Wednesday, July 29, 2015

Arangetram - Abarna Selvarajah

அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

மாலினி அரவிந்தன்


சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.


இந்த அரங்கேற்ற நிகழ்வின் இசைக் கலைஞர்களாக ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு, கார்த்திகேயன் இராமநாதன், கல்யாணி சுதர்சன் ஆகியோருடன் இளம் கலைஞர்களான ஐஸ்வரியா சந்துரு, அனுஷன் மோகனராஜ், அபிநயா சந்துரு ஆகியோர் மிகவும் சிறப்பாக இசை வழங்கினர். முக்கியமாகத் தெலுங்குக் கீர்த்தனங்களில் மட்டும் தங்கியிராமல், பார்வையாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய மொழியான தமிழ் மொழிப்பாடல்களையும் தெரிவு செய்து தமிழ் மொழியை இந்த மண்ணில் தக்கவைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டப்பட வேண்டும்.  ‘அன்னமே அருகில்வா அந்தரங்கம் ஒன்று சொல்வேன்,’ ‘விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்’ போன்ற பாடல்கள் இடம் பெற்ற போது புரிந்த மொழியாகையால் அபர்னாவின் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களின் கரவொலி மூலம் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட குரு அரவிந்தன் அவர்களின் பிரதம விருந்தினர் உரையில் இருந்து சில பகுதியை இங்கே தருகின்றேன்:
‘சபையோருக்கு எனது மாலைவணக்கம். இன்று செல்வி அபர்னா செல்லராசாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையிலே எமது மொழி, பண்பாடு,  கலை கலாச்சாரம் போன்றவற்றை முன் எடுத்துச் செல்லும் செல்வி அபர்னா போன்றவர்களைப் பாராட்ட நாம் என்றும் தயக்கம் காட்டக்கூடாது. கடந்த 12 வருடங்களாக பரதநாட்டியக் கலையைப் பயின்று இன்று அரங்கேற்றம் செய்யும் செல்வி அபர்னா அவர்கள் சமீபத்தில் கலைமன்றத்hல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிப் பரிட்சையில் சிந்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. I.B Program  முடித்துக் கொண்ட செல்வி அபர்னா அவர்கள் ஓட்டாவா பல்கலைக் கழகத்திற்குச் சென்று அங்கே அரசியல் அறிவியல், உலக சரித்திரம் போன்ற பாடங்களைச் சிறப்புப் பாடமாக எடுக்க இருக்கின்றார். கல்விச் செல்வம் ஒன்றுதான் எங்களிடம் நிலைத்து நிற்கும் செல்வமாகையால் உயர் படிப்பிலும் ஆர்வம் காட்டும் செல்வி அபர்னா அவர்கள் அங்கும் சிறப்பாக சித்தியடைய எனது இனிய வாழ்த்துக்கள்.


இதைவிட மாலினி அரவிந்தனின் தமிழ் மொழி மாணவியான செல்வி அபர்னா அவர்கள் தன்னார்வத் தொண்டராகப் பல இடங்களில் சேவையாற்றியிருக்கின்றார். குறிப்பாக நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரது தாயாரான திருமதி சுதர்சனி செல்வராசாவுடன் அபர்னாவும் அவரது சகோதரியும் தாமாகவே வந்து இந்த மண்ணில் தமிழ் மொழியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு எங்களுக்குப் பல வழியிலும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.


இச் சந்தர்ப்பத்தில் அபர்னாவின் குருவான ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களையும் இங்கே பாராட்ட விரும்புகின்றேன். ஒவ்வொரு வருடமும் ‘நிருத்த நிறைஞ்சர்’ விழாவின்போது என்னையும் அவர் அழைப்பார். ஏதிர் காலச் சந்ததியினரை நல்வழியில் கொண்டு செல்வதற்கு அவர்தரும் தன்னலமற்ற ஆக்கமும் ஊக்கமும் பாராட்டத் தக்கது. அவரிடம் பயின்ற மாணவ, மாணவிகள் இன்று பலராலும் பாராட்டத் தக்கவர்களாக பரதநாட்டிய உலகில் தமக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்பதும் பெருமைகுரியது. இந்த அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த இசை வழங்கும் கலைஞர்களையும், சுதர்சன் துரையப்பா அவர்களையும் பாராட்டுகின்றேன்.

அடுத்ததாக அபர்னாவின் பெற்றோர்களான திரு செல்வராஜா முருகேசு திருமதி சுதர்சனி செல்வராஜா அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்ட விரும்புகின்றேன். பிள்ளைகளை நல்வழிப்படுத்த என்ன செய்ய முடியமோ அதை மிகவும் கவனமாகச் செய்திருக்கின்றார்கள். தங்கள் பொன்னான நேரத்தைப் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகச் செலவிட்டிருப்பது போற்றப்பட வேண்டியது. எங்கள் பாரம்பரிய கலையான பரதநாட்டியக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் செல்வி அபர்னா செல்வராஜா அவர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டி என் உரையை முடித்துக் கொள்கின்றேன்.          Good evening,

First, I would like to congratulate Abarna Selvarajah for her outstanding performance and tonight’s entertainment. I would like to take some time today to briefly speak about Abarna’s recent achievements and interests.

Abarna has been enrolled at Kalaimanram and actively involved with dance for the past 12 years. She recently passed the teacher’s grade examination under Kalaimanram – academy for Fine Arts. Coming September she will be awarded the 'Nirutha Nirainger' title. She has also participated in various dance programs through Kalaimanram such as FeTNA.

She recently completed her High School diploma and I.B. program at Turner Fenton Secondary school. While at Turner, she also finished the International Languages program in Tamil, earning 3 high-school credits up to the date. During high school Abarna also received many awards, including the Principal Reception as well as Honour Roll every year. In September she will be attending the University of Ottawa to obtain a Joint Honors bachelor degree in Political Science and History, while completing the extended French stream.


Outside of academics, Abarna has been volunteering part-time with her local elementary school’s Kindergarten class. Last year she was on the executive team of SOAR, a conference designed to help middle schoolers better accommodate themselves into high school. Two years back, she served on the Student Council at her high-school and also attended multiple leadership conferences, such as Count Me In, IMPACT, and START.In the future, Abarna would like to work for the United Nations to combat international poverty related issues, and further her dance career as the end of her Arangetram is only the beginning of her dance journey.


I wish Abarna all the best in her future journeys, and look forward to the stage of her dance career.  Thank You.

Kuru Aravinthan

Writer, Teacher, Accountant.

VP: Canadian Tamil Writers Association.
VP: SOPCA - Screen Of Peel Association.
Patron: Ontario Tamil Teachers Association.
Tuesday, July 28, 2015

Story - Letter From DaughterLETTER FROM DAUGHTER


Kuru Aravinthan
 Two letters had arrived.  One was the much anticipated DNA report.  The other letter was with a familiar beautiful handwriting.  He opened that one first which was from his
daughter.

