Thursday, March 13, 2014

Legacy of the pioneers - Malaysia

Legacy of the pioneers - Malaysia

Kuru Aravinthan

mDgtk; GJik..! 

FU mutpe;jd;


mayfk; Nehf;fp… (9)

மலேசியாவில் இருந்து நண்பர் ஒருவர் சில படங்களை அனுப்பியிருந்தார். பாத்துக்கேவ் முருகன் ஆலயத்தில் தைப்பூசம் மிகவும் சிறபப்பாகக் கொண்டாடப் படுவதாகவும், ஆனால் வேறு சில கோயில்களில் தைபூசத்தின் பெயரைச் சொல்லிக் கலாச்சார சீரழிவுகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சில கோயில்களில் திருவிழாவிற்கு வருபவர்களின் ஆடை அலங்காரங்கள் சகிக்க முடியாமல் இருப்பதாகவும், காவடி எடுக்கும்போது வாயிலே சுருட்டுப் புகைத்துக் கொண்டு சிலர் காவடி ஆடுவதாகவும், பக்தி உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக களியாட்ட உணர்வு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வேற்று மதத்தவர்கள் தம்மைப் பார்த்து எள்ளி நகையாடுவதாகவும் அவர் மனம் நொந்த நிலையில் குறிப்பிட்டிருந்தார். தகுந்த முறையில் அடுத்த தலை முறையினர் வழி நடத்தப்படாவிட்டால், மலேசியாவில் மட்டுமல்ல தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் மண்ணில் இனிமேல் இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதற்கான எச்சரிக்கையாக நான் அவரது முறைப்பாட்டை எடுத்துக் கொண்டேன்.


மலாக்காவில் முக்கியமான பல இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. புராதன கட்டிடங்கள் பல இப்போது புது மெருக்கோடு இருக்கின்றன. அகேனமான டச்சுக்காரர் கட்டிய கட்டிடங்கள் சிகப்பு நிற வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கின்றன. அருகே உள்ள மலாக்கா ஏரியின் படகுச் சவாரி சிறப்பானது என்று சொன்னார்கள். குறிப்பாக மாலை நேரத்தில் ஏரிக் கரையோரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று சொன்னார்கள். எனவே மாலை நேரப் படகுச் சவாரியை ஏற்றுக் கொண்டோம். அதிகமான உல்லாசப் பயணிகள் அந்தப் படகுச் சவாரிக்காகக் காத்திருந்தார்கள். மலாக்கா நகரத்தை நீரோடை ஊடாகச் சுற்றிவரும் அந்தப் படகுச் சவாரி கண்ணுக்குக் குளிர்மையாக இருந்தது. பல விடுதிகள், உணவகங்கள் எல்லாம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுக் கலகலப்பாக இருந்தன. உணவகங்கள் உல்லாசப் பயணிகளால் நிறைந்து காணப்பட்டன. அவர்களின் விசேட உணவுகள் சிலவற்றைத் தெரிவு செய்து நாங்களும் சாப்பிட்டு விட்டு கோலாலம்பூர் நோக்கிப் பெருந்தெருவில் பயணமானோம்.


போகும் வழியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரின் மாமனார் மிகவும் வயது முதிர்ந்தவர், அந்த நாட்களில் மலேசியாவிற்கு வந்து அங்கேயே தங்கி விட்டவர். ஞாபக சக்தியோடு ஆரோக்கியமாய் இருந்தார். அவருடன் அவரது இளமைக் கால வாழ்க்கை பற்றி உரையாடினேன். உலக மகா யுத்தத்தின்போது தாங்கள் அடைந்த துன்பத்தைப் பற்றி விபரித்தார். தன்னோடு அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து மலாயா வந்தவர்களைப் பற்றி நினைவு படுத்திச் சொன்னார். தமிழ் மொழியையும் மதத்தையும் தக்க வைப்பதற்காகத் தாங்கள் எடுத்த முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டார். நான்கு தலை முறையைக் கண்டு விட்டாலும்; அவர்கள் எடுத்த முன் நடவடிக்கைகளால் இப்பொழுதும் தமிழ் மொழியும் மதமும் அங்கே நிலைத்து நிற்கின்றது. எங்கள் பண்பாடு கலாச்சாரதத்தைக் கூடிய வரையில் காப்பாற்றுவதில் இன்றும் அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். கூடிய வரையில் வீட்டில் தமிழிலேயே கதைக்கின்றார்கள். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மருமகனும் அருகே இருந்தார். தொடக்க காலத்தில் மலேயா வந்த யாழ்ப்பாணத் தமிழர்களின் பெயர்கள் ஏதாவது தெரியுமா என்று மாமனாரிடம் கேட்டேன். அப்போது மாமனாரின் புத்தகம் ஒன்று இருக்கிறது பார்க்கப் போகிறீர்களா என்று மருமகன் என்னிடம் கேட்டார். ஓம் என்று சொல்லி ஆவலுடன் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். மிக முக்கியான சில தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இருந்ததை அவதானித்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தமிழர்களைப் பற்றிய முக்கியமான செய்திகளை அவர்களின் ஆக்கங்களை ஆவணப் படுத்துங்கள் என்று நான் அடிக்கடி எழுத்து மூலமும் மேடைகளிலும் வேண்டுகோள் விடுவதில் அர்த்தம் இருக்கிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். மலாயாவில் தமிழர்களின் முன்னோடிகள் என்று சில தமிழரின் பெயர்களை அந்த நூலில் ஆவணப்படுத்தியிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு வந்து குடியேறிய பலரின் பெயர்கள் அந்த ஆவணத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. எல்லோருடைய விபரங்களும் எடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தெரிந்த விபரங்களைப் பதிந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அங்கே உள்ள அடுத்த தலை முறையினருக்கே இது பற்றிய விபரம் தெரிந்திருக்கவில்லை. மலேசியாவில் போட் வெல்ட் என்ற இடத்தில் இருந்து ராய்ப்பிங் என்ற இடத்திற்கு 1885 ஆம் ஆண்டு எட்டு மைல் நீளமான தொடர் வண்டிப் பாதை ஒன்று போடப்பட்டது. இது சம்பந்தமாக அப்போது பெராக் நிறுவனத்தில் வேலை செய்த யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் 22 மைல் நீளமான தொடர் வண்டிப்பாதை ஒன்றும் கலாங் என்ற இடத்தில் இருந்து கோலாலம்ப+ருக்குப் போடப்பட்டது.


