Wednesday, February 26, 2014

Balachandran.K.S - கே. எஸ். பாலச்சந்திரன்.

பல்துறை விற்பன்னர் கே. எஸ். பாலச்சந்திரன்.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்தினின் 
மறைவை ஒட்டி மீள்பிரசுரம் செய்கின்றோம்.

(குரு அரவிந்தன் - எழுத்தாளர்))

கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.

அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.


நாடக, சினிமா நடிகராக, நாடக எழுத்தாளராக, இயக்குநராக இருந்த பாலாஅண்ணா ஒரு எழுத்தாளராக மாறியது ஒன்றும் அதிசயமல்ல. நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட அவரிடம் பன்முக ஆளுமை இருப்பதை நான் அவருடன் உரையாடும்போது பல தடைவ அவதானித்திருக்கின்றேன். அவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற அவரது முதலாவது நாவலை வாசித்துவிட்டு நிச்சயமாக பரிசுக்குரிய ஒரு நாவல் இது என்பதை எனது நூல் ஆய்வுக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தேன்.  2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது தமிழகத்திலிருந்து அவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நூலுக்குக் கிடைத்தபோது எனது கருத்தை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டேன். அதைத் தொடர்ந்து அவரது நேற்றுப்போல இருக்கிறது என்ற நூலும் வெளிந்து வாசகர்களிடையே சிறந்த பாராட்டைப் பெற்றிருக்கின்றது. இவரது முதல் மேடை நாடகம் 1965ல் நெல்லியடியில் மேடையேறியது. புறோக்கர் பொன்னம்பலம் என்ற நகைச்சுவை நாடகத்தில் தேனீர்கடை முதலாளியாக இவர் நடித்திருந்தார். இலங்கை வானொலியில் விளையாட்டுத்துறை நேர்முக வர்ணனையாளராகவும் கடமையாற்றியிருக்கின்றார். கனடாவில் தமிழர் தகவல் விருது, உதயன் விருது, உலகப் பண்பாட்டு இயக்க விருது, கனடிய கலைஞர் கழக விருது போன்றவற்றை இவர் பெற்றிருப்பது இவரது சாதனைகளை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.


பாலா அண்ணையைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், நல்ல பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், கடுமையான உழைப்பாளர். யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இந்த வெற்றிக்கெல்லாம் காரணமானவர்களில் அவரது மனைவி எட்னா கனகேஸ்வரியும் முக்கியமானவர் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. பாலா அண்ணாவின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப இசைந்து நடப்பதை பல தடவைகளில் நான் அவரிடம் அவதானித்திருக்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் அவரது கலைப்பணி தொடரட்டும் என்று மீண்டும் பாலா அண்ணாவையும் அவரது குடும்பத்தினரையும் நீடூழி வாழ்க எனவாழ்த்தி வணங்குகின்றேன்.

K.S.Balachandran - கே.எஸ். பாலச்சந்திரன்

கலைஞர் அண்ணை றைற் -
இலங்கை வானொலி புகழ் -

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன்
எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்.

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரைப் பற்றிய கட்டுரையை மீள்பதிவு செய்கின்றோம்.

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின்
தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
……………………………………
(குரு அரவிந்தன்)

சென்ற ஞாயிற்றுக்கிழமை, அக்ரோபர் மாதம் 2007, 7ம்திகதி கனடிய தமிழ் கலைஞர்கள் கழகம், பாரதி புரடக்ஷனின் ஏற்பாட்டில்
கே. எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா, கனடா ஒன்ராரியோ ரொறன்ரோவில் உள்ள ஏஜியன்கோட் சனசமுக நிலையத்தில் மாலை 5:30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதைத் தொடர்ந்து கனடிய தேசியகீதமும் இடம் பெற்றன. தாய்மண்காக்க தாயகத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்காக ஒரு நிமிட மௌம் அஞ்சலி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் நிகழ்ச்சிகளை சிறந்த நடிகரும், கலைஞருமான துசி ஞானப்பிரகாசம் மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.

பாரதி கலைக்கோயில் அதிபரும், பிரபல நடிகர், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ். மதிவாசன் ஆரம்ப உரை நிகழ்த்தும்போது, இலங்கை வானொலியில் தன் குரல் வளத்தால் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை உருவாக்கிய கே.எஸ். பாலச்சந்திரன்தான் தன்னையும் கலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றும், இன்று இந்த இறுவட்டு வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டு, பாலா அண்ணாவிற்குப் புகழாரம் சூட்டிப் பாராட்டினார். தொடர்ந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், மேற்குலக நாடுகளில் உள்ளது போன்ற தனிமனித நடிப்புக் கலையை முதன்முதலாக தமிழ் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும், கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடக, திரைப்படத்துறையில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும் தனது வாழ்த்துரையில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அடுத்து தலைமை உரையாற்றிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எங்கோ பிறந்திருந்தால் இன்று எங்கேயோ போயிருப்பார் என்று ஒரு உண்மையான, சிறந்த கலைஞனைப் பாராட்டத் தயங்கும் எங்கள் தமிழ் சமுதாயத்தின் குறைபாட்டை மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டினார். மேலும் நகைச்சுவை வாய்மொழியாயும், உடல்மொழியாயும் வெளியே வரும்போது அது காலத்தால் அழியாமல் நின்றுவிடுகிறது. என். எஸ். கிருஸ்னனின் நகைச்சுவைகள் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனின் நகைச்சுவையும் எல்லோர் மனதிலும் பல ஆண்டுகளின் பின்பும் நிலைத்து நிற்கின்றது என்பதையும், எல்லாவற்ருக்கும் மேலாக அவரை ஒரு உயர்ந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதராக மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ரூபவாகினி தமிழ்துறை பணிப்பாளரும், இலங்கை வானோலி தமிழ் நாடகத் தயாரிப்பாளரும்,  கனடா ரீவி ஐ பணிப்பாளருமான ப. விக்னேஸ்வரன் காங்கேயன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி. வைரமுத்துவைப் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிப்புத்துறையில் வெகுஜன அங்கீகாரம் பெற்ற மிகச்சில ஈழத்தமிழ் கலைஞர்களில் ஒருவர் என்றும், எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்ட கலைஞர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

வெளியீட்டு உரை நிகழ்த்திய கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள், தொல்காப்பியத்திலே எட்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவை நகைச்சுவை என்றும், அந்தச்சுவை கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கைவந்த கலை என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த இந்த இறுவட்டில் ஓடலி ராசையா, தியேட்டரில் மூத்ததம்பி, உகண்டா வானெலிச் செய்திகள், சப்ளையர் சத்தியமூர்த்தி, அண்ணைறைற் ஆகிய தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பதியப்பட்டு இருப்பதாகவும், தன்னை அதிகம் கவர்ந்தது உகண்டா வானொலிச் செய்திகள்தான் என்றும் குறிப்பிட்டு இறுவட்டை வெளியீடு செய்துவைத்தார்.

சி.ரி.பி.சி வானொலி அதிபரும், சிறந்த நாடக நடிகருமான இளையபாரதி அவர்கள் பல வருடங்களாகவே கே.எஸ்.பாலச்சந்திரனைத் தனக்குத் தெரியும் என்றும், சிறு பையனாக இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருவிழாவில் அவரைப்பற்றி உரையாற்றுவதற்கு தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டு, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

அடுத்து ஜேர்மணியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் அனுப்பி வைத்த வாழ்த்துக் கவிதையை நடிகரும், நகைச்சுவை எழுத்தாளருமான கதிர் துரைசிங்கமும், அமெரிக்காவில் இருந்து கே.எஸ்.பாலச்சந்திரனின் நண்பர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசன் அவர்களும் வாசித்து அவரைப் பாராட்டினார்கள்.
ஆசியுரை வழங்கிய திரு. விஜயகுமாரக்குருக்களும், தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எஸ். அச்சுதனும் தமிழ் மக்களிடையே அதிகம் செல்வாக்குப் பெற்ற நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினர். தொடர்ந்து இறுவட்டுப் பிரதிகள் வெளியிடப்பட்டன. ஏற்புரையில் கே. எஸ். பாலச்சந்திரன் இந்த விழா சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மதிவாசன், ரஜீவ்கரன், விக்னேஸ்வரன், ராஜ் சுப்பராயன், டிஜிமீடியா கருணா, மிடி மெலோடிஸ் எஸ் வி. வர்மன், துசி ஞானப்பிரகாசம் ஆகியோரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
சின்னவயதிலே இலங்கை வானொலி மூலம் கே.எஸ்.பாலச்சந்திரனின் ரசிகனாக நானிருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அவரோடு பழகுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம்கிடைத்தது. 1997ல் தமிழ் ஆரம் என்ற சிறுவர்களுக்கான ஒளிநாடாவை நான் வெளியிட முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது கலையகத்திற்குச் தற்செயலாக வந்த அவர் அதைப் பார்த்துவிட்டு தன்னை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறை உங்களை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கும் என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதன் பின்பு இலக்கியச் சந்திப்ப்புகளில் அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடுவேன். நல்ல ஞாபக சக்தியும், ஆழ்ந்த நாவல் இலக்கிய அறிவும் அவரிடம் இருப்பதை அச்சந்தர்ப்பங்களில் அவதானித்தேன். அவரிடம் உள்ள திறமைகளையும், அனுபவங்களையும் நாடகப் பட்டறை மூலம் வெளிக் கொண்டுவந்து, அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது தற்போதைய ஆசை. அது மற்றவர்களின் ஆசையாகவும் இருக்கக்கூடும்!

