Tuesday, September 1, 2015

Abiramy Dance Academy - அபிராமி நடனக் கல்லூரி

அபிராமி நடனக் கல்லூரியின் 20வது ஆண்டு விழா

மாலினி அரவிந்தன்

NATYAKALABAM

Sri Abiramy Academy was formed by Smt.  Senthil Selvi Sureswaran in 1975. The Academy's Silver Medal for two consecutive years in Ontario Dance Festival, and the title 'Aadal Arasi' to Senthilselvi Sureswaran are considered outstanding.


Abiramy Dance Academy’s 20th anniversary function was held on August 30th 2015 at Don Bosco Catholic School, St. Andrew Blvd, Toronto. This organization was formed by ‘Adal Arasi’ Senthilselvi Sureswaran in 1995. Smt. Selvi Sureswaran was a fully trained professional teacher in Sri Lanka before migrating to Canada. Originally, the organization coached students in the city of Toronto and slowly expanded its branch to Waterloo, Ontario. Due to popularity of the dance among fellow Canadians Smt. Selvi started dance classes in Mississauga and Scarborough. The students of her academy performing contemporary dances took the South Indian art form to elevated status on Toronto stages. In this anniversary function about one hundred students participated and performed a variety of different dance styles.The Chief Guest speech was delivered by Dr. Kathir Thuraisingham. Smt. Selvi Sureswaran delivered the vote of thanks. In her speech she thanked all the parents of her students who have brought their children from different places to participate in this event. Also she expressed her sincere gratitude towards their sponsors and audience.சென்ற ஞயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 30 ஆம் திகதி 2015 இல் அபிராமி நடனக் கல்லூரியின்
 20 வது ஆண்டுவிழாவான நாட்டியகலாபம்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. டொன்பொஸ்கோ கத்தோலிக்க பாடசாலை பார்வையாளர் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.


கல்லூரி அதிபர் ஸ்ரீமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாகத் தயாரித்திருந்தார். அவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த ஸ்ரீமதி திவ்யசிவா சுந்தர் அவர்கள் மாணவிகளுக்குப்; பயிற்சி கொடுத்து சிறப்பாக இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிரதம விருந்தினர்களாக மகாஜனக்கல்லுர்ரி பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) முன்னால் தலைவரான டாக்டர். கதிர் துரைசிங்கம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கு பற்றியவர்களும் தன்னார்வத் தொண்டர்களுமாகச் சுமார் நூறு மாணவ, மாணவிகள் வரை அடங்குவர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்குச் சில காரணங்கள் பின்னணியில் இருந்ததை நான்; அவதானித்தேன். பார்வையாளர்கள் அனேகமானவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்குப் பிடித்தமான பாடல்கள் தமிழில் இருந்தது முக்கியமாக அவதானிக்கப்பட்டது. அடுத்து கோகிலத்துக் கண்ணனைப் பற்றிய பாடல்கள் அதிகமான இடம் பெற்றிருந்தன,


அதிலும் பாரதியின் பாடல்கள் எல்லோரையும் கவர்ந்திருந்தன. குறிப்பாகத் தீராதவிளையாட்டுப் பிள்ளை என்ற பாடலுக்கு அவர்கள் சிறப்பாக அபிநயம் பிடித்தது மட்டுமல்ல அந்த முகபாவங்கள் அப்படியே ரசிகர்களை உள்வாங்கிவிட்டது. ஸ்ரீமதி செந்தில் செல்வியின் சோலே நடனமும், ஸ்ரீமதி திவ்யாவின் நடனமும் அப்படியே பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.மகாஜனக்கல்லூரி ஆண்டு விழாக்களில் ஸ்ரீமதி செந்தில்செல்வியின் மாணவிகளின் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றாலும் நானும் மேடையில் உதவிக்கு நிற்பதால் அரங்கில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமிருந்தது. அந்த மனக்குறை நீங்கியது போன்ற உணர்வு இந்த நிகழ்ச்சியின் பின் எனக்குள் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 2015 இல் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழா நிகழ்ச்சியின்போது, செந்தில் செல்வியின் நிகழ்ச்சியை  நானும் அரங்கில் இருந்து பார்க்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.பிரதம விருந்தினர் டாக்டர் கதிர் துரைசிங்கத்தின் உரையைத் தொடர்ந்து நன்றியுரை இடம் பெற்றது. கல்லூரி அதிபர் ஸ்ரீமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்கள் தனது நன்றி உரையில் மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு தனது நன்றிக்கடனை நிவர்த்தி செய்தது, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நிறைவான உணர்வை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்த திரு. சுரேஸ்வரனுக்கும் எமது பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment