Wednesday, July 29, 2015

Arangetram - Abarna Selvarajah

அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

மாலினி அரவிந்தன்


சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.


இந்த அரங்கேற்ற நிகழ்வின் இசைக் கலைஞர்களாக ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு, கார்த்திகேயன் இராமநாதன், கல்யாணி சுதர்சன் ஆகியோருடன் இளம் கலைஞர்களான ஐஸ்வரியா சந்துரு, அனுஷன் மோகனராஜ், அபிநயா சந்துரு ஆகியோர் மிகவும் சிறப்பாக இசை வழங்கினர். முக்கியமாகத் தெலுங்குக் கீர்த்தனங்களில் மட்டும் தங்கியிராமல், பார்வையாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய மொழியான தமிழ் மொழிப்பாடல்களையும் தெரிவு செய்து தமிழ் மொழியை இந்த மண்ணில் தக்கவைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டப்பட வேண்டும்.  ‘அன்னமே அருகில்வா அந்தரங்கம் ஒன்று சொல்வேன்,’ ‘விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்’ போன்ற பாடல்கள் இடம் பெற்ற போது புரிந்த மொழியாகையால் அபர்னாவின் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களின் கரவொலி மூலம் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட குரு அரவிந்தன் அவர்களின் பிரதம விருந்தினர் உரையில் இருந்து சில பகுதியை இங்கே தருகின்றேன்:
‘சபையோருக்கு எனது மாலைவணக்கம். இன்று செல்வி அபர்னா செல்லராசாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையிலே எமது மொழி, பண்பாடு,  கலை கலாச்சாரம் போன்றவற்றை முன் எடுத்துச் செல்லும் செல்வி அபர்னா போன்றவர்களைப் பாராட்ட நாம் என்றும் தயக்கம் காட்டக்கூடாது. கடந்த 12 வருடங்களாக பரதநாட்டியக் கலையைப் பயின்று இன்று அரங்கேற்றம் செய்யும் செல்வி அபர்னா அவர்கள் சமீபத்தில் கலைமன்றத்hல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிப் பரிட்சையில் சிந்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. I.B Program  முடித்துக் கொண்ட செல்வி அபர்னா அவர்கள் ஓட்டாவா பல்கலைக் கழகத்திற்குச் சென்று அங்கே அரசியல் அறிவியல், உலக சரித்திரம் போன்ற பாடங்களைச் சிறப்புப் பாடமாக எடுக்க இருக்கின்றார். கல்விச் செல்வம் ஒன்றுதான் எங்களிடம் நிலைத்து நிற்கும் செல்வமாகையால் உயர் படிப்பிலும் ஆர்வம் காட்டும் செல்வி அபர்னா அவர்கள் அங்கும் சிறப்பாக சித்தியடைய எனது இனிய வாழ்த்துக்கள்.


இதைவிட மாலினி அரவிந்தனின் தமிழ் மொழி மாணவியான செல்வி அபர்னா அவர்கள் தன்னார்வத் தொண்டராகப் பல இடங்களில் சேவையாற்றியிருக்கின்றார். குறிப்பாக நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரது தாயாரான திருமதி சுதர்சனி செல்வராசாவுடன் அபர்னாவும் அவரது சகோதரியும் தாமாகவே வந்து இந்த மண்ணில் தமிழ் மொழியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு எங்களுக்குப் பல வழியிலும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.


இச் சந்தர்ப்பத்தில் அபர்னாவின் குருவான ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களையும் இங்கே பாராட்ட விரும்புகின்றேன். ஒவ்வொரு வருடமும் ‘நிருத்த நிறைஞ்சர்’ விழாவின்போது என்னையும் அவர் அழைப்பார். ஏதிர் காலச் சந்ததியினரை நல்வழியில் கொண்டு செல்வதற்கு அவர்தரும் தன்னலமற்ற ஆக்கமும் ஊக்கமும் பாராட்டத் தக்கது. அவரிடம் பயின்ற மாணவ, மாணவிகள் இன்று பலராலும் பாராட்டத் தக்கவர்களாக பரதநாட்டிய உலகில் தமக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்பதும் பெருமைகுரியது. இந்த அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த இசை வழங்கும் கலைஞர்களையும், சுதர்சன் துரையப்பா அவர்களையும் பாராட்டுகின்றேன்.

அடுத்ததாக அபர்னாவின் பெற்றோர்களான திரு செல்வராஜா முருகேசு திருமதி சுதர்சனி செல்வராஜா அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்ட விரும்புகின்றேன். பிள்ளைகளை நல்வழிப்படுத்த என்ன செய்ய முடியமோ அதை மிகவும் கவனமாகச் செய்திருக்கின்றார்கள். தங்கள் பொன்னான நேரத்தைப் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகச் செலவிட்டிருப்பது போற்றப்பட வேண்டியது. எங்கள் பாரம்பரிய கலையான பரதநாட்டியக் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் செல்வி அபர்னா செல்வராஜா அவர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டி என் உரையை முடித்துக் கொள்கின்றேன்.          Good evening,

First, I would like to congratulate Abarna Selvarajah for her outstanding performance and tonight’s entertainment. I would like to take some time today to briefly speak about Abarna’s recent achievements and interests.

Abarna has been enrolled at Kalaimanram and actively involved with dance for the past 12 years. She recently passed the teacher’s grade examination under Kalaimanram – academy for Fine Arts. Coming September she will be awarded the 'Nirutha Nirainger' title. She has also participated in various dance programs through Kalaimanram such as FeTNA.

She recently completed her High School diploma and I.B. program at Turner Fenton Secondary school. While at Turner, she also finished the International Languages program in Tamil, earning 3 high-school credits up to the date. During high school Abarna also received many awards, including the Principal Reception as well as Honour Roll every year. In September she will be attending the University of Ottawa to obtain a Joint Honors bachelor degree in Political Science and History, while completing the extended French stream.


Outside of academics, Abarna has been volunteering part-time with her local elementary school’s Kindergarten class. Last year she was on the executive team of SOAR, a conference designed to help middle schoolers better accommodate themselves into high school. Two years back, she served on the Student Council at her high-school and also attended multiple leadership conferences, such as Count Me In, IMPACT, and START.In the future, Abarna would like to work for the United Nations to combat international poverty related issues, and further her dance career as the end of her Arangetram is only the beginning of her dance journey.


I wish Abarna all the best in her future journeys, and look forward to the stage of her dance career.  Thank You.

Kuru Aravinthan

Writer, Teacher, Accountant.

VP: Canadian Tamil Writers Association.
VP: SOPCA - Screen Of Peel Association.
Patron: Ontario Tamil Teachers Association.
No comments:

Post a Comment