செவிக்கு விருந்து தரும் அண்ணை றைற் போன்ற இறுவட்டு, பல நல்ல மனம் கொண்ட நண்பர்களின் உதவியால் இன்று வெளிவந்திருப்பதைப் போல, கண்ணுக்கு விருந்தளிக்கும் காணொளி ஒளிவட்டுக்களும் அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தாங்கி விரைவில் வெளிவர ஆவன செய்யவேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக ரீ.வீ.ஐயில் காண்பிக்கப்படும் வைத்திலிங்கம்சோ போன்ற நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஒளிவட்டு வெளிவந்தால் சர்வதேசத்திலும் பரந்து வாழும் தமிழர்களை அது மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. புகழ் பெற்ற நல்ல கலைஞர்களை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்டட கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. எமது இனத்தவரை, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை, நாமே முன்னின்று பாராட்டத் தயங்கினால் வேறுயாரும் பாராட்ட முன்வரப் போவதில்லை. பாலா அண்ணா நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தனது நகைச்சுவை நடிப்பு மூலம் எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றோம். வாழ்க, வளர்க நலமுடனே!

விகடன் தீபாவளி மலர்

விகடன் தீபாவளி மலர்

இம்மாதக் கதை

1983ம் ஆண்டு யூலை மாதம் நடந்த சம்பவத்தை எழுத்தாளர் குரு அரவிந்தன்
கதையாக்கியிருக்கின்றார். விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இக்கதையை
வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


  1983ம் ஆண்டு யூலை மாதம்
   1983ம் ஆண்டு யூலை மாதம்   
                            
' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’
இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.


குரு அரவிந்தன்

 
அது கொழும்பு துறைமுகம்…

வ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.
அக்கா தூங்கியதும், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த நானும் எனது நண்பர்களும் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் மேற்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். யாரை நம்பி ஒன்றாக, ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தார்களோ, அவர்களே கைவிட்டு விட்டபோது, வேலியே பயிரை மேய்ந்துவிட்ட ஏமாற்றம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. இனியும் இவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவிடமாட்டாரகள் என்ற உண்மையும் இந்த இனக் கலவரத்தின்போது தெளிவாகப் புரிந்தது. உறவை, உயிரை, உடமையை, மானத்தை என்று பலவிதமான இழப்புகளின் பாதிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தாலும், அந்த சோகத்திலும் உயிர்தப்பி சொந்த மண்ணை நோக்கிப் பாதுகாப்பாய்ப் போகிறோமே என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.யாரோ அழும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே நின்ற அவன் விறைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனாய் இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். கணவனாய் இருந்தால் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதலாவது சொல்லியிருப்பானே, ஏன் இப்படி வேண்டாத யாரோபோல எட்டநிற்கிறான். அவளோ வெறி பிடித்தவள்போல ஓவென்று கத்தி அழுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருந்தாள். அங்கே நடப்பது ஏதோ அசாதாரண நிகழ்வுபோல எனக்குத் தெரிந்தது. அவசரமாக கீழ்த்தளத்திற்கு ஓடிவந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அங்கே நடந்ததை மெதுவாக சொன்னேன். பெண்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு ஆசிரியையான அக்கா ஒருபோதும் மௌனமாய் இருந்ததில்லை. பதட்டத்தோடு அக்கா துள்ளி எழுந்து மேற்தளத்தில் இருந்த அவர்களை நோக்கிச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.


அவர்களுக்குள் வாக்குவாதம் சூடேறியிருந்தது. அவள் கைகளை அகல விரித்து அவனைத் தடுத்தபடி ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவனோ இல்லை. ஆவேசம் கொண்டவளாய் திடீரென அவளைத் தள்ளிவிட்டு கப்பலின் ஓரம் நோக்கி ஓடிவந்தான். எங்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது, எதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் எதிரே வந்த அக்கா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.


‘என்ன, என்னாச்சு..?’


‘என்னை விடுங்கோக்கா’


‘அப்படி என்ன கோபம், அவள் உன்னை ஏசினாளா?’


‘இல்லையக்கா, என்னை விடுங்கோ’


‘ஏன் என்ன செய்யப் போகிறாய்?’


‘நான் தற்கொலை செய்யப் போறேன். மானம் போச்சு, என்னால இனி உயிரோட இருக்க முடியாது.’ அவன் ஆவேசமாக கைகளை விடுவிக்க உதறினான்.

         


தற்கொலையா? எனக்கு உதறல் எடுத்தது, வாக்குவாதப் படும்போது அவள் ஏதாவது மனம் நோகக்கூடியதாகச் சொல்லியிருப்பாளோ? அந்த ஆத்திரம் தாங்கமுடியாமல் இப்படி முடிவு எடுத்திருப்பானோ என்று என் மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கையில்,


‘சரி நான் விடுகிறேன், எனக்கு என்ன நடந்தது என்று சொல்லலிவிட்டு அப்புறம் குதி’ என்றாள் அக்கா.


அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை., சட்டென்று அடங்கிப் போய்விட்டான். அவனது இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. தற்கொலை என்பது ஒரு கணத்தில் சடுதியாக எடுக்கும் சந்தர்ப்பம் சார்ந்த முடிவு. சிந்திக்க நேரம் கிடைத்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது.


அவள் இப்போது தயங்கித் தயங்கி அருகே வந்தாள்.


‘நீங்க..?’ என்றாள் அக்கா.


‘நான் தான் இவருடைய மனைவி’ அவனைப் பாரத்துக் கொண்டே தயக்கத்தோடு சொன்னான்.


‘இல்லை, இல்லை இல்லை..!’ அவன் மீண்டும் ஆத்திரத்தில் கத்தினான்.


‘இது உன்னுடைய மனைவி இல்லையா?’ அவளைக் காட்டி அக்கா கேட்டாள்.


‘இவள் எல்லாம் ஒரு பெண்டாட்டியா? மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு!’ வெறுப்பால் அருவருப்போடு அவள்மீது ‘தூ’ என்று எச்சில் துப்பினான்.


அவளோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட மான்போல, ஒரு கணம் கூனிக்குறுகி அதிர்ச்சியில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள்.


‘பாவி, உன்னுடைய உயிரைக் காப்பாற்றத்தானே என்னை நானே பலி கொடுத்தேன், இப்ப என்மேல பழிபோடுறியே..!’ அவள் ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தத் தொடங்கவே, அவனது பழிச்சொல் தாங்கமுடியாமல் அவளும் கடலில் குதித்து விடுவாளோ என்ற பீதி அக்காவின் முகத்தில் தெரிந்தது.


மனசில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று அவர்களுக்காக அக்கா காத்திருந்தாள். அவளது கன்னத்திலும் கழுத்திலும் பிறாண்டியது போன்ற கீறல் காயம் காய்ந்து சிவந்து போயிருந்தது. மானம் போனபின் எதற்காக உயிர்வாழவேண்டும் என்று அவர்கள்; நினைத்திருக்கலாம். அவர்களின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று ஓரளவு புரியலாயிற்று.


அவள் விம்மி விம்மி அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், அவளை மெல்லத் தாங்கி அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தாள் அக்கா. அவளைக் கண்காணிக்கும்படி என்னிடம் சைகை செய்துவிட்டு கணவனிடம் சென்று விசாரித்தாள்.


இனக்கலவரத்தின்போது காடையர் கூட்டம் அவனைப் பிடித்துக் கொள்ள, அவனுக்கு முன்பாகவே அவளைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்தி விட்டதாக அவன் முறையிட்டான்.


‘நீ ஒரு ஆண்பிள்ளைதானே, அவளைக் காப்பாற்றியிருக்கலாமே?’ என்றாள் அக்கா.


‘என்னாலே முடியலையே!’


‘அவளைக் காப்பாற்ற ஏதாவது முயற்சியாவது நீ செய்திருக்கலாமே?’


‘எப்படியம்மா முடியும், அவங்க கூட்டமாய் வந்தாங்க, கையிலே கத்தி, துப்பாக்கி, சைக்கிள் செயின் என்று எல்லாம் கொண்டு வந்தாங்க’


‘இரண்டுபேரும் தப்பியாவது ஓடியிருக்கலாமே’


‘ஊரடங்கு சட்ட நேரம் தெரு முனையிலே இராணுவம் கடமையில் இருந்தாங்க, அந்தப் பக்கம் ஓடிப்போனால் சுட்டுப் போடுவாங்க, அதனாலே..!’


‘அதனாலே..?’
‘மகனையும் தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் கதவால் ஓடி ஒளியப் போனபோதுதான் அவங்கள் எங்களைப் பிடிச்சுக் கொண்டாங்கள். என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’


மேற்கொண்டு எதையும் கேட்க அக்கா விரும்பவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்தான்.


‘நான் திமிறினேன், துப்பாக்கியாலே எனது மண்டையிலே ஒரு போடு போட்டாங்க, நான் மயங்கிப் போயிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது..!’


‘அப்புறம் எப்படித் தப்பி வந்தீங்க..?’


‘நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கசக்கிப்போட்ட மலர்போல கலைந்த முடியோடு அவள் அழுதபடி மூலையிலே உட்கார்ந்திருந்தாள், காலையிலே ஊரங்குச் சட்டத்தை ஒரு மணிநேரம் தளர்த்தினாங்க, அப்போ தப்பி ஓடிவந்து அகதிகள் முகாமிலே தஞ்சம் புகுந்தோம்..’


அக்கா பதில் ஏதும் சொல்லவில்லை.


யார்மீதும் பிழை சொல்ல முடியாத நிலமை. அவர்களின் பையனைத் தூக்கிக் கொண்டு, அவளையும் அணைத்து ஆசுவாசப் படுத்தியபடி கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவளுக்கு ஆறதல் சொல்லி அவளை அமைதிப் படுத்தினாள். சோகமும், வலியும் வேதனையும் வெறுப்பும் மிக்கதாய் அந்தக் கப்பல் பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது.


தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான வடபகுதியில் உள்ள காங்கேயன்துறை துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அவளும் எங்களுடன் இறங்கினாள். அக்காவின் ஆலோசனையை ஏற்று மனம் தெளிந்து, தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டிருந்தாள். தற்காலிக அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவியான அக்காவின் மகள் ரோசாவிடம் அவர்களுக்கு நடந்ததைகூறி அவர்களை அவளிடம் ஒப்படைத்தோம்.


அந்தக் கப்பலில் வந்த ஒவ்வொரு பயணிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அது போன்ற பல உண்மைச் சம்பவங்களை அவலப்பட்டு வந்த பலரிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாலோ என்னவோ கொஞ்ச நாட்களாக எதிலும் நாட்டமில்லாமல் ரோசா மனம் கலங்கிப் போயிருந்தாள். சில நாட்களின்பின் தானும் ஒரு போராளியாக மாறப்போவதாக வீட்டிலே சொல்லிவிட்டு அக்காவின் மகள் ரோசாவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டாள். அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளைப் போன்ற பலர் சென்ற பாதை சரியானதா தவறானதா என்பதைச் சிந்திக்க இடம் தரவில்லை. தமிழர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது தற்பாதுகாப்பு முறை ஒன்று வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. அதை அடைவதற்குத் தற்பாதுகாப்புப் போராட்டமே ஏற்றதாகவும் இருந்தது. ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட எதிரிக்கு அகிம்சை என்றால் என்னவென்று புரியவில்லை. அகிம்சை மூலம் புரியவைக்கப் பலமுறை முயன்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த ரோசாவின் மரணச்செய்தி வந்தபோதும் அக்கா கலங்கவில்லை. ஆக்கரமிப்பு இராணுவத்திடம் அகப்பட்டு, மானமிழந்து கோழை போலச் சாவதைவிட, தனது மகள் மாவீரராய் களத்தில் போராடி இறந்து போனதில் பெருமைப்பட்டுக் கொண்டாள் அக்கா. எந்தப் பெண்ணைத் தற்கொலை முயற்சியில் இருந்து அக்கா காப்பாற்றினாவோ அந்தப் பெண் இப்போது வன்னியில் உள்ள முதியோர் காப்பகத்தின் காப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அவளது கணவனோ மனநோயாளியாய் மனநோயாளர் காப்பகத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அன்று சிறுவனாக இருந்த அவர்களின் மகன் இன்று மணலாறு களமுனையில் முனைப்போடு போராடும் ஒரு தற்பாதுகாப்புப் போராளியாகத் தன்னைத்தானே அர்ப்பணித்து நிற்கின்றான். அந்த வலியும், வேதனையும் அனுபவித்த அவர்களுக்குத்தான் புரியும்.


இனக் கலவரங்களின் போது மட்டுமல்ல, மதம் பிடித்த யானைபோல, வெறிபிடித்த ஒருசில அரசியல் வாதிகளால் எத்தனை தமிழ் குடும்பங்கள் இன்று சீரழிந்து போயின. வேண்டாத விதி அவ்வப்போது வலியவந்து ஒவ்வோர் குடும்பத்திலும் விளையாடிக் கொண்டே இருக்கிறது. மனிதநேயமற்ற ஆயுத விற்பனையாளர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு இழப்புக்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, பிழை யாரறிவார்?
நன்றி:   விகடன் தீபாவளி மலர்

Tuesday, February 18, 2014

Tamils Information Canadian Award.

Tamils Information Canadian Award.

On February 12th 2012, Tamils’ Information celebrated its 21st anniversary in City Hall. The celebration was marked with its annual awards ceremony, chaired by Neethan Shan. The chief guest was the Hon. Glen Murray; the Minister of Training for Colleges and Universities. The guest of honour was Pam McConnell; city councilor of Toronto. 

Eight awards were presented to night to various distinguished leaders representing the Tamil community. 
Kuru Aravinthan won an award for his outstanding achievements in Tamil literature, critic, play Wright, and publish for over 20 years in Canada.

Kuru Aravinthan has been one of the pioneers of Tamil fiction in Canada, and has received praise and recognition world –wide for his work. He has been writing short stories for the last decade and more for popular Tamil Naadu magazines. Some of his stories were translated into other South Indian languages for publication in those language journals. One of Aravinthan’s most popular story appeared in Anandavikatan filling 24 pages in the Pavalavilla year magazine and has to its credit that five famous artists drew pictures for the story titled “Submarine,” which is something unique and never before done. That story gained the admiration of more than 1,000,000 readers and profuse compliments poured from the readers.

Subsequently when Anandavikatan editorial board in a Quiz asked the readers later on as to who wrote that story, 45,261 correctly said that author was Kuru Aravinthan which shows how much he has captivated the minds of Tamil Naadu readers. His short stories and article also have appeared in Vikatan Deepavali Malar and Vikatan Pavalavilla Malar.

Kuru Aravinthan’s short stories also have appeared in other popular weekly magazines of the Newspapers of Vikatan, Kalki, Kumudam, Kalaimagal  in Tamil Nadu, Veerakesari and Thinakkural in Sri Lanka, Villinam in Malaysia,Uthayan, Veedu, Eelanadu and Thural in Toronto, Irusu and Shangamam in Montreal. Puthinam in the United Kingdom, Vettimaiy in Germany, Uyir Nilal in France and Yugamayini in Tamilnadu.

His stories also appear regularly in the electronic media like Pathivukal, Neithal, Thinnai, Tamil Authers and Kumutham.com. In a short story contest organized by the Uthayan Newspaper, Kuru Aravinthan’s short story was adjudged to be the best and was awarded a gold Medal In 2007 Kuru Aravinthan’s short story won the first place in the short story contest organized by the Canadian CTR radio to commemorate its 10th year of founding and won the best award in writer Gandarvan short story contest – 2008. The popular Sri Lankan Tamil Newspaper Veerakesari at its Millenium issue credited Kuru Aravinthan’s short story as the best story of the year.

His Kurunovel ‘Ammavin Pillaikal’ also won the Yugamayini Best Kurunovel award -2009 in Tamilnadu. Also His Kurunaval won the Kalaimagal International award - 2011 for his Thayumanaver Kurunaval from Tamilnadu, India.

Kuru Aravinthan’s contribution (Tamil Aaram) towards children education and literature are noteworthy. He has been one of the pioneers of Tamil children Literature in Canada and involved himself in stage plays (Drama), Tamil Cinema as well. He has written the script for the films ‘Sugam Sugame’, Veali and Sivaranjani. He is actively involved in the social fabric of society as well. Kuru Aravinthan also awarded 10th year and 15 year Volunteer Service Award from Premier of Ontario. Canada.

There in lay Kuru Aravinthan’s true talent, his ability and talent to blend and merge fact and fiction to create a world where one becomes conscious of intricacies and the importance of remembered history. In addition, his ability to vividly retell events, as to make the reader feel immersed in the events, further set Kuru Aravinthan apart from his peers. His ability to situate readers into the retold events, and engross, previously ignorant people into the life and trials of the Tamil population have made Kuru Aravinthan’s work that much more powerful, as it becomes a tool in helping the world understand and sympathize the plight of the Tamil people.

The ceremony ended at 6:00 pm with refreshments.Tamil Language in Canada - கனடாவில் தமிழ் மொழிக்கல்வி

கனடாவில் தமிழ் மொழிக்கல்வியின் வளர்ச்சி. 

(குரு அரவிந்தன் - எழுத்தாளர், தலைவர்: ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்.)

(Kuru Aravinthan – Writer, President: Ontario Tamil Teachers Association)

கல்விச் செல்வம் ஒன்றே எங்கு சென்றாலும் கொண்டு செல்லக்கூடிய செல்வமாக இருந்ததால், தமிழர்கள் தாங்கள் புலம் பெயர்ந்த கனடிய மண்ணுக்குத் தங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 1983ம் ஆண்டுக்கு முன் கனடாவிற்கு வந்த தமிழர்களுக்கு தங்கள் தாய் மொழியைக் கனடிய மண்ணில் தக்க வைப்பதற்கு அதிக வசதிகளோ அல்லது வாய்ப்புக்களோ கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் 1983ம் ஆண்டுக்குப் பின் அதிக அளவில் தமிழர்கள் கனடிய மண்ணுக்குப் புலம் பெயர்ந்ததால் அவர்கள் தங்கள் தாய்மொழியைப் புகுந்த மண்ணில் தக்கவைப்பற்கு சகல முறையிலும் பிரயத்தனப் பட்டாhர்கள். இவ்வாறான முயற்சிகளின் போது தாய் மொழியாம் தமிழ் மொழி சிதைந்து போகாமல் எப்படி அடுத்த தலை முறையிடம் கையளிப்பது என்பதில் பல சிக்கல்களைப் புலம் பெயர்ந்த கனடியத் தமிழர்கள் எதிர் கொள்ள வேண்டிவந்தது. பிறந்த மண்ணிலே தாய் மொழியாகக் கற்கப்பட்டும், கற்பிக்கப்பட்டும் வந்த தமிழ் மொழி புகுந்தமண்ணிலே சில நாடுகளில் மட்டும் இன்று இரண்டாம் மொழியாகவோ, சர்வதேசமொழியாகவோ, அல்லது அந்னிய மொழியாகவோ உருவம் பெற்றுக் கற்கவும் கற்பிக்கப்பட்டும் வருகின்றது. அப்படியான ஒரு நிலைதான் இன்று சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் கனடாவிலும் தமிழ் மொழிக்கு ஏற்பட்டிருக்கின்றது.


புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழி கற்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது, இதற்கு  என்ன அவசியம் என்று கேட்பவர்களும் உண்டு. இதனால் இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்கும் மாணவர்களும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் அதிகமான சவால்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு இருகின்றார்கள். புலம்பெயர்ந்த நாட்டுச் சூழலுக்கேற்ப அந்த நாடுகளில் பாவனையில் இருக்கும் பிற மொழிச் சொற்கள் சிலவும் தமிழ் மொழியோடு கலந்து விடுகின்றன. எப்படி வட்டாரவழக்கில் இருந்த சொற்களைத் தமிழ் மொழி உள்வாங்கியதோ, அதே போலத்தான் பிறமொழிகளும் தமிழோடு கலக்கின்றன. இதனால் தமிழ் கற்றல், கற்பித்தலில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையை அவர்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கின்றது. இலங்கையிலோ, அல்லது தமிழகத்திலோ பாவனையில் இருந்து வந்த ஆரம்ப வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களில் இருந்த சில சொற்களுக்கு விளக்கம் கொடுத்த போது மேலை நாடுகளில் உள்ள சில பிள்ளைகளால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பாக மாட்டு வண்டி, தாமரைப்பூ, குயில், உரல், ஆட்டுக்கல் போன்ற சில சொற்களுக்குரிய யதார்த்தயுருவை  அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சில ஆசிரியர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள். எனவேதான் கனடாவில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஏற்றமாதிரியான பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டிவந்தது. எப்படிச் சில வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்திருக்கின்றனவோ அதுபோல, போச்சுக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் இலங்கை இருந்தபோது அந்த மொழிச் சொற்கள் சில தமிழோடு கலந்ததால் இன்றும் அவை வட்டார வழக்காகப் பாவனையில் இருக்கின்றன. பேச்சு வழக்கில் அத்தகைய சொற்கள் இன்றும் புலம் பெயர்ந்தவர்களால் கனடாவில் பாவிக்கப்படுகின்றன.


ஓன்ராறியோவில் உள்ள கல்விச் சபைகள் பல்கலாச்சாரத் திட்டத்தின் கீழ் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழி கற்பதற்குரிய வாய்ப்பை தமிழ் மாணவர்களுக்குக் கொடுத்திருக்கின்றன. பாடசாலை நேரத்திற்குப் பின்னரும், வாரஇறுதி நாட்களிலும் தமிழ் மொழி கற்பதற்கு வசதிகள் செய்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரொறன்ரோ, பீல், யோர்க்பிரதேசம், கத்தோலிக்கசபை, டர்ஹம், கிங்ஸ்ரன் ஆகிய கல்விச் சபைகள் தமிழ் மொழி கற்பிப்பதில் இன்று முன்னிற்கின்றன. இதைவிட சில பல்கலைக் கழகங்களில் தமிழ் ஒரு தேர்வுப்பாடமாகவும் போதிக்கப்படுகின்றது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் உள்ள குறைகள் என்னவென்றால் முக்கியமாக ஒரு மாணவன் பாடசாலையில் எந்தத் தரத்தில் படிக்கிறானோ அதே தரத்தில்தான் தமிழ் வகுப்பிலும் படிக்க வேண்டும். அந்த வகுப்பிற்குரிய தமிழ் அறிவு அவனிடம் இருக்கிறதோ இல்லையோ அவன் அந்தத் தரத்தில்தான் படிக்க வேண்டும் என்று கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகின்றான். அடுத்ததாக கற்பிக்கப்படும் பாடப்புத்தகங்கள் அந்த வகுப்பின் தரத்திற்கு ஏற்றதாக இல்லை என்ற குறைபாட்டையும் சில பெற்றோர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். குமுகம் என்ற ஒருசொல் ரொறன்ரோ கல்விச்சபை தமிழ் பாடப்புத்தகத்தில் புகுத்தப்பட்டபோது, வழக்கில் இல்லாத தனித்தமிழ் சொற்பிரயோகம் என்று ஒரு சில பெற்றோர் சுட்டிக் காட்டியுள்ளனர். சமூகம் (ஊழஅஅரnவைல) என்று இதுவரை பாவிக்கப்பட்ட சொல்லுக்குப் பதிலாக குமுகம் என்ற சொல் பாடப்புத்தகத்தில் புகுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகும். தமிழ் மொழியோடு ஆங்கிலம் அளவுக்கு அதிகமாகக் கலந்து பாவிக்கிறார்கள், தமிழோடு வடமொழியைக் கலந்து விட்டார்கள் என்றெல்லாம் மேடையில் குறைப்பட்ட ஒருசிலர்கூட இந்தச் சொல் புகுத்தப்பட்ட போது அதற்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை. இத்தகைய புதிய சொற்கள் பாடப்புத்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, சாதாரண சொற்களையே பிள்ளைகளால் புரிந்து கொள்ள முடியாதபோது ஏன்


இப்படியான புதிய சொற்களை அறிமுகப் படுத்துகிறார்கள் என்று சிலர் குறைப்பட்டுக் கொண்டார்கள். இங்கே உள்ள ஓவ்வுபெற்ற ஆசிரியர் ஒருவரிடம் இது பற்றி அபிப்பிராயம் கேட்டபோது புதிய தமிழ் சொற்கள் புகுத்தப் படும்போது எங்கள் மொழி வளம் பெறுகிறது, அது காலத்தோடு ஒட்டிப் போகிறது என்பதற்கான அறிகுறியே அது என்பதைக் குறிப்பிட்டு,  இத்தகைய வளர்ச்சி பெறாத, காலத்தோடு ஒத்துப்போகாத மொழிகள் விரையில் அழிந்து விடும் என்பதையும் நினைவூட்டினார். அவர் மேலும் குறிப்பிடும் போது, நமஸ்காரம் என்ற வடமொழி சொல்லை வணக்கம் என்றும், காரியதரிசியைச் செயலாளர் என்றும், சர்வகலாசாலையைப் பல்கலைக்கழகம் என்றும், ராஜ்ஜியம் என்பதை மாநிலம் என்றும் எப்படிப் பேசப்பழகிக் கொண்டோமோ, சைக்கிள் என்ற ஆங்கில வார்த்தைக்கு எப்படி துவிச்சக்கரவண்டி என்றும், பஸ் வண்டியை பேருந்து என்றும், ரெயினைத் தொடர்வண்டி என்றும் எப்படி காலப்போக்கில் அழைக்கப் பழகிக் கொண்டோமோ அதே போல இதையும் காலப்போக்கில் அழைக்கப்பழகிக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே புகுந்த மண்ணில் புதிய சொற்களை, அல்லது தூயதமிழை அறிமுகம் செய்ய முற்படும்போது, எல்லோரும் தங்கள் புலமைத்துவத்தைக் காண்பிக்க முற்படுவதால், தமிழ் கற்பிப்பதில் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இது போன்ற பல வார்த்தைகள் பல மொழிகளில் இருந்தும் புதிது புதிதாகத் தினமும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அவற்றுக்கு ஈடான சரியான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தமிழ் மொழியின் வளர்ச்சி கால ஓட்டத்தில் பின்தங்கிவிடக்கூடும். ஒருவரின் பெயரையோ, அல்லது இடத்தின் பெயரையோ மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே எழுதி விடுவதுதான் சிறப்பாக இருக்கும். தூயதமிழ் சொற்கள் வேண்டும் என்பதற்காக இந்த மண்ணில் உள்ள றிச்மன்ஹில் என்ற இடத்திற்கு செல்வமலை என்று முகவரி எழுதிக் கடிதம் போட்டால் அந்தக் கடிதம் எப்படிப் போய்ச்சேரும்?


மொழித் திறன்கள் என்று சொல்லப்படுகின்ற பேசுதல், எழுதுதல், வாசித்தல், செவிமடுத்தல் போன்ற திறன்களில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையினரில் குறிக்கப்பட்ட சிலரே தமிழ் மொழியில் இத்தகைய திறன்களைக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தாய்மொழி வளர்ச்சியில் தகுந்த ஆர்வம் காட்டாவிட்டால் தமிழ் மொழியில் படித்தல், எழுதுதல் போன்ற இத்துறைகளை மேம்படுத்துவது என்பது புலம்பெயர்ந்த மண்ணில் மிகவும் கடினமானதாகவே இருக்கும். புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மாணவர்களிடையே தமிழ் எழுத்து திறன் குறைந்து கொண்டு போவதை இப்பொழுதெல்லாம் எங்களால் அவதானிக்க முடிகின்றது. பல்கலாச்சார நாடாகிய கனடாவிலும் தமிழ் மொழிப் புழக்கம் குறிப்பாக தமிழரின் வீடுகளில் வெகுவாகக் குறைந்து கொண்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் சமீபகாலமாக, குறிப்பாக தமிழ் மொழி கற்கும் மாணவர்களின் தொகை மீண்டும் சிறிதளவு அதிகரித்திருப்பதைக் கல்விச் சபைகளின் கல்வி கற்பிக்கும் நிலையங்களில் இருந்து அவதானிக்க முடிகின்றது. ரொறன்ரோ கல்விச் சபையை எடுத்துக் கொள்வோமேயானால், 1998ம் ஆண்டு 31 நிலையங்களிலும், 2003ம் ஆண்டு 49 நிலையங்களிலும், 2011ம் ஆண்டு 56 நிலையங்களிலும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. இதற்கேற்ப தமிழ் மாணவர் தொகையும் அதிகரித்திருக்கின்றது.