The letter was from his fifteen-year-old daughter.  He read it with great interest.

“Dear Father,

I don’t know if I will be able to call you ‘father’ hereafter.  But before you receive the DNA report I would like to express something to you personally. 

‘Father means affection.  Father means love.  You were everything for me.  Maybe it was mother’s negligence, meanness and selfishness that brought me closer to you than to her. ‘

How could you give me affection and love and keep your heart like a stone?  I never thought that the misunderstandings between you and mother would lead to a divorce.  I didn't consider it seriously though my mother yelled that I was not your biological daughter.  But when you looked at me and raised the question “Whether I am your daughter?” it hurt me enormously. 

I don’t know why parents refuse understand what’s going on in a child’s heart.  I am frightened to think about my future.  I am a question mark in everybody’s eyes.  This incident has had a severe impact in my emotions. 

Father, I have a final request for you.  If what my mother said was true, the DNA report will prove it.  The same moment, I will be someone else for you.  Before that happens, I want to meet you for one last time.  I want to lean over your shoulders and cry out loud from my heart.  Will you come to see me at least once without being stubborn?” - Divya.

He was very upset after reading the letter.  The child is being punished for the unthinkable acts of parents.  What mistake did he commit to deserve a divorce?

A wife who was very obedient in the early years of marriage turned uncontrollable as time went by.  The frivolous fights which started on petty incident continued even after the birth of the baby. 

He had money.  She had her youth and beauty.  It was an arrange marriage, according to her parent’s wishes and not hers. He was not aware of this until now.  She wanted to hide her family circumstances and so she led her life with him.

“Did this marriage take place without your consent?” 

“Yes, nobody paid heed to my wishes as a girl.  Looking at your wealth, my father dumped my love and my desires.”  She said bursting into tears.

“Love?” he asked surprisingly

“Yes, love.  I was too close with my lover thinking that we would get married one day.  But providence had brought you in between us. I can’t bear this agony any longer.  At least now, please grant me freedom by giving me a divorce.

“So, how did u manage living with me for such a long time?”

“Only my body was living with you, not my soul.  I cannot cheat myself and live with you any more.  I want freedom from this hell.”

“If there is going to be separation, nobody can stop it.  But then what about our daughter?”

“Our daughter?  Who said she is your daughter?”

“What the hell are you talking about?”

“Yes, you are not the father of Divya.”

“Hey look, don’t play with our lives.”

“I am not playing.  But it is the truth and absolute truth.”

He was shocked to death.

“So, Divya is not my daughter?” he asked soberly

“No…”

“Lie, you are just lying to annoy me.  Just get out if you want to be separated.  But please do not torture me this way.”

“So now, you want me to prove that Divya is not your daughter, Is that so?”

“Oh, God! It is unbearable please.”

“I will prove it once and for all.”

It seems as though the hearts of people are going to be torn apart with these kinds of betrayal.  She planned this in order to insult him.  She forced Divya to undergo the DNA tests during her holidays. 

He went to Divya’s convent.

Divya was happy to see him in her hostel at the visitors place.  She manage to ask “Did you get the letter that I wrote?”

“I got it.”

“Did you get the DNA report?”

“Yes, I got too.”

“Has it come already?”

Her face was saddened and she wanted to know about the results.  “I thought so when you were standing drooped.  You must be knowing the truth now.”

“Yes, I know.”

“So, what my mother said was all true?”

“No, your mother lied.  She didn’t want to live with me.  Just to get a divorce from me, she humiliated me that way.”

“Dad, what are you talking about?”

“I saw the DNA report.  You are my daughter without any doubt.”

“Really…?”

“Whatever the world says, you are my daughter.”

“Daddy!”  She came running to them hugging him and crying out her tears sobbing loud.  She wanted to cry her heart out.  

“Don’t cry my dealing.”  He wiped her tears away with all the love in the universe.  She stopped crying and looked at him. 

“I won’t cry anymore, I have a father.”  She held his hands and laughed into them with great joy. 

He returned home.  As soon as he came home, he took the DNA report and tore it into pieces without even opening it.  He felt relieved.  To achieve this serenity, the cost he paid for it to be enormous.  He signed the divorce papers sent by his wife saying, ‘Totally accepted’.  His wife said that she would not reveal the results of the report to her daughter as their personal agreement.  The court might take some time for to approve their divorce but for Divya it is eternal happiness.

(Courtesy - Kalki weekly Magazine, India)


Monday, July 27, 2015

Short story - Sir I Love You..

Sir, I love you

 Kuru Aravinthan


Suseela closed her store at the Newport Center Mall in New Jersey and was heading out when the clouds began to grow darker and it started snowing heavily.  The wind chill was very high and it was biting cold.  All the cars in the parking lot were covered with snow.

Suseela began to clean her car and scraped all the snow.  As she drove slowly she noticed a white car parked in front. 

The owner of the car seemed distressed and was moving around trying to open the door.  Suseela thought that the gentleman needed some help and got out of her car. 

“Excuse me, is everything ok? Do you need some help?”

He looked at her.  He was fully covered in his jacket like an Eskimo.  A big cap covered his head.  “No, I can take care of it”, he said briskly. 

“Are you having some trouble with the doors?”

He hesitated and replied, “Yes.”

She tried to pull open each door of the car.  But, she couldn’t.

“Don’t you have the key?” she asked.

“If I had that, I would have opened it.”

“ch..! I thought may be the car doors were frozen in the snow. Have you locked the key inside the car?”

“Yes.” He replied a little embarrassed.

“What are you going to do now?” asked Suseela.

“Do you have a cellular phone, please can I make a call.  AAA can assist with this situation.”

“It will take a long time for them to come in this heavy snow.  If you wait for them, you will get frozen.”

“I can’t think of anything else to do?”  He couldn’t help the situation. 

“There is one way out”, she said.

“What?”

“Is your house close by?”

“Not too close.  Why?”

“Do you have a spare set of key for the car?”

“Yes, I do.” he replied with a ray of hope.

“I will drive you to your house, you can get the keys and I will drive you back to your car.”

“No, I don’t want to bother you.”

“It’s no trouble.  If we cannot help each other, then what is the purpose of this human life?  Please, let me help you.  She opened the door for him without waiting for his reply.  He began giving directions to his house.

The car stopped in front of a beautiful bungalow inside the University.  She was taken by surprise. 

“This…this is Professor Ramanathan’s bungalow?”

“Yes,” he nodded.

“Then you are?”

He got off the car and removed his cap.

“My God, It’s you, Sir?  Do you remember me?  I am Suseela.”

