Thursday, April 23, 2015

பாரதி கலைக் கோயில்

பாரதி கலைக் கோயிலின் 
திறன்காணல் நிகழ்வு – 2015

(மணிமாலா)

பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2015 சென்ற விடுமுறை நாளான ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015 ஆம் ஆண்டு ரொறன்ரோவில் உள்ள பாரதி கலைக்கோயில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்களாக இந்த திறன்காணல் நிகழ்வு இடம் பெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமான பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இசையில் ஆர்வமுள்ள பல கனடிய மணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக, பவதாரணியின் பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு அமைந்திருந்தது. இசைத்தாய் அமரர் பவதாரணி மதிவாசனின் ஆசியால் வேகமாக வளர்ந்து வரும் பாரதி கலைக்கோயில் பவதாரணியின் கற்பித்தல் முறையைப் பின்பற்றி மாணவர்களுக்கு இலகுவாக இசை பயிற்றுவிக்கும் பாணியில் ஒரு பகுதியே இந்தத் ‘திறன் காணல்’ நிகழ்வாகும். பலராலும் பாராட்டப் பெற்ற இந்த திறன் காணல் நிகழ்வில் இசையில் ஆர்வமுள்ள பல மாணவர்கள் கலந்து  கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இளம் சிறார்களின் இந்த திறன் காணல் நிகழ்வின் மூலம் மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களான பார்வையாளர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர்.


அமரர் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் மாணவர்கள் கனடாவில் மட்டுமல்ல, இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என்று சமீபத்தில் உலகெல்லாம் அவர்கள் இசைப்பயணம் மேற்கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டித் தமிழ் இசையை வளர்த்து வருவது பாரட்டப்பட வேண்டியது. 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதி கலைக்கோயில் இன்று வளர்ந்து இசைத் தாகத்தைத் தீர்க்கும் கற்பகதருவாய் நிற்கின்றது. பாரதி கலைக்கோயிலின் வளர்ச்சிக்கு திரு. எஸ். மதிவாசனும் அவரது மனைவியான அமரர் பவதாரணி மதிவாசனுமே முக்கிய காரணமாக இருந்தனர். ‘இசைத்தாய்’ பவதாரணியின் திடீர் மறைவு பெரியதொரு இழப்பாக இருந்தாலும் அந்த இழப்பை நிவர்த்தி செய்து பாரதி கலைக் கோயிலைத் தொடர்ந்தும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை திரு. எஸ். மதிவாசனையும், அவரது உதவியாளர்களையுமே சேரும்.தமிழ், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தபேலா, ட்றம்ஸ், கிட்றார், கீபோர்ட் போன்ற நுண்கலைத் துறைகளில் மாணவர்கள் கற்ற நெறிகளில் இருந்து திறன் காணல் நிகழ்வு இடம் பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் கலைக்கோயில் அதிபர் மதிவாசன் சீனிவாசகம், ஆசிரியர்கள், யாழினி, இரத்னேஸ்வரன், மற்றும் தன்னார்வத் தொண்டர்கள், பிள்ளைகள் இசையைக் கற்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பெற்றோர்கள் ஆகியோரும் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட குரு அரவிந்தன் தனது உரையில், ‘பாரதி கலைக்கோயில் நிறுவனர் திரு.எஸ்.மதிவாசனின் வழிநடத்தலில் இத்தகைய திறன் காணல் நிகழ்வுகள் மூலம்; அமரர் இசைத்தாய் திருமதி பவதாரணி மதிவாசனின் கனவுகள் இக்கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நினைக்க எமக்குப் பெருமையாக இருக்கிறது. இதற்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த பெற்றோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. இக்; கல்லூரி தொடர்ந்தும் புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாகச் சேவையாற்றி, எனது மொழி, பண்பாடு, கலாச்சாரம், இசை, நுண்கலை, போன்றவற்றைப் பேணிக்காக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்’ என்று தனது பிரதமவிருந்தினர் உரையில் குறிப்பிட்டார்.இறுதியாக விருந்தினர் எல்லோரையும் மன மகிழவைத்த இந்த நிகழ்விற்கு ஊக்கம் தந்த பிரதம விருந்தினர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும், பங்கு பற்றிய மாணவர்களுக்கும் பாரதி கலைக் கோயிலின் சார்பில் அதிபர் திரு. எஸ். மதிவாசன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Wednesday, April 22, 2015

Mahajana - மகா­ஜனா மாணவிகள்.