கல்விச்சபைகள் நடத்திவரும் தமிழ் மொழிக் கல்வித் திட்டத்தைவிட கனடாவில் தனிப்பட்ட முறையில் பல இடங்களில் தமிழ் வகுப்புக்களும் நடைபெறுகின்றன. மேலும் பழைய மாணவர் சங்கங்கள், ஊர் ஒன்றியங்கள், தொடர்பு சாதனங்கள் போன்றவையும் தமிழ் மொழி கற்பித்தலில் சிறந்த பங்காற்றி வருகின்றன. தமிழ் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இவர்கள் எடுத்து வரும் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டும். ஆனால் அரச பாடசாலைகளில் தமிழ் கற்றோர் தங்கள் வசதி கருதித் தனியார் தமிழ் கற்பிக்கும் நிறுவனங்களுக்குச் செல்வதால் அரச பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியுள்ளதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் தமிழ் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் இலவச வசதிகளை நான் இழக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பெற்றோர்கள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழ் மொழியின் எதிர் காலம் கருதி அதற்கேற்ப செயற்படவேண்டும். தமிழ் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டுமானால் குறிப்பாக கனடா முழுவதும் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படவேண்டும். பிள்ளைகளின் தமிழ் மொழித் தரத்தை அறிந்து அதற்கேற்ப வகுப்புகளில் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆசிரியர் தேர்வின்போது போதிய தமிழ் அறிவும், அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்களையே தெரிவு செய்ய வேண்டும். தமிழில் வெளிவந்திருக்கும் சிறுவர்களுக்கான ஒலி, ஒளி குறும்தட்டுக்களையும், பயிற்சிப் புத்தகங்களையும் பெற்றோர்கள் வாங்கித் தங்கள் பிள்ளைகளின் தமிழ் மொழி அறிவை விருத்தி செய்ய உதவவேண்டும். முக்கியமாக எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் ஆர்வத்தோடு தமிழ் மொழி கற்றவரும் மாணவர்களையும் பெற்றோரையும் அரவணைத்துச் செல்லக் கூடியதாகத் தமிழ் கற்பிக்கும்  ஆசிரியர்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வருடம் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழித் திறன் காணல் போட்டியில் ஒன்ராறியோ கல்விச் சபைகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிதிறமையாக விடை எழுதிப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டார்கள். எனவே தாய் மொழியாம் தமிழ் மொழியைக் கற்கவேண்டும் என்ற உத்வேகம் புதிய தலைமுறையிடம் தோன்றி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேலும் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் கல்விச் சபைகளைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்களுக்காகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதால் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனிலும் முன்னேற்றம் காணப்படுகின்றது.


மேலே குறிப்பிட்ட தமிழ் கற்பித்தலில் உள்ள இடர்களைக் களையவேண்டுமானால் முதலாவதாகத் தமிழ் மொழி வல்லுநர்களைக் கொண்ட சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கிப் பொருத்தமான புதிய தமிழ் சொற்களை உருவாக்க வேண்டும். அரசியற் கலப்பற்ற, தமிழ் மொழி வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்டவர்களை உள்ளடக்கியதாக இந்த அமைப்பு இருக்க வேண்டும். இந்த அமைப்பால் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட, வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையே சர்வதேச ரீதியிலான தமிழ் மொழிப் பாவனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கணனி போன்ற நவீன தொழில் நுட்பவசதிகள் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் இத்தகைய மாற்றங்களை இலகுவில் எங்கும் விரைவாக எத்துச் செல்ல முடியும். முதலில் எல்லோரும் பாவிக்கக்கூடிய பொதுவான மென்பொருள் எழுத்துருவை தமிழில் உருவாக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஆளுக்கொரு எழுத்துருவையும், புதியசொற்களையும் தாம் விரும்பிய படியே அறிமுகம் செய்வதால் தமிழ் மொழி கற்பதில், கற்பிப்பதில் குழப்பம்தான் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டின் கல்வி அமைப்புக்கும், கற்கும் சூழலுக்கும் ஏற்ப தமிழ் மொழிப் பயிற்சி அமைய வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயற்படவேண்டும். மொழியின் முக்கிய பயன்பாடு கருத்துப் பரிமாற்றமே என்பதால், தமிழர்கள் சந்திக்கும் இடங்களிலும் தமிழ் வகுப்பறைகளிலும் தமிழர் இல்லங்களிலும் பேச்சுத் தமிழை முதன்மைப்படுத்துவது, கற்பித்தலுக்கு நவீன தகவல் தொழில் நுட்பவசதிகளைப் பயன்படுத்துவது, அரசு சர்வதேச மொழித்திட்டத்தின் மூலம் தமிழ் மொழிக்குக் கொடுக்கும் வசதிகளைப் பயன்படுத்துவது போன்ற முறைகள் மூலம் புலம் பெயர்ந்த மண்ணில் எங்கள் மொழியைப் பாதுகாக்க முடியும். எனவே கனடிய மண்ணில் தமிழ் மொழி கற்பிப்பதற்காக ஒரு தனிப்பீடம் அமைப்பதுடன், தமிழ் பெற்றோர்களும், கல்விமான்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் இன்னும் கூடிய கவனம் செலுத்தினால் எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழி என்றென்னும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

சிறுவர் இலக்கியமும் பார்பரா பார்க்கும்.

சிறுவர் இலக்கியமும் பார்பரா பார்க்கும்.

 (குரு அரவிந்தன்)


‘குழந்தை மனசு எனக்குள் இருப்பதாக நினைத்ததால் குழந்தைகளுக்காக எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது’ என்று ஒரு குழந்தைபோல சிரித்துக் கொண்டே முன்பு ஒருமுறை அவர் சொன்ன வாசகம் இப்பொழுதும் என் நினைவில் நிற்கின்றது. குழந்தைகளுக்காகவே எழுதிய யூனி பி. ஜோன்ஸ் என்ற குழந்தை இலக்கியத் தொடரைப் படைத்த பார்பரா பார்க் (டீயசடியசய Pயசம) அவர்களின் பிரிவு பல குழந்தைகளை மட்டுமல்ல, பெற்றோர்களையும் கண்ணீர் மல்க வைத்ததில் அதிசயமில்லை. 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள நியூஜேர்சியில் பிறந்த இவர் தனது 66வது வயதில் (15-11-2013) மரணமானார். அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அதிக அளவிலான அவரது குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்பனையானதற்கு அவரது கற்பனையில் உதிர்த்த குழந்தைகளுக்கான கதைகளும் அதற்கான பாத்திரங்களுமே முக்கிய காரணமாக அமைந்தன. சிறுவர் இலக்கியத்திற்கான பல விருதுகளை இவர் (ளுநஎநn ஊhடைனசநn'ள ஊhழiஉந யுறயசனளஇ யனெ கழரச Pயசநவெள' ஊhழiஉந யுறயசனள) பெற்றிருக்கின்றார். சிறுவர் இலக்கியம் மட்டுமல்ல, சுமார் பதின்மூன்று நாவல்கள்வரை இவர் எழுதியிருக்கின்றார். அவரது மறைவு, குறிப்பாக சிறுவர் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.


ஒவ்வொரு மொழியிலும் குழந்தை இலக்கியங்கள் காலந்தோறும் படைக்கப்படுகின்றன. பல வடிவங்களில் குழந்தை இலக்கியங்கள் வெளிவருவதை இன்றைய காலகட்டங்களில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கான புத்தகங்கள், சிறுவருக்கான ஒலித்தட்டுகள், சிறுவருக்கான ஒளித்தட்டுகள், சிறுவர் கணனி விளையாட்டுக்கள், சிறுவர் திரைப்படங்கள் என்று சிறுவர்களை எந்த வகையிலாவது கவரக்கூடியதாகவும், அவர்களது அறிவைப் பெருக்கக் கூடியதாகவும் அவை வெளி வருகின்றன. எந்த மொழியில் குழந்தை இலக்கியங்கள் சிறப்பாகப் படைக்கப்படுகின்றதோ அந்த மொழி பேசும் குழந்தைகள் அவற்றைக் கற்பதன் மூலம் பிற்காலத்தில் சமுதாயத்தில் முன்னிலை வகிப்பவர்களாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. ஆரோக்கியமான சிறுவர் இலக்கியங்கள் ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதை நடைமுறையில் எங்களால் அவதானிக்க முடிகின்றது.


வட அமெரிக்காவில் மட்டும் ஒரு காலத்தில் சுமார் ஐம்பத்தைந்து மில்லியன் பிரதிகளுக்கு மேல் பார்பரா பார்க்கின் புத்தகங்கள் விற்பனையாகிச் சிறுவர் இலக்கியத்தில் அளப்பரிய சாதனை படைத்திருந்தது. பன்னிரண்டு மொழிகளில் இதுவரை மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதவேண்டும் என்று இவர் ஆரம்பத்தில் நினைத்தும் பார்த்ததில்லையாம். ஏனைய மாணவ மாணவிகளைப்போல இவரும் பல்கலைக்கழகம் சென்று ஏதாவது பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்று விரும்பித்தான் பல்கலைக் கழகம் புகுந்தார். உயர் வகுப்பிற்குச் சரித்திரம் படிப்பிக்கும் ஒரு ஆசிரியையாக வெளி வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பல்கலைக் கழகம் சென்றார். ஆனால் விரைவாகவே அந்தத் துறை தனக்கு ஏற்றதாக இருக்க மாட்டாது என்பதை உணர்ந்து கொண்டதால் அந்த முடிவை மாற்றிக் கொண்டு சிறுவர் இலக்கியம் படைப்பதில் ஈடுபாடு கொண்டார்.