“Suseela” he tried to recall his memory.

“Which year? Did you study under me?”

She told about an incident known to both of them. 

“Do you remember sir, once when the class was over, I asked you, what is the secret of your youth? And you replied that you go for jogging every morning and are careful with your food, and you maintain good habits.”

When I said “Oh, is that all”, everyone started laughing. 

“Now, I remember… Chatter box Suseela, right?”— He was laughing nostalgically.


Being his student, getting married, becoming a mother, losing her husband in a car accident due to drunken driving, looking after his store for living etc., …  were explained to  the Professor.

Professor Ramanathan invited Suseela in to his house.

“Have a seat. What would you like to have?  Coffee?” he said

“No Sir, it’s okay.”

“Just excuse me for a whilst I get the keys. Brause through these books. Make yourself at home. I will be back.”

Suseela started to look around the hall.  She understood that the house was lacking a woman’s touch.

She arranged all the books and newspapers that were lying around.  She took the tablecloth that was on the floor and tied it over the table and kept a vase on too.  She tidied the whole place in five minutes. 

“Wow, is this my house?”  Ramanathan’s eyes sparkled as he was bringing some coffee.  She felt very happy at his appreciation.

“Each thing should be kept in its place to enhance its beauty.  Only then it would be beautiful and will command respect?”, she said.

He suddenly looked at her.  “Well, I just forgot everything when my daughter left me.  I have no interest in this life”, he said with a huge sigh.

The death of his beloved wife, the elopement of his only daughter with somebody not liking the strict lifestyle, his disinterest in life etc., … he was discussing all these things openly with Suseela.

Then both of them went with another key to open the car.  Ramanathan thanked Suseela many times and then departed.

From there on whenever he had spare time, Ramanathan went to Suseela’s store.  He started to come out of his loneliness as if he was free from an entrapment.

He began teaching Nila, Suseela’s eighteen-year-old daughter over the weekends on Suseela’s request.  One day when he was teaching calculus, an unexpected incident took place.  He noticed that Nila was concentrating on him rather than on the maths.

“What are you thinking about?”

“You are so handsome”, she said abruptly. 

He could not believe what he heard and was shocked.

“What sir, did you get scared?” she asked with a cheeky smile.

“Why are you not concentrating on your studies?” he said sternly.

“Am I not allowed to say that you are handsome?” she replied lowering her tone of voice.

He hesitated and said, “You can, but not during your study time.”

 “Ok. Sir” and she pulled her self-close to him and whispered ‘I love you’ and gave him a gentle kiss on his cheeks.

He was taken back by surprise.  He felt as if his daughter came running to him and gave him a kiss.  But he controlled himself and said “Do you like me?”

“No, I love you” she said strongly.

“Love?  What are you talking about? Do you know the meaning of true love?  I have a daughter older than you.  You should not blabber like this.  I am like your father.”

“Father?  You?  Who said?”

Before he could search for a reply, she ran into her room and slammed the door.

Later that day he went into Suseela’s store, and said “Your daughter is also a chatter box like you”

He told her what had happened that morning. Suseela was awestruck.

Suseela felt embarrassed by her daughter’s action.

“She is a girl without a father.  That is the reason why she is confused about love and affection,” she said in a apologizing tone.

“Don’t worry, Suseela.  This is a normal occurring infatuation at this age.  She didn’t know who to say  to.  She’ll mature as she grows older.”

“I don’t think so, I know her stubbornness.  I should not let this confusion to grow in her.  I need your help for that, will you help me?” Suseela asked with hesitation.

“Me… how?  Shall I go and talk to her?”

“She is not listen to what you say.  There is only one way, that is Will you marry me?”

“Suseela, what are you talking?”  Ramanathan was shocked. ”Are you out of your mind?” he asked.

“No, even I could do with a permanent support.  You are the most suitable person for that.  I began to understand that since I started to acquaint with you.  Moreover, my daughter needs an affectionate father and I knew that you will be a good father to her.  She has developed a wrong opinion in her heart about you.  Only you can put it right” she said with a clear mind.

“How?” he asked confused.

“‘You, my father?’ she asked you… that is the reason.  Hereafter, you have to prove that you are her father.  Will you do this for me?” she literally begged him.

           
Later on that day, when Suseela got home she rang the doorbell, Nila came running to open the door.  When she saw her mother and Ramanathan with flowers and garlands, she was startled for a moment. 

“Nila, this is your father from now on.”  Nila understood her mother just with her expression. 

Rest of the day none of them spoke. The house was dampened with silence.

Nila suddenly woke up in the middle of the night, she felt her mother hugging her and sleeping with her.

“Mum, why are you here?”

“Why are you surprised?  I always sleep with you.”

“What’s this Mum?  How long are you going to sleep with me?” she was stammering as she spoke.

“From now on, I want to sleep on my own.  You should refrer to your room now.  I will be fine. Thanks Mum.”

Suseela was too disturbed with her daughter’s reaction.  Nila took her arms and pushed her into Ramanathan’s room and shut the door behind her.


Next morning, when Nila woke up, Suseela was brewing coffee for everyone. 

“Good morning Nila, here’s your coffee.”

“Thanks Mum.  Where is my father?”

“Father?”  Suseela couldn’t believe her ears.

 “He is reading the newspaper in the living room.”

“Have you given his coffee?”

“No.”

“Let me give it to him” she took the coffee and went to her father.

“Good morning Dad! have some coffee.” She said with affection.

When Ramanathan heard this.  He thought that many days have passed by with no one calling him ‘Dad’.  He was very happy when Nila called him ‘Dad’ with a lot of love.  He took his coffee from Nila and kept it on the table.

“Won’t you even thank me?” asked Nila.

His silence hurt her very much.  “Okay, you need not tell me thanks.  Just say that you forgive me.  That’s enough” she took his hands. Tears began running down her cherry cheeks. 

“What happened?   Why are you crying Nile?” he asked her buffed.

“I hurt your feelings, Dad.  I don’t know if my decision was good or bad.  But the method I took to succeed with my plans was surely wrong.  Please forgive me.”

“I don’t understand.  What decision?  What plan?” Ramanathan asked even more confused.

“After my father died, my mother only lived for me.  She controlled all her likes and desires and was living like a stone.  Thirty-eight years is not a big age. When I asked her to remarry several times, she refused.  Both you and my mum got along very well.  So, I thought that you are the right match for her.  To make it happen, I had to act in a small play.  I didn’t know a better way to make my mom agree.  Forgive me dad, please.”

“No, you didn’t do anything wrong.  I have seen mothers searching a groom for their daughters.  But I am seeing a girl who has performed the marriage of her mother for the first time.  You are great.”  Professor Ramanathan caressed his daughter and gave her a kiss on the forehead. 


