற்றது.


Friday, September 13, 2013

Principal P.Kanagasabapathy Library

அதிபர் பொ. கனகசபாபதிக்குக் கௌரவிப்பு
 

(குரு அரவிந்தன்)


 முன்னாள் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு பொ. கனகசபாபதி அவர்களைக் கௌரவிக்கும் முகமாக ரொறன்ரோவில் உள்ள யாழ் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இயங்கும் நூல் நிலையத்திற்கு ‘அதிபர் கனகசபாபதி படிப்பகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சென்ற புதன்கிழமை (11-09-2013) யாழ் கூட்டுறவு மன்ற நூல் நிலையத்தில் அவர்களின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. முதலில் பெயர்ப் பலகையை அதிபர் திரை நீக்கம் செய்து வைத்தார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஸ்ரீகாந்தாவின் வரவேற்புரையைத் தொடந்து நண்பர்கள், ஆர்வலர்கள் சிலரின் உரை இடம் பெற்றது. நூலகத்தில் அதிபர் பொ. கனகசபாபதியின் புகைப்படம் ஒன்றும் அவரது சேவையைப்பாராட்டி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவரது மகனான மணிவண்ணன் கலந்து சிறப்பித்தார். கனடாவில் உள்ள நூல் நிலையம் ஒன்றிற்குத் ஈழத்தமிழர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது எம்மினத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.திரு. பொ. கனகசபாபதி அவர்கள் மகாஜனாக்கல்லூரியிலும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியிருந்தார். நைஜீரியாவில் கடமையாற்றி விட்டு அங்கிருந்து கனடா வந்த இவர் 1988ஆம் ஆண்டு யாழ். கூட்டுறவுச் சங்க வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்ட தொடர்மாடி வீடு ஒன்றில் (Apartment)  )  ஆறாம் மாடியில் குடியேறியிருந்தார். பெரும்பாலும் தமிழர்களே குடியிருந்ததால் அங்கு ஒரு நூல் நிலையம் தேவை என்பதை உணர்ந்து அப்போது இருந்த நிர்வாக சபையின் ஆதரவுடன் இந்த நூல் நிலையத்தை மூன்றாம் மாடியில் ஆரம்பித்து வைத்தார். முக்கியமாக ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும், சங்க இலக்கிய நூல்களையும் கொண்டதாக அப்போது இந்த நூல் நிலையம் அமைந்திருந்தது. இன்று பல்வேறுபட்ட நூல்களும் இந்த நூலகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல், வீரகேசரி போன்ற வாராந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இந்த நூல்நிலையத்தில் இடம் பெற்றிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையினரின் தேவை கருதி முக்கியமாக சிறுவர் இலக்கிய நூல்களைச் சேகரிக்கும் திட்டம் ஒன்றைத் தற்போது நடை முறைப்படுத்த முற்பட்டிருக்கின்றனர்.
யாழ் கூட்டுறவு சங்க இயக்குனர்கள், அங்கத்தவர்கள், நண்பர்கள், ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை யாழ் கூட்டுறவு தொடர் மாடி வீட்டில் குடியிருக்கும் எழுத்தாளர் சந்திரபோஸ் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார். செயலாளர் மணி பத்மராஜாவின் நன்றியுரையைத் தொடர்ந்து, இரவு விருந்துபசாரத்துடன் இந்த நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.

Wednesday, September 4, 2013

Marketing and Advertising

o          

                 FAVORITE:

         Difference between Marketing and Advertising


       You see a gorgeous girl at a party. You go up and say: 
"         I am very rich. Marry me! ". - That's Direct Marketing.

       You are at a party with a bunch of friends and see a gorgeous girl. 
          
         One of your friends goes up to her and pointing at you says: 
"        
          He is very rich. Marry him." - That's Advertising..!


           


                                               ***Tuesday, September 3, 2013

SOPCA - Picnic - Montreal வருடாந்த சுற்றுலா

                                               SOPCA PICNIC - 2013

                                              வீணை மீட்டும் கைகள்


சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் வருடாந்த சுற்றுலாவின்போது மொன்றியல் நகருக்குச் சென்ற அங்கத்தவர்களில் சிலரின் புகைப்படங்களை இங்கே தருகின்றோம்.

தினந்தினம் இயந்திர மயமான வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். வாரஇறுதி நீண்ட விடுமுறையின்போது இவர்களின் ஒன்றுகூடல் மொன்றியலில் நடைபெற்றது.

சிறியோர் முதல் பெரியோர்வரை அங்கத்தவர்களாக இருக்கும் சொப்கா மன்றம் எமது சமுதாய வளர்ச்சிக்காகப் பல சேவைகளை ஆற்றிவருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

                                                          SOPCA Family                                               Saint Joseph's Oratory of Mount Royal


                                           Ready to Go! To visit a Temple is to visit God's home.

Swami Vishnudevananda’s mission and his dream of the Subramanya Ayyappa Temple at the Yoga Camp.
May God and Guru bless you all with happiness and love in the years to come

 Enjoying morning breakfast
Commitment to your SatisfactionThe statues were created by Montreal artist Louis Parent between 1943 and 1953. 
They were carved out of Indiana buff stone and white Carrara marble by 
Ercolo Barbieri between 1952 and 1959.

                                                    Children are an uncut diamonds

                                       God will receive your devotion, however you offer it.