என்னதான் சிறுவர் இலக்கியம் படைப்தில் இவர் பிரபல்யமாக இருந்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இவரது புத்தகங்கள் வெளிவரும்போது சில ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் இருந்தும் வெளிவரும் விமர்சனங்களே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றன. இவரது புத்தகத்தில் பல இலக்கணப் பிழைகள் இருப்பதாக அவர்கள் உவ்வொரு முறையும் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள். ‘குழந்தைகளுக்கு எனது எழுத்து நடை பிடித்திருக்கிறது, எனது எழுத்தை ஆர்வமாகப் படிக்கிறார்கள், முதலில் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், எனவே அதையே நான் தொடர்கின்றேன்’ என்று அவர் ஒரு நேர்காணலின்போது குறிப்பிட்டிருந்தார். இதே போன்ற குறைகளை வடஅமெரிக்காவில் சிறுவர் இலக்கியப் படைப்பாளி என்ற வகையில் நானும் எதிர் கொண்டிருக்கின்றேன். எமது தமிழ் மொழியை எப்படியும் இந்த மண்ணில் நிலைக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தால், கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட நான் ஆரம்ப காலத்தில் தமிழ் சிறுவர்களுக்காக காணெளித் தட்டுக்களையும், பயிற்சி நூல்களையும் வெளியிட்டிருந்தேன். இயல், இசை, நாடகம் என்று சொல்லக்கூடிய முத்தமிழும் அடங்கியதாகத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் அந்தக் காணொளி வெளிவந்திருந்தது. எதற்கெடுத்தாலும் ஆக்கபூர்வமான நிறைகளை விட்டு, குறைகளைச் சொல்வதே ஒரு சிலரின் குணங்கள் என்பதால் நான் குறைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் ஆர்வலர்கள் பலர் எனக்கு அந்த நேரத்தில் தந்த ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது. எமது மொழி; பண்பாடு கலாச்சாரத்தை இந்த மண்ணில் நிலை நிறுத்த அவர்கள் செய்த உதவி என்றென்றும் மறக்க முடியாதது. இன்றும் இத்தகைய சிறுவர் இலக்கிய ஆக்கங்களுக்கு பல தமிழ் ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் பாராட்டுக்கள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. அன்று இத்தகைய சிறுவர் இலக்கிய முயற்சிகளில் பங்குபற்றிய வட அமெரிக்க தமிழ் சிறுவர், சிறுமிகள் பலர் இன்று பல்கலைக் கழகப் படிப்பை முடித்து மிகவும் சிறப்பாக நல்ல நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.


சுமார் ஐந்து வயதிலிருந்து பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்படும் புத்தக்கங்கள் முக்கியமாகக் கவனிக்கப்ட வேண்டியவை. எந்த மொழியாக இருந்தாலும் சரி சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களுக்கு குழந்தைகளைப் பற்றிய உண்மையான ஆர்வமும் புரிதலும் இருக்க வேண்டும். எந்த வயதுக் குழந்தைகளுக்காகப் படைக்கிறோமோ அந்த வயது குழந்தைகளுக்கு இருக்ககூடிய ஆசைகள், உணர்வுகள், விருப்பங்கள், தயக்கங்கள், பயங்கள், கோபங்கள் போன்றவற்றை புரிந்து கொள்ளகூடிய தன்மை இத்தகைய ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். சிறுவர்கள் பொதுவாக உபயோகப் படுத்தும் சொற்களை உள்வாங்கி, தங்கள் ஆக்கத்தில் அவற்றைக் கொண்டு வருவது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் பெற்றோரிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைப்பதால், புரிந்துணர்வோடு எழுதப்பட்ட இத்தகைய சிறுவர் இலக்கியம் உயர்வாகப் பேசப்படும்.


பார்பரா பார்க்கின் யூனி.பி.ஜோன்ஸ் தொடர் வரிசை புத்தகங்கள் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்ட புத்தகங்களாகையால் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோரும் பிள்ளைகளுக்காக வாசிக்கும்போது, குழந்தைகளாக மாறிவிடுகின்றார்கள். ‘றண்டம் கவுஸ்’ வெளியீடான இந்தப் புத்தகத்தில் மிகவும் எளிமையான சிறிய வசனங்கள், படிக்கும் ஆர்வத்தை தூண்டும் படியான சித்திரங்கள் ஆகியன அடங்கியிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். ‘யூனி பி. ஜோன்ஸ் அன்ட் ஹே பிக் பாற் மவுத்’ (துரnநை.டீ.துழநௌ யனெ hநச டீபை குயவ ஆழரவா) என்ற புத்தகத்தில் ‘நான் பாலர் வகுப்பில் படிக்கிறேன். எனது வகுப்பறை இலக்கம் ஒன்பது. அங்கே பல சட்டதிட்டங்கள் உண்டு. சத்தம் போடக்கூடாது, நடைபாதையில் ஓடக்கூடாது, ஏனைய பிள்ளைகளின் வயிற்றிலே தலையால் முட்டித் தள்ளக்கூடாது’ இப்படித்தான் சிறுவர்களுக்கு ஏற்ற சிறிய வசனங்கள் அமைந்திருக்கின்றன. இலக்கணப் பிழைகள் இருந்தலும் ஆரம்ப நிலையில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய புத்தகமாக இது இருப்பதே இதன் சிறப்பாகும்.


ஒரு படைப்பாளி என்ற முறையில் சிறந்த ஒரு சிறுவர் இலக்கியப் படைப்பாளியான பார்பரா பார்க் அவர்களை நாம் இழந்து விட்டோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. அவர் இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற ஆக்கங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதே எல்லோர் மனதிற்கும் ஆறுதல் தருகின்றது.

தமிழுக்கும் செம்மொழி என்று பெயர்

தமிழுக்கும் செம்மொழி என்று பெயர்

குரு அரவிந்தன்

தமிழுக்கும் அமிழ்தென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சிக்கவி பாரதிதாசன் குறிப்பிட்டது போல தாய் மொழி மீது பற்றுக் கொண்டவர்களுக்கு இந்த ஆதிமொழி அமிர்தமாகத்தான் இருக்கின்றது. ஒவ்வொரு தமிழ் கவிஞரும் தமிழ் மீது கொண்ட உண்மையான பற்றுக் காரணமாக தங்கள் தாய் மொழியைப் புகழ்வது என்பது தொன்று தொட்டு வழக்கமாகி விட்டது. மொழி வளர்ச்சி என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. பேச்சு வழக்கிலிருந்து மெல்ல மெல்ல வளர்ந்து எழுத்து வடிவம் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகள் எடுக்கலாம். காலத்தை மட்டுமல்ல, எத்தனையோ இடர்களை எல்லாம் கடந்து வந்த எங்கள் தமிழ் மொழி இன்று செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.


‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்று புகழப்பட்ட செந்தமிழைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்த்ததால் மூவேந்தர் வளர்த்த தமிழ் என்றும் எங்கள் தமிழைச் சொல்வர். இந்த மன்னர்கள் தங்கள் காலத்தில் வாழ்ந்த புலவர்களைக் கொண்டே தமிழ் வளர்த்தார்கள். எழுத்துநடை அந்தக் காலங்களில் இருக்கவில்லை என்பதால் எல்லாம் பாடல் வடிவிலேயே அமைந்தன. இந்தத்தமிழ் இயல், இசை, நாடகத்தைத் தன்னகத்தே கொண்டதால் தமிழை முத்தமிழ் என்றார்கள். தமிழரின் பொற்காலம் என்றால் சங்ககாலத்தைத்தான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். முதல், இடை, கடை என்று மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக அறியமுடிகிறது. தென்மதுரை, நாகநன்னாடு, கபாடபுரம் போன்ற இடங்களில் இருந்ததாகத் தெரியவரும் இச் சங்கங்களை முத்தமிழ்ச்சங்கம் என்றார்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத் தமிழ் சங்கங்கள் ஆழிப்பேரலைகளால் அழிந்ததாகக் கூறுவர். இதைவிட நான்காவது தமிழ் சங்கம் என்று ஒன்று காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகச் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தமிழ் மொழி செம்மொழியாக வளம்பெற, எம் முன்னோர் விட்டுச் சென்ற இலக்கிய நூல்களே முக்கிய காரணமாயிருந்தன. செம்மொழி என்றால் செழுமையான மொழி என்றும் அர்த்தம் கொள்ளலாம். செழுமை என்றால் செல்வச் செழிப்பு கொண்ட மொழி என்றும் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இலக்கிய மரபைத் தமிழ் கொண்டுள்ளது. இன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அடையாளம் காண்பதற்கும் இந்தச் சங்ககால நூல்களே உதவி செய்தன. அகத்தியரால் இயற்றப்பட்ட இலக்கணநூலான அகத்தியத்தையே தமிழுக்குக் கிடைத்த மிகப் பழைய நூலாகச் சிலர் குறிப்பிடுவர். முழுமையாக இந்த நூல் கிடைக்கவில்லை என்பது பெரிய குறையாகும். அடுத்து அறியப்பட்ட நூலான, கி.மு. 200 முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடுஇணையாக வேறு எந்த நூல்களும் தமிழில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதேபோல பத்துப்பாடல், எட்டுத்தொகை, அகநாநூறு, புறநாநூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல் என்று சங்ககால நூல்கள் பல காலத்தால் அழியாமல் இன்றும் இருக்கின்றன. இதே போலத்தான் திருவள்ளுவர் தந்த திருக்குறளை உலகப் பொது மறையாக அறிஞர்கள் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பரின் கம்பராமாயணம் போன்றவற்றில் தமிழின் செழுமையை முழுமையாகக் காணலாம்.
இதேபோல ஐஞ்சிறு காப்பியங்களையும் குறிப்பிடலாம்.

உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி போன்ற நூல்களும், அவ்வப்போது எழுதப்பட்ட நீதி நூல்களான நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலகநீதி, நன்நெறி போன்றவையும் தமிழுக்கு உரம் சேர்த்தன.