(Courtesy: Ananthavikatan – India)
PAN AMERICAN GAME - பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டி

பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டி

குரு அரவிந்தன்

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா கண்டத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டுப் போட்டியை பான் ஆம் விளையாட்டுப் போட்டி என்றோ அல்லது பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டி (Pயn யுஅநசiஉயn புயஅநள) என்றோ சுருக்கமாகச் சொல்வர். வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவும் இவற்றைச் சூழவுள்ள தீவுகளும் இதில் அடங்கும். கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக இந்த விளையாட்டுப் போட்டியைப் பயன் படுத்துவதுண்டு. 1932 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டி லொஸ் ஏஞ்சலில் நடைபெற்ற போது சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்வதற்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக ஒரு விளையாட்டுப் போட்டி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி டலாஸ் என்ற நகரத்தில் முதல் விளையாட்டுப் போட்டி 1937 இல் நடைபெற்றாலும் அதுபற்றி அதிகம் பேசப்படவில்லை. 1942 ஆம் ஆண்டு புவனஸ்ஐரஸில் விளையாட்டுப் போட்டி வைப்பதாகத் தீர்மானித்தாலும் இரண்டாம் உலக யுத்தம் காரணமாகப் பின் தள்ளி வைக்கப்பட்டது.


1951 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதலாவது பான் ஆம் விளையாட்டுப் போட்டி ஆஜென்ரியாவில் திட்டமிட்டபடியே நடைபெற்றது. தொடர்ந்து 1955 இல் மெக்ஸிக்கோ  1959 இல் சிக்காக்கோவிலும், 1963 இல் பிரேஸிலிலும், 1967 கனடா வின்னிபெக்கிலும் நடைபெற்றன. 1951 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி ஆரம்பமானபோது 2513 வீரர்கள் 21 நாடுகளில் இருந்து பங்கு பற்றியிருந்தனர். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 5633 வீரர்கள் 42 நாடுகளில் இருந்து பங்கு பற்றியிருந்தனர். ஸ்பானிஸ் மொழியும், ஆங்கில மொழியும் இவ் விளையாட்டுப் போட்டிகளின்போது பாவனை மொழியாக இருக்கின்றன. இப்பொழுது நாங்கள் புகுந்த மண்ணான கனடாவின் ரொறன்ரோவில் நடைபெறுவது 17 வது பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டியாகும்.


2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி இந்த விளையாட்டுப்போட்டி கனடாவின் ரொறன்ரோ நகரத்தில் நடைபெற இருக்கின்றது. 10 ஆம் திகதி ஆரம்பமாகி யூலை மாதம் 26 ஆம் திகதி போட்டிகள் முடிவடையும். 41 நாடுகளில் இருந்து சுமார் 6135 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றுகின்றனர். 36 விளையாட்டுக்களுக்கான 364 போட்டிகள் இம்முறை இங்கே நடைபெற இருக்கின்றன. ரொறன்ரோ டவுன்ரவுனில் உள்ள ஸ்கைடோம் என்று முன்பு அழைக்கப்பட்ட றோஜஸ் சென்ரறில் அனேகமான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 1989 ஆம் ஆண்டு 570 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கு ஒன்ராறியோ வாவியின் வடகரையில் சீஎன் கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது. சுமார் 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதிகளைக் கொண்டது. அதே சமயம் இந்த விளையாட்டரங்கின் மேலே உள்ள கூரை திறந்து மூடக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது. யூனியன் பியர்சன் விரைவு தொடர்வண்டிச் சேவையும் இந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு முற்கூட்டியே ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பியர்சன் விமான நிலையத்தில் இருந்து இலகுவாகச் செல்வதற்கு இந்த தொடர் வண்டிச் சேவை வசதியாக இருக்கும் என் எதிர்பார்க்கப் படுகின்றது.சில விளையாட்டுப் போட்டிகள் ரொறன்ரோவைச் சுற்றியுள்ள நகரங்களில் அவ்வப்போது இடம் பெற இருக்கின்றன. குறிப்பாக பிரபல விளையாட்டுப் போட்டியான உதைபந்தாட்டம் இம்முறை ஹமில்டனில் உள்ள சிஐபிசி விளையாட்டரங்கில் நடைபெற இருக்கின்றது. நெரிசலைத் தவிர்க்கும் முகமாக கனன் வீதியில் உள்ள வாசல் வழியாக உதைபந்தாட்ட ரசிகர்களை உள்ளே வரும்படி கேட்டிருக்கிறார்கள். பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான உதைபந்தாட்டத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்டக் கிண்ணத்தை மெக்ஸி;க்கோ பெற்றுக் கொண்டது. இதுவரை உதைபந்தாட்டக் கிண்ணத்தை ஆஜன்ரியா ஆறு தடவைகளும், மெக்ஸிகோவும் பிரேஸிலும் தலா நான்கு தடவைகளும் பெற்றுக் கொண்டன. இம்முறை யாருக்கு கிடைக்கப் போகிறது என்று காத்திருந்து பார்ப்போம்.இந்த பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டி கனடாவில் நடக்கும் மூன்றாவது விளையாட்டுப் போட்டியாகும். முதலாவது 1967 ஆம் ஆண்டு ரொறன்ரோவிலும், இரண்டாவது 1999 ஆம் ஆண்டு வின்னிப்பெக்கிலும் நடைபெற்றன. இம்முறை பான் அமெரிக்கன் சுடர் மேமாதம் 30 ஆம் திகதி ரொறன்ரோவில் எடுத்துச் செல்லப்பட்டு யூலை 10 ஆம் திகதி போட்டி ஆரம்பமாகும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும். முதலாவது நிகழ்ச்சியான வாட்டபோலோ (றுயவநச Pழடழ) மூன்று நாட்களுக்கு முன்பாக யூலை மாதம் 7 ஆம் திகதியே ஆரம்பமாக உள்ளது. இதில் பங்குபற்றுபவர்களில் 45 வீதமானவர்கள் பெண்களாகும். இந்த பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிக்காக பெரு நாடும், கொலம்பியா நாடும் கனடாவுடன் போட்டி போட்டிருந்தாலும் கனடா 33 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானது. அதிக விளையாட்டு வீரர்கள் பங்குபற்றும் நாடுகளில் இம்முறை பிறேசில்(582) கனடா(574) ஐக்கிய அமெரிக்கா(441) மெக்ஸிகோ (419) ஆஜன்ரியா (397) ஆகியன அடங்கும். ஆகக் குறைந்த தொகையினர் சென். வின்சன்ட் தீவில் இருந்து பங்குபற்றுகின்றனர்.  நெதர்லண்ட் அன்ரிலிஸ் (நேவாநசடயனௌ யுவெடைடநள)  என்ற சிறிய தீவில் உள்ள நாடு போட்டியில் இம்முறை பங்குபற்றவில்லை.பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிபோல பராபன் விளையாட்டுப் போட்டியும் 1999 இல் இருந்து பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து நடைபெறுகின்றது. இம்முறை ரொறன்ரோவில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்த விளையாட்டுப் போட்டி முடிவடையும்.


