Thursday, November 27, 2014

Mahajana OSA Canada - Montreal


                     Mahajana College OSA - Montreal Awards 


Montreal Award winners with Kuru AravinthanTamil Award winner with Kuru Aravintha


Speech by Kuru AravinthanSunday, November 2, 2014

TAMIL MIRROR AWARDS - 2014


கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா

(மணிமாலா)


The Tamil Mirror takes much pride in presenting 
Kuru Aravinthan the Literary Award 2014.


கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் (Tamil Mirror) ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய உரையில் இருந்து சில வரிகள்:
Few words from Kuru Aravinthan:

'Hi, I would like to thank The Tamil Mirror for the great Literary award and also Mr. Charles Devanayagm, Mr. A. Jesuthasan.and all the members of the Tamil Mirror family.

I would also like to thank my loving family and friends and all the media for all their support.

I started writing in the early 70's in SriLanka, it was my passion.  I was lucky to gain a lot of readers and with their support and encouragement,

I was able to grow to be the person I am today.  Thanks again for the wonderful award.' 

 2011 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் நினைவு குறநாவல் போட்டியில் ‘தாயுமானவர்’ என்று குறுநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்தன் 2012 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத்திற்கான விருதையும் பெற்றவர் மட்டுமல்ல, இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Principal Mr.P. Kanagasabapathy And Kuru Aravinthan
தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகை நடத்திய விருது வழங்கும் விழா – 2014 இன் போது இலக்கியத்திற்கான விருதைப் பெற்ற குரு அரவிந்தனை முன்னால் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சிவநாயகமூர்த்தி, சொப்கா என்றழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஏ. ஜேசுதாசன்,  உதவிப் பொருளாளர் திரு. பாலசுப்ரமணியம், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன், ஹரி ஆனந்தசங்கரி  மற்றும் விழாவிற்கு வருகை தந்திருந்த நண்பர்கள், பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் பாராட்டி வாழ்த்தியிருந்தனர். கடந்த இருபத்தைந்து வருடகாலமாகக் கனடாவில் குரு அரவிந்தன் அவர்கள் ஆற்றிவரும் இலக்கிய, தன்னார்வத் தொண்டைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அவரைப் பாராட்டி கௌரவிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனான குரு அரவிந்தனுக்கு, இலக்கிய கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரன் அனுப்பிவைத்த, வாழ்த்துச் செய்தியிலிருந்து சில வரிகள்:

‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில், கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது. ‘

LITERARY AWARD - 2014

‘குரு அரவிந்தன் அவர்களுடைய எழுத்துகளைத் தமிழிலக்கிய உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதற்கு உரிய கௌரவமும் மதிப்பும் அளித்து வந்துளது என்பது வெளிப்படை.மகாஜன இலக்கிய பாரம்பரியத்தை அனைத்துலக நிலையில பிரதிநிதித்துவப்படுத்தி நிற்போருள் இன்று முக்கியமான ஒருவராக குரு அரவிந்தன் பரந்த தளத்தில் இயங்கி வருவது வியப்புக்குரியதன்று. இந்த இயங்குநிலையானது இன்றுபோல இனிவருங்காலங்களிலும் தொடரவேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.’ என்று கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் குரு அரவிந்தனை வாழ்த்தியிருந்தார்.


'குரு அரவிந்தனுடைய கனடா நோக்கிய புலப்பெயர்வு அவரை ஒரு தனித்துவம் நிறைந்த படைப்பாளியாக மிளிர வைத்தது. ‘கனடா உதயன்’ பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்த்தைப் பெற்றவர், மடைதிறந்த காட்டாற்று வெள்ளம் போல எழுதி எழுதிக் குவித்தார். இவர் உலகளாவிய இரீதியாக சிறுகதைகள், நெடுங்கதை களுக்கான பல பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 

தமிழ் நாட்டில் ஆனந்த விகடன் இவருக்கான வாசலைத் திறந்து வைத்தது. அதன் வாராந்தர வெளியீடுகளில் எழுதியது மாத்திரமல்லாமல் விகடன் தீபாவளி மலர், விகடன் பவளவிழா மலர் என அவர்களுடைய மதிப்பு மிக்க பிரசுரங்கிளில் துலங்கிய அவரைக் கல்கி, குமுதம், கலைமகள், யுகமாயினி போன்ற தமிழக சஞ்சிகைகளும் வா,வா ன வரவேற்று விருப்போடு கை கொடுத்தன. மிகவிரைவிலேயே பிரபலமான எழுத்தாளராகப் பரிணமித்த அரவிந்தன் தமிழ் நாட்டிலேயே தனக்கென மிகப்பெரும் வாசகர் வட்டம் ஒன்றினை வைத்திருக்கின்றார்.

இன்று கனேடிய சிறுவர் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று கருதக் கூடிய அளவினிலே குரு அரவிந்தனைஅவரது எழுத்துப் பணி உயர்த்தி வைத்திருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல. ஆசிரியர் சண்முகசுந்தரம் (தசம்), ஆறுமுகராசா, புலவர் சிவபாதசுந்தரனார் ஆகிய தமிழ் அறிஞர்களுடைய வழி காட்டலிலும் மகாஜன தமிழ் மன்றத்தின் செயற்பாடுகளிலும் காட்டிய தீவிர ஈடுபாடு இவரது தமிழின் தகமையைப் பெரிதும் உயர்த்திற்று. 

கனடாத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக அரும்பணியாற்றி  செயல் திறன் மிக்கவர் எனப்போற்றப் பட்ட குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உப தலைவராகவும் செயலாற்றி வருகிறார். மகாஜனக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றும் அரவிந்தன் அதனது 25வருட வெள்ளி விழா மலர் பிரசுரிப்பதற்கான குழுவினது தலைமையை ஏற்று மலராசிரியராக நிறைவான பணியாற்றியிருக்கின்றார். நேரடியாக ஒவ்வொன்றையும் பார்த்து அனுபவித்து அதனை அழகுற எடுத்துச் சொல்லும் அற்புத திறன்  அரவிந்தனுக்கு உண்டு என்பதை ‘அனுபவம் புதுமை” என்கிற பயணத் தொடரிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. வாசகர்களையும் அங்காங்கே இட்டுச் சென்று அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அனுபவிக்கும் தனித்திறன் அவரது எழுத்தில் பரிணமிக்கிறது.'  

மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வாழ்த்துச் செய்தியிலிருந்து சில வரிகள்.                                          TAMIL MIRROR Literary Award - 2014
Dear Aravinthan,

Congratulations.

All Mahajanans  will be proud of you ,and your commitments and many great achievements .
May GOD continue to bless you with many more achievements and great successes in life.

Arumugam Mahendran.