 Legacy of the pioneers   என்ற ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில பெயர்களை இங்கே தருகின்றேன். தொடர்வண்டி நிலைய அதிகாரி, மேற்பார்வை அதிகாரி, பயணச்சீட்டு பரிசோதகர், எழுதுவினைஞர் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களாக இவர்கள் இருந்தார்கள். கோலாலம்பூர் தொடர்வண்டி நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த வி. சின்னப்பா (1887) என்பவர் பின்நாளில் சிலாங்கூர் இலங்கைத் தமிழர் அமைப்பின் தலைவராக இருந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன. இவர்கள் உங்கள் ஊரவராகவோ அல்லது இனத்தவராகவோ கூட இருக்கலாம். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு சென்று குடியேறியவர்கள். பிற்காலத்தில் இவர்களில் சிலர் தங்கள் ஊருக்கு வந்து கல்வீடு கட்டி மலாயன் பென்சனியர் என்ற காரணப் பெயரோடு குடியேறியிருக்கலாம். இவர்களின் நான்காவது தலைமுறையினர் இப்பொழுதும் அங்கு மிகவும் சிறப்பாக வாழ்கிறார்கள். இத்தகவலை எங்கேயாவது ஆவணமாகப் பதிய வேண்டும் என்பதால் இவர்களின் பெயர்களை இங்கே தருகின்றேன்.


Extract from The Perak Establishment List 1882-1892

V. Arunasalam,  Candia,  R.M. Jeremiah,  R. Mutukumaru, M.Naganather, S.Ponniah, S.Sabapathy, C.Sangarapillai, J.M.Sinnathamby, C.M. Thamba Pillai , C. Supramaniam, N.Thambo, V.Thamby Pillay, C.Wallupillai, A.Wyramuthu, K.Candia, A. Thuraiappah, V. Suppiah, S. Elengandan, V. Waitilingam,T.C. Thomas Pillai, V. Thamby Pillai, N. Joseph Pillai, M. Chelliah, N. Manar, V. Kanapathy Pillai, K. Sabapathy, T.S. Duraiswamy Pillay,  P. Tilliambalam,   C. Arulambalam.


Selangor Government Railway -1886-1897

C.K .Sabapathy, G.Ramalingam, S.Seevaratnam, G. Saravanamuthu, V. Arumugam, A. Valupillai, S. Thuryappah, V. Sinnappah, S. Supramaniam, R. Sathasivam, K.Somasundram, K. Jesudasan, C. Arunasalam, K.Valupillai, S.S. Manickam, A. Seeniappah. R. Chellappah, S. Chelliah, V. Arumugam, T. Valupillai, N. Nadarajah, S.Thambiaya, S.Thurayappah, S. Canapathy Pillay, M.Sinnappah, C.Canagasabay, J. Visvalingam,

Some of the Later Immigrants 1895-1901

N.Kunaratnam, A.Thambirajah, K.Muthiah, S.Chelliah, S.T.Thambiah, A.Namasivayam, S.Chellappah, K. Thambiah, S. Sinnathamby, P.Kanagasooriar, S.N. Kandiah, S.Subramaniam, T. Chinnathurai. V.Arunachalam, M. Saravanamuthu, V. Chellathurai, V.Subramaniam, S.Kandiah, V. Manickam, A. Kandiah, A. Thanapalasingam.
No comments:

Post a Comment