தமிழுக்கு உரம் சேர்த்த இலக்கிங்களில் நாயன்மார்களின் பக்தி இலக்கியமும் அடங்கும். இத் தொகுப்பை பன்னிருதிருமுறைகள் என்பர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்களும், பெரியபுராணத்தைத் தந்த சேக்கிழார் பெருமான், காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி, போன்ற பலரும் தமிழுக்குப் பக்தி இலக்கியத்தைத் தந்துவிட்டுச் சென்றார்கள். அதேபோல வைஸ்ணவ சமய நூல்களும் இதில் அடங்கும். குறிப்பாக திருவந்தாதி, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழ் மொழி இன்று செழுமை பெற்றிருப்பதற்குப் பக்தி இலக்கியமும் ஒரு காரணமாகும்.


பிற்காலத்தில் கிறிஸ்துவ மத குருமார்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல வழியிலும் உதவினார்கள். இவர்களில் முக்கியமாக கால்டுவெல் வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி போன்றவர்களைக் குறிப்பிடலாம். இத்தாலியரான பெஸ்கி தமிழ் மீது கொண்ட பற்றுக் காரணமாக தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். இவர்தான் தேம்பவாணி என்ற அரும்பெரும் காவியத்தைத் தந்தவர். அந்த வகையில் நபிகள் நாயகத்தின் வரலாற்றைச் சீறாப்புராணம் என்ற பெயரில் தந்த உமறுப்புலவர் பற்றியும் குறிப்பிடலாம்.


முற்காலத் தமிழை அறியத் தொல்காப்பியம், அகத்தியம் போன்ற சங்க இலக்கியங்கள் உதவியது போல, இடைக்காலத் தமிழை அறிய தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்களும், தற்காலத் தமிழை நன்நூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்களும் எடுத்துக் கூறுகின்றன. இவை எல்லாம் எம்மினத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்களாகும்.
புலம் பெயர்ந்த மண்ணில் இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பலர் மறுக்கிறார்கள். தென்னிந்தியாவில் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த வட்டார வழக்கு மொழிகள் எப்படி வேறு மொழிகளாக மாறினவோ, அதேபோல புலம்பெயர்ந்த தமிழ் மொழியும் வேற்று மொழிக் கலப்பால் மாறிவிடச் சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த மண்ணில் எங்கள் மொழி அழியாது என்று சில தமிழ் அறிஞர்கள் உறுதியாகச் சொன்னாலும், மொழி அழியாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று அவர்களைக் கேட்டால் அதற்கு அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். சிலர் மேடையில் முழங்கிவிட்டுச் செல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். ஒரு மொழி அழிந்து போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மக்களின் இடப்பெயர்ச்சி, வேறுமொழிகளின் கலப்பு, காலனி ஆதிக்கம், பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம், இனப்படுகொலை, ஊடகங்களின் அலட்சியம், பெற்றோரின் கவலையீனம், போன்ற பல காரணிகளை இங்கே முக்கியமாகக் குறிப்பிடலாம்.


ஓலைச் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட தமிழ் இன்று கணனி எங்கும் பரவியுள்ளது. எமக்குக் கிடைத்திருந்கும் இந்த நவீன வசதிகளைப் பாவித்து நாம் எமது மொழியை விருத்தி செய்து முடிந்தளவு பாதுகாக்கவேண்டும். வேற்று மொழிகளில் அறிமுகமாகும் புதுச் சொற்களைத் தேவையேற்படின் நாமும் அதற்கேற்ற தமிழ் மொழியில் பாவிக்கப் பழகிக் கொள்வேண்டும். இல்லாவிட்டால் எமது மொழி காலத்தோடு ஒன்றிப் போகாமல் பின்தள்ளப்பட்டுவிடும். எது எப்படியோ எங்கள் மொழியும், எங்கள் இனமும் புலம் பெயர்ந்த மண்ணில் நிலைத்து நிற்கவேண்டுமானால், தமிழ் மொழியை வளம்படுத்தத் துரிதகதியில் சிறந்த நல்ல எதிர்காலத் திட்டங்களை நாம் நடைமுறைப் படுத்தவேண்டும். தமிழ் மொழி செம்மொழியாகத் தொடர்ந்தும் நிலைக்க வேண்டுமானால்;, காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் தாய் மொழியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தமிழர் தகவல்

Sleep apnea

பகலில் தூக்கம் வருகிறதா?

(மாலினி)

தூக்கம் என்பது மனிதருக்குத் தேவையானது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதுபோல தூக்கம் குறைந்தாலும் அல்லது அளவிற்கு அதிகமாகக் கூடினாலும் அது உடல் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். தூக்கத்தை உறக்கம், நித்திரை என்றெல்லாம் சொல்வார்கள். ஊரிலே இப்படியான தூக்கக் குறைபாடுகள் இருந்தாலும் அதை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அதன் பின்விளைவுகள் என்ன என்பதையும் நாங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் மேலை நாடுகளில் ஒருவருடைய நித்திரை சம்பந்தமாக அதிக கவனம் செலுத்து கின்றார்கள். ஒரு குடிமகன் ஆரோக்கியமா இருந்தால் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.


நித்திரையின்மைக்குரிய அறிகுறிகள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். மன அழுத்தம், அல்லது கவலை காரணமாக உங்களுக்கு நித்திரை வராமல் போகலாம். அல்லது சோர்ந்துபோய் படுக்கையில் படுத்து அசந்துபோய் தூக்கத்தில் இருக்கலாம். அது மனதில் ஏற்படும் பாதிப்பால், தற்காலிகமாக நடைபெறும் மாற்றங்கள். ஆனால் சிலீப் அப்னியா (Sleep apnea) என்பது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உங்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலால் ஏற்படும் பாதிப்பாகும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது உங்களை அறியாமலே பல தடவைகள் உங்கள் தொடர் சுவாசத்தைச் சரியான முறையில் நடைபெறாமல் தடை செய்யப்படுவதே சிலீப் அப்னியா என்பதாகும். இந்த நோய் இருந்தால், வைத்தியர்களின் கணிப்பின்படி ஆழ்ந்த தூக்கத்தின்போது, சுமார் நூறு தடவைகளுக்குமேல் உங்களுக்கு மூச்சுத் தடைப்படுவதாகக் கருதுகின்றனர்.


இதன் பாதிப்பு உடனே தெரியாவிட்டாலும் காலப்போக்கில் இது அதிகரிக்கும் போது பல உடல் உபாதைகளை எதிர்நோக்க வேண்டிவரும். உங்கள் மூளைக்குச் செல்லும் பிராணவாயு அடிக்கடி தடைப்படுவதால் அதில் உள்ள செல்கள் செயலிழக்க ஆரம்பிக்கும். செல்கள் செயலிழப்பதால் ஞாபகமறதி மெல்ல மெல்ல அதிகரிக்கும். இது பலருக்குத் தெரிவதில்லை. அதற்குரிய முக்கியமான அறிகுறி என்னவென்றால் காலையில் தினமும் தலைவலி, சோர்வு போன்றவை இருக்கும், பகலில் வழமைக்கு மாறாகத் தினமும் தூக்கம் வரும். முன்பெல்லாம் வயது போய்விட்டது அதுதான் மறந்து போனார் என்று ஒருவரது வயதை வைத்து அவரைக் கணிப்பிடுவோம். ஆனால் இன்றைய உலகில் ஞாபகமறதி வயது வித்தியாசம் இல்லாமல் நாற்பது ஐம்பது வயதில் கூடச் சிலருக்கு வரலாம். இதனால் குடும்ங்களுக்குள், இனத்தவர்களுக்குள் எல்லாம் புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஞாபகமறதி காரணமாக உங்கள் வேலையில் தவறுகள் ஏற்படலாம். அதனால் வேலையை விட்டுத் தூக்கிவிடலாம்.  மறந்துவிட்டேன் என்று சொன்னாலும் அதற்குரிய காரணத்தைப் பலர் புரிந்து கொள்வதில்லை. இதனால் காரணம் என்னவென்று சொல்லமுடியாமல், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பலர் அவதிப்படுவதை அவதானித்திருக்கிறேன்.


பலராலும் புரிந்து கொள்ள முடியாத இந்த சிலீப் அப்னியா என்ற நித்திரையில் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுத் தடைப்படுதல் சுமார் 20 கோடி மக்களைப் பாதித்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. தூக்கத்தில் மூச்சுத் தடங்கி நிற்றல், தூக்கத்தில் மைய மூச்சுத் தடங்கி நிற்றல், கலந்த நிலையில் மூச்சுத் தடங்கி நிற்றல் என்று இதை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள். இன்னும் பலர் உடனடிப் பாதிப்பு இல்லாததால், இப்படி ஒரு நோய் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்கின்றார்கள். சுமார் 50 விகிதமான இதயநோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைவிட உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரழிவு நோய் உள்ளவர்களும்கூட இதனால் பாதிபடைந்திருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால் காலம் கடத்தாமல் முடிவெடுத்தால், இந்தக் குறைபாட்டை இலகுவில் நிவர்த்தி செய்ய முடியும் என்பதுதான்.
சிலீப் அப்னியா ஒருவருக்கு இருக்கிறதா என்பதற்கான சில பொதுவான அறிகுறிகளை வீட்டில் உள்ளவர்கள் சில சமயங்களில் அவதானிக்கலாம்.

அதற்கான அறிகுறிகள்:
அளவிற்கு அதிகமான பகற்தூக்கம்
அதிகசத்தம் போட்டுக் குறட்டைவிடுதல்
ஆழ்ந்த நித்திரை நேரத்தில் மூச்சுத் திணறுதல்
அமைதியற்ற நித்திரை
அவதானக் குறைவு
மனவழுத்தம்
காலையில் தலைவலி
உயர் இரத்த அழுத்தம்.