ஆசிய கால்ப்பந்தாட்டத்தில் 
யாழ் மகா­ஜனா மாணவிகள்.நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பிராந்­திய கால்­பந்­தாட்டப் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்­துள்­ளது.

காத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவ­னேஸ்­வரன் தர்­மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்­களைப் போட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலை­வி­யாக கௌரி விளை­யா­டு­கின்­றமை மற்­றொரு விசேட அம்­ச­மாகும். 

வலைப்­பந்­தாட்­டத்தை விட இலங்கை விளை­யாட்டு அணியில் யாழ். பாட­சாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலை­வி­யாக விளை­யா­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். இவர் கடந்த வரு­டமும் இலங்கை அணியில் இடம்­பெற்­ற­வ­ராவார்.இவர்­களை விட டிலி­னிக்கா லோச்­சனி (15 நி.), மெத்­மினி ஏக்­க­நா­யக்க (23 நி.), தனூஷி விஜே­சிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பிராந்­திய கால்­பந்­தாட்டப் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்­துள்­ளது.

காத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவ­னேஸ்­வரன் தர்­மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்­களைப் போட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலை­வி­யாக கௌரி விளை­யா­டு­கின்­றமை மற்­றொரு விசேட அம்­ச­மாகும். வலைப்­பந்­தாட்­டத்தை விட இலங்கை விளை­யாட்டு அணியில் யாழ். பாட­சாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலை­வி­யாக விளை­யா­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். இவர் கடந்த வரு­டமும் இலங்கை அணியில் இடம்­பெற்­ற­வ­ராவார்.


இவர்­களை விட டிலி­னிக்கா லோச்­சனி (15 நி.), மெத்­மினி ஏக்­க­நா­யக்க (23 நி.), தனூஷி விஜே­சிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.

Sunday, April 12, 2015

Sandilipay Dinner and Cultural Program - 2015  Kuru Aravinthan

சண்டிலிப்பாய ஐக்கிய மன்றம் - கனடா கிளையின் 2015 ஆம் ஆண்டுக்கான இரவு விருந்துபசாரமும் ஒன்றுகூடலும் சென்ற சனிக்கிழமை ஈஸ்ரவுண் பாங்விட் மண்டபத்தில் திரு. அமிர்தராஜன் தேவதாசன் தலைமையில் நடைபெற்றது. கலாநிதி. ஆர். ஸ்ரீ ரஞ்சன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். தேவகி குலோத்துங்கனின் மாணவிகளின் நடனமும் இடம்பெற்றன. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு விருந்து இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்களை இங்கே தருகின்றோம்.


President Mr & Mrs Thevathasan

Mr. Thevathasan - Writer Kuru Aravinthan - Umasuthan

O Canada

Dance

Veena


Play


Eighty is not age - Experience

Dr. Sri Ranjan - Chief Guest

Annual summer picnic will be on Sunday July 12th 2015.

Monday, April 6, 2015

Anupama Chandrasekhar - அனுபாமா சந்திரசேகர்

FREE OUTGOING 

Kuru Aravinthan - Writer


Free Outgoing, directed by Kelly Thorton and written by Anupama Chandrasekhar, premiered at Canada, Toronto’s Factory Theater Main stage on January 28th. The performance was helped in part by Nightwood Theater. Started in 1979, Nightwood is Canada’s oldest national women’s theater.