2011 ஆம் ஆண்டுக்கான 16 வது விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் மாதம் மெக்ஸிக்கோவில் நடைபெற்றது. 42 நாடுகளில் இருந்து 36 விளையாட்டுப் போட்டிகளுக்கு 6000 வீரர்கள் பங்கு பற்றியிருந்தனர். மூன்றாவது தடவையாக இந்தப் போட்டி மெக்ஸிக்கோவில் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்கா 98 தங்கப் பதக்கங்களையும், கனடா 30 தங்கப் பதக்கங்களையும் பெற்றிருந்தன. அடுத்த 18 வது விளையாட்டுப் போட்டி பெரு நாட்டில் நடைபெற இருக்கின்றது. ஆஜன்ரினா, சிலி, வெனிசூலா ஆகிய நாடுகள் இதற்காகப் போட்டி போட்டாலும் பெருநாடு 31 வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்குத் தெரிவானது. பசுபிக் கடலோரத்தில் அமைந்திருக்கும் பெரு நாட்டின் தலைநகரான லீமா நகரத்தில் 2019 ஆம் ஆண்டு யூலை 26 ஆம் திகதி அடுத்த விளையாட்டுப் போட்டி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி விளையாட்டுப் போட்டிகள் முடிவடையும்.

Friday, July 24, 2015கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011
பரிசு பெற்ற கதை

நடுவர்களின் பார்வையில்…

புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக்குமுறல்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள் இவைகளைத் தங்கள் நாவலில் வெளிப்படுத்தியதற்காக 'தாயுமானவர்' நாவலைத் தேர்வு செய்தோம். கதைக் களம், எடுத்துக் கொண்ட பொருளில் வேறுபட்ட தன்மை இவைகள் எங்களை வெகுவாகக் கவர்ந்தன.

டாக்டர் லட்சுமி
திரு.பி. மணிகண்டன்
திரு.பா.ஸ்ரீதர்.

கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011 இல்
குரு அரவிந்தனின் பரிசு பெற்ற கதை - தாயுமானவர்
தாயுமானவர் - குரு அரவிந்தன்.

Thursday, July 23, 2015

மலர்கள் - Flowers

சிரிக்கும் மலர்கள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
சின்னச் சின்னச் செடிகளில்
காலை நேரம் மலர்ந்திடும்
வண்ண வண்ணப் பூக்களாம்.

வண்டு வந்து பாட்டுப் பாட
வண்ண மலர்கள் ஆடுமாம்
தென்றல் வந்து தழுவிச் செல்ல
மகிழ்ந்து இன்பம் காணுமாம்

தேன் குடிக்கும் வண்டுகள்
பசியிழந்து பறந்திட
களிப்படைந்த மலர்களும்
மெல்லச் சிரித்து மகிழுமாம்.
         
          -குரு அரவிந்தன்-

தமிழ்மொழி Tamil

தமிழ்மொழி

தாய்மொழியாம் தமிழ்மொழி
தாய்மொழியாம் தமிழ்மொழி

அம்மா, அம்மா சொன்ன மொழி
அப்பா, அன்பாய் அழைத்த மொழி
அண்ணா அக்கா பேசும் மொழி
அதுவே எங்கள் செந்த மொழி.

பொதிகையிலே பிறந்த மொழி
சங்கத்திலே வளர்ந்த மொழி
தொன்று தொட்டு வாழ்ந்த மொழி
அதுவே எங்கள் சொந்த மொழி.

பாட்டா பாட்டி தந்த மொழி
பண்பாய்ப் பழக ஏற்ற மொழி
முன்னோர் போற்றி வளர்த்த மொழி
உலகம் எல்லாம் போற்றும் மொழி.

          -குரு அரவிந்தன்-

மகாகவி சுப்ரமணியபாரதியார் - Mahakavi Subramaniya Bharathi

மகாகவி சுப்ரமணியபாரதியார் சிலை

 (குரு அரவிந்தன்)

மகாகவி பாரதியாரைத் தெரியாத தமிழர்கள் இந்தத் தலைமுறையில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டில் முக்கிய அங்கம் வகித்தவர். ஒரு கவிஞராக, சாத்வீக விடுதலைப் பேராளியாக எல்லோராலும் அறியப்பட்டவர். இவர் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளராக, பத்திரிக்கையாசிரியராக, சமூக சீர்திருத்தவாதியாக இருந்து தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தமிழ் மொழியின் எழுத்து நடையில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இன்று வசன நடையில் நாங்கள் எங்கள் தமிழ் மொழியைச் சிறப்பாக எழுதுவதற்கு வழிகோலியவர்களில் இவரும் ஒருவர். நான் சென்ற இடங்கள் சிலவற்றில் இவரது கம்பீரமான சிலையைக் கண்டிருக்கின்றேன். மகாகவி பாரதியாரை நினைவு கூருமுகமாகத் தமிழ்நாட்டில் உள்ள மரீனா கடற்கரையில் ஒரு சிலை அமைத்திருக்கின்றார்கள். தஞ்சாவூரில்; உள்ள பாரத் கலைக்கல்லூரிக்கு முன்பாகவும், புதுச்சேரியில் பாரதி பூங்காவிலும் இவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்திலும் நல்லூர் கோயிலுக்கு அருகே பாரதியாருக்குச் சிலை ஒன்று அமைத்திருக்கின்றார்கள். இப்படியாக பாரதியை மதிப்பவர்கள் பல ஊர்களிலும் இவருக்குச் சிலை அமைத்திருக்கிறார்கள்.

மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்ற டிசெம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுவர்கள் பாரதியார் வேடமணிந்து பங்கேற்றனர். பாரதி மணிமண்டபத்தில் தொடங்கி பாரதிக்கு ‘பாரதி’ என்று பட்டம் வழங்கப்பட்ட எட்டையபுர அரண்மனை, பாரதியார் பிறந்த இல்லம் என எட்டையபுரம் முழுவதும் மகாகவியின் பாடல்களைப் பாடியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அதேபோல திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், அவரது உருவச் சிலைக்கு, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பார்த்தசாரதி கோவில் வளாகம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலையை, அப்பகுதி மக்கள், பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதேபோல சேலத்திலும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவை பெண் கல்வி, பெண் விடுதலை மற்றும் பெண் உரிமை நாளாக கொண்டாடினர். 