அகேனமானவர்களுக்குத் தங்களுக்கு சிலீப் அப்னியா இருப்பதே தெரியாது. அப்படி இருந்தாலும் அதை வேறு நோய் என்று தவறாகப் புரிந்து தவறான மருத்துவம் செய்து கொள்கிறார்கள். பெரிதாகச் சத்தம் போட்டுக் குறட்டை விடுபவர்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக அவர்கள் தூங்கும் போது அவர்களுக்கு அருகே படுத்திருப்பவரால்தான் இதை இனங்காணமுடியும். நீங்கள் சத்தம் போட்டுக் குறட்டைவிடுகின்றீர்களா, பகலில் அடிக்கடி சோர்வாக இருக்கின்றீர்களா, நீங்கள் தூங்கும்போது மூச்சுத் திணறுவதாக யாராவது முறையிட்டார்களா, உங்களுக்கு இரத்த உயரழுத்தம் இருக்கிறதா, உங்கள் கழுத்தின் சுற்றளவு ஆண்களுக்குப் 17 அங்குலத்திற்கு மேற்பட்டதாயும், பெண்களுக்கு 16 அங்குலத்திற்கும் மேற்பட்டதாய் இருக்கிறதா, ஒருவருடைய வயதுக்கேற்ற நிறையைவிட அதிகமாக இருக்கிறீர்களா, அப்படியானால் இதைப்பற்றி உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து ஆலோசியுங்கள்.


இப்படியான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் முறையிட்டால் அவர் அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வார். இதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் ஓரிரவு உங்களைத் தங்கவைத்து, நீங்கள் தூங்கும்போது (ளுடநநி ளவரனல) அதற்குரிய பரிசோதனைகளைச் செய்வார்கள். உங்களுக்குச் சிலீப் அப்னியா இருப்பதாகக் கண்டறிந்தால் அதற்குரிய (CPAP) காற்று செலுத்தி இயந்திரத்தை (Continuous Positive Airway Pressure) பரிட்சார்த்தமாகக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். இரண்டு வாரத்தில் மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சொல்வார்கள். இதற்காக மருந்துகள் எடுக்கவோ அல்லது பொதுவாக சத்திரசிகிட்சை செய்யவோ தேவையில்லை. பலன் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுக்கான இயந்திரத்தை வாங்கிப் பலனடையமுடியும். இதில் பல விதமான சிறிய இயந்திரங்கள் இருக்கின்றன.

தினமும் படுக்கைக்கு அருகே இதை வைத்துப் பாவிக்க முடியும். முகமூடி போல மூக்கை மட்டும் மூடக்கூடிய வடிவமைப்போடு குழாய்கள் இருக்கின்றன. இவை தேவைக்கு ஏற்ப அளவான காற்றை உள்ளே செலுத்திக் கொண்டிருக்கும். சிலீப் அப்னியா உள்ளவர்களுக்கு உதவும் முகமாக அரசாங்கம் நீங்கள் வாங்கும் இயந்திரத்திற்கான ஒரு பகுதி செலவைத் தான் ஏற்றுக்கொள்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சிலீப் அப்னியா உள்ளவர்கள் வண்டி ஓட்டும்போது சோர்ந்து போவதால், வீதி விபத்தில் அகப்பட்டுக் கொள்வதும் 15 விகிதம் அதிகமாகவே உள்ளது. எனவே காலம் தாழ்த்தாது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இருப்பதாகச் சந்தேகப்பட்டால் உடனடியாகக் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள். தேவை ஏற்படின் அவர் அதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுப்பார். சிலீப் அப்னியா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அதனால் வரும் பின்விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால் வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

நன்றி: தமிழர் தகவல் ஆண்டு மலர்

Thursday, February 13, 2014

Balu Mahendra - பாலுமகேந்திராமூன்றாம் பிறை தந்த பாலுமகேந்திரா எம்மைவிட்டுப்  பிரிந்து 

விட்டார்.

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாலுமகேந்திரா தனது 

75வது வயதில் 

எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இலங்கையில் பிறந்த இவர் 

தமிழ்நாடு  சென்று திரைப்படத்துறையில் பல சாதனைகள் 

படைத்திருந்தார். பாலநாதன் மகேந்திரன் என்ற பெயர் கொண்ட இவர் 

இலங்கை மட்டக்களப்பில் உள்ள 

அமிர்தகழி என்ற இடத்தில் 1939 ஆம் ஆண்டு பிறந்தார். 

அழியாதகோலம், மூடுபனி,வீடு, அது ஒரு கனாக்காலம் 

மூன்றாம்பிறை போன்ற வெற்றிப் படங்களைத் 

தமிழ் சின்மாவுக்குத் தந்த இவரது மகனும் சிறந்த  கௌரிசங்கர் 

ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றுகின்றார்.

கடைசியாக அவரது தலைமுறைகள் என்ற படம் 

வெளிவந்திருந்தது. தேசிய விருதுகளையும், 

தென்னிந்திய பிலிம்பேயர் விருதுகளையும்,

நந்தி  விருதுகளையும் பெற்றுள்ளார்.Thalaimuraikal

Director Balu Mahendra suffered a heart attack on Thursday morning and died in a hospital, reports said. 

He began his life as a cinematographer and went on to make many memorable films, including Moondram Pirai , Veedu, 

He won five national awards for his films and a host of state and private awards. 

Mahendra had recently released his directorial venture 'Thalai Muraigal' which depicts the relationship 

between a grand-father and his grandson, in which he played the role of a protagonist.

Deeply saddened on the demise of Balu Mahendra. Please accept our condolences to the family.

Wednesday, February 12, 2014

பனிவயல் உழுதல் - Snow Ploughing

பனிவயல் உழுதல்

Snow Ploughing


ஆற்றோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடுகட்டி
 ஜோராகக் குடியிருந்த - காலம்போய்தெருவோரம் பனி எடுத்து அழுதழுது குவித்துவிட்டு  மோட்கேஜ்ச் கட்டுகிற - காலமிது..புதிய பூமி


புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகின்றது


நாம் வருகையிலே எம்மை வரவேற்கப்
பூ மழை பொழிகிறது...

Monday, February 10, 2014

FREE OUTGOING

FREE OUTGOING 

Kuru Aravinthan


Free Outgoing, directed by Kelly Thorton and written by Anupama Chandrasekhar, premiered at Canada, Toronto’s Factory Theater Main stage on January 28th. The performance was helped in part by Nightwood Theater. Started in 1979, Nightwood is Canada’s oldest national women’s theater.

The screenwriter, Anupama, is an Indian play writer from the fast-growing city of Chennai in southern India. Her plays have gained a global audience, including theaters in the US, India, and Europa. Anupama was formerly a journalist before making the switch to playwriting. Free outgoing, first directed by Indhu Rubasingam, premiered at the Royal Court Theater in London in 2007. In 2008, it moved shortly to the Traverse Theater for the Edinburgh Fringe Festival. Anupama was shortlisted for the John Whiting Award and the Susan Smith Blackburn Prize. She also placed runner up for the Evening Standard Theatre Award’s Charles Wintour Prize for Most Promising Playwright in 2008. Some of her other playwriting include Acid, The Snow Queen, Disconnect, and Closer Apart. The screenplay adaption of Free Outgoing was a finalist for the Sundance International Screenwriter’s Lab.

Screenwriter Anupama, Malini and Kuru Aravinthan

Free Outgoing follows the downward spiral of Theepa, a 15 year-old girl living in the bustling city of Chennai, India. When the sex video with her boyfriend recorded on her mobile phone makes its way on the Internet, she must deal with the fallout and hysteria. Theepa and her brother quickly find themselves expelled from school. Malini, a single mother, destroys all of the Western technology found in their flat and locks Theepa in her room. As the local infrastructure breaks down, the media and accompanying mob increasingly blame Theepa and her family for their recent plights. Free Outgoing pits new world technology and liberalism against the traditional conservatism of India.

Anupama Chandrasekhar was inspired to write the play by several real incidents that occurred in India, including two students in Delhi who filmed themselves having sex and the ensuing public outcry.

The last performance at the Factory Theater Mainstage is on February 16th, 2014.
In Canada this plays directed by Kelly Thornton Starring Anusree Roy, Sanjay Talwar, Ash Knight, Andrew Lawrie, Ellora Patnaik and Asha Vijayasingham.
About the director and Actors:
Kelly Thornton - Director
Kelly is an award-winning director and dramaturg and has been the Artistic Director of Nightwood Theatre since 2001.
Anusree Roy - Malini
Anusree Roy is a Governor General’s Award nominated and Dora Award winning writer and actor whose work has toured nationally.
As a recent graduate of Ryerson Theatre School, Andrew always looks to involve himself in work that truly matters to both artist and audience.
Ash has acted in the U.K. Romeo & Juliet,  Uganda Cake and Canada  Midsummer Night’s Dream, The Count of Monte-Cristo and Carried away on the Crest of a Wave among others.
Asha Vijayasingham - Usha Asha is an actor, voiceover artist and singer. Asha also participated in Nightwood Theatre’s playwright initiative Write From The Hip and a staged reading of her work was presented at the Groundswell Festival.
Ellora Patnaik - Nirmala/Kokila Ellora Patnaik was born into an artistic family. She is a graduate of the American Academy of Dramatic Arts and was selected for Company in her third year.
Sanjay Talwar - Ramesh Sanjay Talwar returns for his second season at the Shaw Festival appearing as the Senior Judge in Peace in Our Time: A Comedy and as Captain Brice in Arcadia.