The screenwriter, Anupama, is an Indian play writer from the fast-growing city of Chennai in southern India. Her plays have gained a global audience, including theaters in the US, India, and Europa. Anupama was formerly a journalist before making the switch to playwriting. Free outgoing, first directed by Indhu Rubasingam, premiered at the Royal Court Theater in London in 2007. In 2008, it moved shortly to the Traverse Theater for the Edinburgh Fringe Festival. Anupama was shortlisted for the John Whiting Award and the Susan Smith Blackburn Prize. She also placed runner up for the Evening Standard Theatre Award’s Charles Wintour Prize for Most Promising Playwright in 2008. Some of her other playwriting include Acid, The Snow Queen, Disconnect, and Closer Apart. The screenplay adaption of Free Outgoing was a finalist for the Sundance International Screenwriter’s Lab.

Screenwriter Anupama, Malini and Writer Kuru Aravinthan

Free Outgoing follows the downward spiral of Theepa, a 15 year-old girl living in the bustling city of Chennai, India. When the sex video with her boyfriend recorded on her mobile phone makes its way on the Internet, she must deal with the fallout and hysteria. Theepa and her brother quickly find themselves expelled from school. Malini, a single mother, destroys all of the Western technology found in their flat and locks Theepa in her room. As the local infrastructure breaks down, the media and accompanying mob increasingly blame Theepa and her family for their recent plights. Free Outgoing pits new world technology and liberalism against the traditional conservatism of India.

Anupama Chandrasekhar was inspired to write the play by several real incidents that occurred in India, including two students in Delhi who filmed themselves having sex and the ensuing public outcry.

The last performance at the Factory Theater Mainstage is on February 16th, 2014.
In Canada this plays directed by Kelly Thornton Starring Anusree Roy, Sanjay Talwar, Ash Knight, Andrew Lawrie, Ellora Patnaik and Asha Vijayasingham.

About the director and Actors:

Kelly Thornton - Director
Kelly is an award-winning director and dramaturg and has been the Artistic Director of Nightwood Theatre since 2001.

Anusree Roy - Malini
Anusree Roy is a Governor General’s Award nominated and Dora Award winning writer and actor whose work has toured nationally.
As a recent graduate of Ryerson Theatre School, Andrew always looks to involve himself in work that truly matters to both artist and audience.
Ash has acted in the U.K. Romeo & Juliet,  Uganda Cake and Canada  Midsummer Night’s Dream, The Count of Monte-Cristo and Carried away on the Crest of a Wave among others.

Asha Vijayasingham - Usha Asha is an actor, voiceover artist and singer. Asha also participated in Nightwood Theatre’s playwright initiative Write From The Hip and a staged reading of her work was presented at the Groundswell Festival.

Ellora Patnaik - Nirmala/Kokila Ellora Patnaik was born into an artistic family. She is a graduate of the American Academy of Dramatic Arts and was selected for Company in her third year.

Sanjay Talwar - Ramesh Sanjay Talwar returns for his second season at the Shaw Festival appearing as the Senior Judge in Peace in Our Time: A Comedy and as Captain Brice in Arcadia.
Wednesday, April 1, 2015

Book Review - Valvai Zagara

நூல் விமர்சனம் 

குரு அரவிந்தன்

வல்வை சகாறாவின் 
1. வேங்கையன் பூங்கொடி 
2. காவியத் தூது


வணக்கம்.