பாரதி என்று அழைக்கப்பட்ட இந்த முண்டாசுக் கவிஞன் 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொராம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர், தாயார் பெயர் லட்சுமி அம்மாள். இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினாலும் இவரது செல்லப் பெயர் சுப்பையா என்பதாகும். ‘பாரதி’ என்பது இவருக்குக் கிடைத்த பட்டப் பெயராகும். இவர் இன்றும் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது 38 வது வயதில் மரணமானார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் தெருவில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டைத் தமிழக அரசு 1993 ஆம் ஆண்டு அரசுடமையாக்கியதன் மூலம் அவரைக் கௌரவித்தனர். பாரதியின் நூற்றாண்டு விழாவை தமிழ் உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர். 1982 ஆம் ஆண்டு பாரதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதம ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அவர்கள் பாரதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்றை நூற்றாண்டு நினைவு மலராக யாழ்ப்பாணத்தில் வெளியிட்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாரதியார் உயிரோடு இருக்கும் போது அவரது திறமையைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. இன்று அவரது ஆக்கங்கள் எல்லாம் பொதுவுடமை ஆக்கப்பட்டிருப்பதால் அவை பலரிடமும் சென்றடைய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அதனால் எல்லோரும் அறிந்த உலகப்புகழ் பெற்ற ஒரு கவிஞராக பாரதியார் இன்று திகழ்கின்றார். பாரதியின் பின் பல கவிஞர்கள் தமிழில் தோன்றினாலும் அவரைப் போன்ற உணர்வு பூர்வமான பாடல்களை யாரும் இதுவரை எமக்குத் தந்ததில்லை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

(நன்றி: தமிழர் தகவல்)

திருவள்ளுவர் - Thiruvalluvar

திருவள்ளுவர் சிலை  

(குரு அரவிந்தன்)

கோபுரங்கள் தான் உயர்ந்து நிற்குமென்பதில்லை, சாதனைகளை எடுத்துச் சொல்லும் நினைவுச் சிலைகளும் கூட உயர்ந்து நிற்பதை பல இடங்களில் நாம் கண்டிருக்கின்றோம். தமிழனின் புகழை உலகெல்லாம் பரப்பி நிற்பவர்களில் திருக்குறளை ஆக்கித் தமிழ் உலகிற்குத் தந்த திருவள்ளுவர் காலமெல்லாம் போற்றப்பட வேண்டியவர். இவரைப் பொய்யாமொழிப் புலவர் என்றும் அழைப்பர். திருக்குறளின் புகழ் உலகெங்குப் பரவி நின்றாலும் அதை ஆக்கித் தந்தவரை நினைவு கூரவேண்டும் என்ற பெருவிருப்பின் காரணமாக அமைந்ததுதான் தமிழ் நாட்டின் தென்கரையில், கன்னியாகுமரியில் உள்ள வானம் தொட்டு நிற்கும் திருவள்ளுவர் சிலை.

கன்னியாகுமரி முனையில், விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகே உள்ள பாறையில் அமைந்திருக்கும் இந்தத் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தைக் கொண்டது. வங்காளவிரிகுடா, அரபிக்கடல், இந்து சமுத்திரம் ஆகிய மூன்று கடல்களும் சந்திக்கும் முக்கிய இடத்தில் இந்தச் சிலை நிமிர்ந்து நிற்கின்றது. 1979 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த மொராஜிதேசாய் அவர்களால் இதற்கான அத்திவாரக் கல் நாட்டப்பட்டது. ஆனாலும் 1990 ஆம் ஆண்டுதான் இதற்கான முக்கிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு இதனால் இடையூறு ஏற்படும் என்று கூறி, திருவள்ளுவர் சிலையை இந்த இடத்தில் அமைக்க 1994 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்திருந்தாலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் பெரியோரின் விடா முயற்ச்சியால் தடை நீக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு இந்தப் பணி முடிவடைந்தது. திருவள்ளுவரின் இந்தச் சிலை 7000 தொன் எடை கொண்டது. இதற்கான கற்கள் முக்கியமாக கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம், சங்கரபுரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்தும் பெறப்பட்டு வேலைகள் இடம் பெற்றன. திருவள்ளுவருக்கான சிலையும் மேடையும் அமைப்பதற்காகப் பாவிக்கப்பட்ட கற்களில் 3681 கற்கள் பதினைந்து தொன்களுக்கு மேற்பட்ட நிறையைக் கொண்டிருந்தன. ஏனைய கற்களில் அனேகமானவை சராசரி மூன்று தொடக்கம் பத்து தொன்கள்வரை நிறை உடையனவாக இருந்தன. இதைவிட 19 அடி உயரமான முகம், குறிப்பாக காதுகள், மூக்கு, கண்கள், வாய், நெற்றி போன்றவை தனித்தனிக் கற்களில் கையால் பொழிந்து பொருத்தப்பட்டன. நுட்பமான கற்களைச் செதுக்குவதற்கு மிகவும் அனுபவம் மிக்க சிற்பிகள் ஈடுபடுத்தப் பட்டனர். சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை இந்தச் சிலை செய்வதற்காகச் செலவிடப்பட்டது. அனுபவம் மிக்க சிற்பிகள், மேற்பார்வையாளர்கள் உட்பட சுமார் 150 தொழிலாளர்கள் இந்தச் சிலையை நிர்மாணிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

திருவள்ளுவர் நினைவுச் சின்னத்தின் மொத்த உயரம் 133 அடியாக இருந்தாலும் சிலையின் உயரம் 95 அடியாகவும், சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் 38 அடி உயரமாகவும் இருக்கின்றது.  திருவள்ளுவர் தந்த திருக்குறளில் 133 அத்தியாயங்கள் இருப்பதால் அதை அடையாளப் படுத்துவதற்காக 133 அடி உயரச் சிலை வடிவமைக்கப்பட்டது. இதில் 133 குறட்பாக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கிய பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி இதற்குப் பொறுப்பாக இருந்தார். மிலேனியம் ஆண்டாகிய 2000 ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மொழி பேசுவோர் இன்று உலகெல்லாம் பரவி இருப்பதால், பல நாடுகளில் இருந்தும் வருகின்ற சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து பார்க்கும் முக்கிய நினைவுச் சின்னமாகத் திருவள்ளுவரின் சிலை அமைந்திருக்கின்றது. இந்த திருவள்ளுவரின் நினைவுச் சின்னம் 2004 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையால் சிறிதளவு பாதிக்கப்பட்டாலும், பின்னாளில் திருத்தி அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை எழுப்பிய 15வது வருட நினைவு தினம் திருவள்ளுவர் சிலை பாறை வளாகத்தில் கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தினால் 2015 ஆம் ஆண்டு ஐனவரிமாதம்; கொண்டாடப்பட்டது.  இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தை தேசிய அளவில் கொண்டாடவும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு திருக்குறள் திருப்பயணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்மினத்தின் அடுத்த தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய நினைவுச்சின்னங்களில், உலகெல்லாம் தமிழரின் புகழ் பரப்பி நிற்கும் இந்த திருவள்ளுவர் சிலையும் ஒன்றாகும்.

(நன்றி: தமிழர் தகவல்)

AWEYIAR - ஒளவையார்

ஒளவையார் சிலை

 (குருஅரவிந்தன்)

தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் பெறும் புலவர்களில் ஒளவையாரும் ஒருவர். தமிழரின் புகழை உலகெல்லாம் பரப்பி நிற்பவர்களில் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல ஒளவையாரும் முக்கியமானவர். இவர் தமிழ் சிறுவர், சிறுமிகளுக்குக்கூட நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவராவார். ஓளவைப்பாட்டி என்று குழந்தைகள் இவரை பாசத்தோடு சொல்வதுண்டு. இவரது பெருமையைப் பாராட்டி மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை அமைத்திருக்கின்றார்கள். இந்தச் சிலை உருவாக்குவதற்கான செலவை சென்னை மாநகராட்சியினர் ஏற்றுக் கொண்டனர். ஒளவையாரின் வலது கையிலே ஊன்றுகோலும், இடது கையிலே ஏடும் இருக்கின்றது. பொருளுக்கு ஆசைப்படாதவர் என்பதால், அவரது கழுத்திலே, கையிலே, காதிலே எதுவும் இல்லை. ‘சோம்பித் திரியேல்’ என்ற அவரது வாக்கியத்தை நிரூபிப்பது போல, இடதுகாலை முன்வைத்து, தடியூன்றி நடப்பது போன்ற தோற்றத்தில் இந்த ஒளவையாரின் சிலை அமைந்திருக்கின்றது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய பிரபலங்களின் சிலைகள் அமைவதால் பலருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையினரும், சுற்றுலாப் பயணிகளும் சிலைக்கு உரியவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்த முடிகின்றது. கலை என்பதே ஐதீகமும் நம்பிக்கையும்தான் என்பதால், அந்த வகையில் ஒளவையார் பற்றியும், அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் பலர் அறிந்து கொள்ள இந்த ஒளவையார் சிலை உதவியாக இருந்திருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், முக்கியமாகத் தமிழர்கள் மெரினா கடற்கரைக்குச் செல்லும்போது, ஆர்வத்தோடு பார்க்கும் முக்கிய நினைவுச் சின்னமாக ஒளவையாரின் சிலையும் அமைந்திருக்கின்றது. அதனால் இன்று ஒளவையார் பற்றிய தேடல்களும் அதிகரித்திருக்கின்றன. இதே போலவே யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் ஒளவையார் சிலையைக் கண்டிருக்கின்றேன்.

ஒளவையார் என்னும் பெயர் பூண்ட, வௌ;வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலர் இருந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சங்ககாலம், இடைக்காலம், சோழர்காலம் என்று ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த பெண் புலவர்களையும் ஒளவையார் என்றே அழைத்தனர். ஒளவை என்பது மூதாட்டி என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி குறிப்பிட்டாலும், பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், அறிவில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்பட்டது. ஒளவையாரின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியான முறையில் வரையறுக்கப் படவில்லை. சங்கநூல்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் ஒளவையாரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சிறுவர்களுக்காக அகரவரிசையில் எழுதப்பட்ட ‘ஆத்திசூடி’ மற்றும் முக்கியமாகக் கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை போன்ற அவரது நூல்களையும் இங்கே குறிப்பிடலாம். சங்கப் பாடல்கள், தனிப்பாடல்கள், நீதி நூல்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியம் என்று இவற்றை வகைப்படுத்தலாம். ஓளவையாரின் புலமையை மெச்சிய அதியமான் மன்னன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை அவருக்கு வழங்கியதாகவும் கதை உண்டு.
தமிழ் இலக்கியத்திற்கு ஒளவையார் ஆற்றிய தொண்டைப் பாராட்டி ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் சதய நட்சத்திரத்திலன்று தமிழ் நாட்டில் நாகபட்டினத்தில் உள்ள வேதாரணியத்தில் உள்ள கோயிலில் உள்ளுர் மக்களால் நீண்ட காலமாக விழா எடுக்கப்படுகின்றது. இங்கேதான் ஒளவையாரிடம் முருகக்கடவுள் சிறுவனாக வந்து ‘சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா’ என்று கேட்டதாக ஐதிக கதையுண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பாண்டல் என்ற கிராமத்தில் ஒளவையாருக்கு ஒரு பழமைவாய்ந்த கோயிலும் உண்டு.
தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் பழமைவாய்ந்த கரபுரநாதர் திருக்கோயில் முகப்பு வாசலுக்கு அருகே ஒளவையார் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, எப்போதுமே பகைவர்களாக இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாகவும் ஐதிகக் கதை உண்டு.
2009 ஆம் ஆண்டு ரெட்ஹென் அச்சகத்தினர் மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை எடுத்துச் சொல்லும் ஒளவையாரின் படைப்புக்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். மகளிர் தினத்திலன்று ஒளவையாரின் பெயரில் சிறந்த பெண்மணி ஒருவருக்குத் தமிழ்நாட்டில் விருதும் வழங்கப் படுகின்றது.
(நன்றி: தமிழர் தகவல்)

Dreams - ME for WE

 Good teams become great once the members trust each other
Enough to surrender the ME for the WE – Phil JackonDREAMS


கனவுகள் எல்லோருக்கும் வரும். நல்ல கனவுகளை
இலட்சியமாக மாற்றுபவன்தான் சாதனையாளனாகிறான்.
-குரு அரவிந்தன்.


மொழி அழிந்தால் நம்
இனம் அழியும்
மாவீரரின் தியாகங்கள்
வீணாகும்

எந்த மொழி காக்க
இங்கு வந்தோம்
ஏன் அதை  இன்று
மறந்து விட்டோம்.?


Monday, July 6, 2015

SOPCA - Magazine - 2015

வணக்கம்.