ரொறன்ரோ தமிழ் சங்கத்தின் ஆதரவில் 28-03-2015 அன்று நடந்த சிறுகதைப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். கனடிய தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தயாரித்து அங்கே வாசிக்கும்படி கேட்டிருந்தார்கள். மிகவும் கடினமான கட்டுரை என்றாலும் கனடிய இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாகவே இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு முடிந்த அளவு தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருந்தேன். ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லும் இலக்கிய உலகில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாததாலும், சிறுகதையா அல்லது கட்டுரையா என்ற விவாதம் கனடாவில் தொடர்ந்து கொண்டிருந்ததாலும், ‘நான் வாசித்த கனடிய சிறுகதைகள’ என்று தலைப்பில் சிறு திருத்தம் செய்து கொண்டேன். பல இலக்கிய நண்பர்களும் ஆர்வலர்களும் வந்திருந்தனர். எழுத்தாளர் அ.முத்துலிங்கம், பேராசிரியர் பசுபதி, பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன், வைத்திய கலாநிதி லம்போதரன், எழுத்தாளர் அகில், சின்னையா சிவநேசன், திருமதி. கனனேஸ்வரி நடராஜா, அனலை இராஜேந்திரம், இராஜலிங்கம், அருள் சுப்ரமணியம், அகணி சுரேஸ் போன்றவர்களை அப்போது அங்கே சந்தித்து உரையாட முடிந்தது. கட்டுரை சிறப்பாக, பாரபட்சம் அற்றதாக அமைந்ததாக வாழ்த்தினார்கள். பட்டறை முடிவுற்றபின் சகோதரி வல்வை சகாறா அவர்கள் அருகே வந்து ‘அரவிந்தனண்ணா இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்று அழகான அட்டைப் படங்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்தார்.உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனாலும் அந்த அன்பான வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.
வளர்ந்து வரும் இலக்கிய ஆர்வலர்களைப், படைப்பாளிகளைப் பாராட்ட நான் என்றும் பின் நின்றதில்லை. எனவே தொழில் விடையமாகப் பயணம் மேற்கொண்ட போது இந்த இரண்டு புத்தகங்களையும் பயணத்தின்போது வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘காவியத்தூது,(கவிதை)’ ‘வேங்கையன் பூங்கொடி, (காப்பியம்)’ ஆகிய இரண்டு நூல்களுமே கவிதைத் தொகுப்புகளாக இருந்தன. ஊரையும் உறவுகளையும் பிரிந்த ஏக்கமும் துயரமும் கவிதைகளில் பளிச்சென்று தெரிகின்றது. மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு கவிதையில் தெறிக்கின்றது. அழுவதற்கும் மறுக்கப்பட்டவர்கள் என்ற விரக்தியின் உச்சத்தைச் சகோதரி சகாறா வார்த்தைகளால் கொட்டியிருக்கின்றார். ‘விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே ஆகவேண்டும்’ என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். விழுவது ஒன்றும் தோல்வி அல்ல, விழுந்தபின் எழும்பாது இருப்பதுதான் தோல்வி என்பதைச் சகோதரி சகாறா புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கின்றேன்.
வேங்கையன் பூங்கொடி, காவியத்தூது ஆகிய இரண்டு நூல்களும் 2014 ஆண்டு செப்டெம்பர் மாதம் பானு வெளியீடாக வெளிவந்திருக்கின்றன. சென்னையில் உள்ள அம்மன் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்ற அச்சகத்தினர் இந்த நூல்களை அச்சேற்றி இருக்கின்றார்கள். காவியத்தூது என்ற நூலின் அட்டைப்படத்திற்கு ஓவியர் புகழேந்தி ஓவியம் வரைந்திருக்கின்றார்.


பெயரில் சகாராவைக் கொண்டதாலோ என்னவே ‘பாலைவனக் குயிலே நீ சோலைவனம் சேர்ந்ததனால் மாலைகளெல்லாம் உந்தன் தோளில்’ என்று காவலூர் கண்மணி பாராட்டியிருந்தார். ‘ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது. உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக் காயங்களுடன் உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.’ எனும் கவிதையை மீண்டும் மீண்டும் கண்ணீருடன் சகோதரி சகாறா வாசித்ததை நிழலி என்ற வாசகர் குறிப்பிட்டிருந்தது மனதைத் தொட்டது. இன்னுமொரு வாசகர் குறிப்பிட்டதுபோல, ஆர்ப்பரித்த சுமைசுமந்த காலமதை வென்ற நொந்த கணங்களின் பிரதிபலிப்புத்தான் இந்த நூலின் பதிப்பு என்பதால், சகோதரி சகாறாவின் நீண்ட நாளாசை இன்று நிறைவேறி இருக்கின்றது. வாசகர்களே குறுகிய வட்டத்திற்குள் நின்று பிசைந்த மாவையே பிசைந்து கொண்டிராமல், உங்கள் தேடல்களை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். வல்வை சகாறா போன்ற படைப்பாளிகளைத் தேடிப் பாராட்டி ஊக்குவிப்பதால் எங்கள் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையப் பெரிதும் உதவியவர்களாக இருப்பீர்கள்.