சொப்கா மஞ்சரி – 2015

 6 வது ஆண்டில் இன்று சொப்கா குடும்பத்தினராகிய நாங்கள் ஒன்றிணைந்திருக்கின்றோம். சொப்கா மன்றத்தின் நாலாவது இதழான சொப்கா மஞ்சரி – 2015 யை இன்று வெளியிட்டு வைப்பதில் பெருமைப்படுகின்றோம். எமது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியமான நல்வாழ்கைக்காக எமது மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை இந்த மண்ணில் பாதுகாப்பதற்காக சொப்கா குடும்பத்தினர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். வழமைபோல கலாச்சார நிகழ்வுகளை மட்டுமல்ல, பயிற்ச்சிப்பட்டறைகள் மூலம் தெளிந்த அறிவைப் பெறுவதற்கும், இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்பதற்கும், பூங்காவைத் துப்பரவு செய்தல், உணவு வங்கிக்கு உணவு தானம், இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்வது போன்றவற்றிலும், வருமானவரி சேவை போன்றவற்றிலும் எமது மன்ற அங்கத்தவர்கள் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றனர். இந்த மன்றத்தின் தலைவராக இதுவரை இருந்து எம்மை வழிநடத்திச் சென்ற திரு. ஏ. ஜேசுதாசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்து, புதிய தலைவரான வாணி செந்தூரனை மகிழ்வோடு வாவேற்கின்றோம். எம்மவரின் ஆக்கங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பெருநோக்கோடு சிறுவர்கள் இளைஞர்கள் போன்றோரின் பெறுமதியான 23 கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்திருக்கின்றன. இதுவரை சுமார் 100 மேற்பட்ட சிறார்கள் இளைஞர்களின் கட்டுரைகள் சொப்கா மலர்களில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு உதவியாக இருந்த மலர்க்குழுவினர், வாழ்துச் செய்தி அனுப்பியவர்கள், விளம்பரங்கள், ஆக்கங்கள், அட்டைப்படம் வரைந்து தந்து உதவியவர்களுக்கும், ஜே.ஜே பிறின்ரேஸிக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


This year marks our sixth anniversary and our organization has seen tremendous growth and support over the years. The promotion of our culture in addition to community support has been the main contributors to our success. Our junior members also received the volunteer service awards this year and we extend our best wishes to them.  On behalf of the SOPCA Manjari – 2015 committee, I would like to thank everyone for their support and community efforts towards the release of this magazine. We would also like to thank our retiring President, Mr. A. Jesuthasan, for the wonderful service and his contributions over the past 6 years, and wish him all the best in new endeavours. Lastly, we would like to welcome our new President Ms. Vanee Senthooran, and look forward to her leadership as SOPCA continues to grow.

Thank You.
Kuru Aravinthan
Chief Editor, Vice President.

June 28th 2015

Saturday, July 4, 2015

Solar Plane Impulse - 2 இம்பல்ஸ்-2சூரிய சக்கியால் இயங்கும் சோலார் விமானம் ஒன்று இப்பொழுது உலகை வலம் வருகின்றது. இதற்கு ‘இம்பல்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். சூரிய சக்தியால் இயங்கும் இந்த விமானமான  ‘இம்பல்ஸ்’ சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டது. சூரிய சக்தியால் விமானத்தை இயக்க முடியம் என்பதைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் இந்த விமானம் பயணம் செய்து வருகிறது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் அண்ட்ரூ போர்ஸ் பெர்க் மற்றும் மருத்துவரான பெர்ட்ரண்ட் பிக்கார்ட் ஆகியோர் இவ்விமானத்தை இயக்குகின்றனர்.

சென்ற மார்ச் மாதம் 9 ஆம் திகதி அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய இந்த விமானம்  இன்னும் சில நாட்களில் மீண்டும் அபுதாபிக்குச் சென்று பயணத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வந்த இந்த விமானம் அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்து மீண்டும் 4 ஆம் திகதி புறப்படுவதாக இருந்தாலும் வானிலை சரியில்லாத காரணத்தால் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டது. தற்போது வானிலை சரியானதால் மீண்டும் பயணத்தை தொடங்கி, ஜப்பானில் இருந்து ஹவாய் தீவு சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளது.


வர்த்தக ரீதியில் சோலார் விமானங்கள் தயாரிப்பதற்கு இந்த விமானப் பயணம் மிகவும் முன்மாதிரியாக அமையும் என எதிர்பாரக்கப் படுகின்றது. சூரிய சக்தி விமானங்கள் தயாரிக்கப்பட்டால் விமானக் கட்டணங்களும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, காற்று மாசுபடுவது இதன் மூலம் குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய சக்தி மூலம் பாவனை தொடருமானால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் செல்வாக்குக் குறைந்து விடுமோ என்ற பயமும் அவர்களுக்கு இந்த விமானத்தால் ஏற்பட்டிருக்கின்றது.


Solar Powered Plane.

Five days after he took off from Japan, Pilot Andre Borschberg landed the plane on the Hawaiian island of Oahu on Friday morning July 3rd 2015.

Ending the longest and most dangerous leg in his team's attempt to fly around the world without a drop of fuel.

It also was the longest flight in time and distance more than 8,200 kilometers, for a plane run only on solar power,

Thursday, July 2, 2015

Inside Out - இன்சைட் அவுட்

இன்சைட் அவுட்


வால்ட் டிஸ்னி வெளியிட்ட படமான இன்சைட் அவுட் (Inside Out) என்ற இந்த ஆங்கிலப்படம் சற்றும் எதிர்பாராத வருமானத்தை முதல் வாரத்திலேயே ஏற்படுத்தியிருந்தது. எல்லோராலும் புகழப்பட்ட அவற்ரார் படம் முதல் வாரத்தில் 77 கோடி வசூலை ஏற்படுத்தி சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை உடைத்து இன்சைட் அவுட் 90 மில்லியன் வசூலைக் கொண்டு வந்து குவித்திருந்தது.

பிக்ஸர் அனிமேஷன் ஸ்ரூடியோ இந்தப்படத்தை தயாரித்திருந்தது. கணனி மூலம் அனிமேட் செய்யப்பட்ட நகைச்சுவைப் படமாக சிறுவர்கள் பார்த்து இரசிக்கத் தக்கதாக இருக்கின்றது. ஆனால் உண்மையிலே சிறுவர்களை விட திரையரங்கில் இருந்த பெரியவர்களே அதிகம் சிரித்து மகிழ்ந்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர்களுக்கு இந்தக் கதை விளங்குவது கொஞ்சம் கடினமாக இருக்குமோ என்று எண்ணினேன். காட்சிகளைப் பார்த்துச் சிரித்தார்களே தவிர அவர்களுக்குக் கதை விளங்கியதா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது.

இந்தப்படம் இதுவரை 282 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூல் செய்திருக்கின்றது.


Inside Out


This Film produced by Pixar Animation Studios 

Released by Walt Disney Pictures

Directed by Pete Docter 

The film is set in the mind of a young girl, Riley Anderson (Kaitlyn Dias), where five personified emotions. Such as Joy, Anger, Disgust, Fear, and Sadness.The most important memories, known as "core memories"