Monday, October 26, 2015

Kalaimanram - 2015 - Niruththa Niraignar

நிருத்த நிறைஞர் - Abarna Selvarajah

Abarna Selvarajah(Manimala)சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ கலை மன்றத்தின் விருது வழங்கும் விழா ஜோர்க்வூட் அரங்கத்தில் நடைபெற்றது. நிரஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கலைமன்றத்தின் பதினொராவது ஆண்டு பட்டமளிப்பு விழா இதுவாகும். இந்த பரிசளிப்பு விழாவில் நிருத்த நிறைஞர்களாக அபிநயா சந்துரு,  அபர்னா செல்வராசா, பிரிந்திகா விஜயரத்தினம் ஆகியோர் இவ்வருடத்திற்கான பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.ஆசிரியர் தராதரத்திற்காக பட்டத்தை நிசாஜினி லோகேந்திரன், மீரா புவிதரன்,சாய்பிரஷானி ஜெயந்திரன், அபிஷனா ஜெயசுந்தரராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதலாம் தரத்தில் இருந்து ஆறாம் தரத்திலான மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. குரு அரவிந்தன் மாலினி அரவிந்தன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவில் குரு அரவிந்தன் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைத் தருகின்றோம்.

நிருத்த நிறைஞர்  - அபர்னா செல்வராசா
அபர்னாவின் நடன அரகேற்றத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும்படி என்னிடம் அபர்னாவின் குருவான ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களும், அபர்னாவின் பெற்றோர்களான திரு.திருமதி செல்வராசா அவர்களும் அன்புடன் அழைத்திருந்ததால் எனக்கும் அபர்னாவின் அரங்கேற்றத்தில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

Guru Niranjana - Kuru Aravinthan - Abarna
ரொறன்ரோவில் உள்ள றிச்மன்கில் அரங்கத்தில் (Richmond Hill Centre for the Performing Arts) யூலை மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அபர்னாவின் நடன அரங்கேற்றத்தில் எனது மனைவியும் நானும் கலந்து கொண்டு அபர்னாவின் நாட்டியத் திறமையைப் பாராட்டியிருந்தோம்.
கலைமன்றத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவான இன்று மீண்டும் அபர்னாவைப் பாராட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக நான் கடமையாற்றிய போது அபர்னாவின் குடும்பத்தினருடன் பழகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதிப்புக்குரிய ஸ்ரீமதி நிரா சந்துருவின் மாணவிதான் அபர்னா என்பதை அறிந்போது மிகவும் பெருமைப்பட்டேன்.

பரதநாட்டிய உலகில் அறிமுகமே தேவையில்லா இவரின் குருவான ஸ்ரீமதி நிரா சந்துருவைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. திறமை மிக்க நடன ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு செயல்படுபவர் ஸ்ரீமதி நிரா சந்துரு அவர்கள். 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கலைமன்றம்’ என்ற இந்த விருட்சம், இன்று பல திசைகளிலும் கிளைகளைப் பரப்பிக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. இதன் மூலம் இதுவரை பல நிருத்த நிறைஞர்களையும், ஆசிரியர்தர பட்டதாரிகளையும், கலைமன்றத்தின் அதிபர் ஸ்ரீமதி நிரா சந்துரு அவர்கள் உருவாக்கி இந்த மண்ணில் எங்கள் இனத்திற்குப் புகழ் தேடித் தந்திருக்கின்றார். ஏங்கள் பண்பாடு கலாச்சாரத்தை மட்டுமல்ல எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 5 வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழியில் மட்டுமே உரையாற்றினோம். இப்பொழுது ஆங்கிலத்திலும் உரையாற்றும்படியான தேவை ஏற்பட்டிருக்கின்றது. காலப்போக்கில் தமிழின் இடத்தை ஆங்கிலம் பிடித்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது.

Guru Nirainjana - Chief Guest Kuru Aravinthan - Abrana Selvarajah
செல்வி அபர்னா ஐந்து வயதில் இருந்தே ஆடற்கலையைக் கற்றவர். தனது விடா முயற்சியால் ஆசிரியத் தரத்தில் சித்திபெற்ற இவர்  இன்றைய கதாநாயகிகளில் ஒருவராக நிருத்த நிறைஞர் தகுதியையும் பெறுகின்றார். பல்கலைக்கழக மாணவியான செல்வி அபர்னா, தாய் மொழியாம் தமிழ் மொழியில் மிகவும் பற்றும், திறமையும் கொண்டவர். நாட்டிய ஆசிரிய தராதரப் பரீட்சைக்காக அபர்னா  Bharathanatyam Arts within a True Divine Art என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பரதநாட்டியக் கலையின் தெய்வத்தன்மை பற்றி மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இச்சந்தர்ப்பத்தில் நிருத்த நிறைஞர் பட்டம் பெறும் செல்வி அபர்னா செல்வராசாவையும் ஏனைய நாட்டிய தாரகைகளையும் எதிர்காலத்தில் எல்லா நலனும் பெற்று, சிறந்த நாட்டிய தாரகைகளாகத் திகழவேண்டும் என்று பாராட்டி வாழ்த்துகின்றேன். இவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களையும், ஆசிரியர்களையும், பெறோர்களையும் மனதாராப்பாராட்டி வாழ்த்துகின்றேன்.

குரு அரவிந்தன்
(எழுத்தாளர், கணக்காளர், ஆசிரியர்)
உபதலைவர்: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
காப்பாளர்: ஓன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம்.
25-10-2015

Miss. Abarna Selvarajah    - Niruththa Niraignar


First, I would like to congratulate Abarna Selvarajah for her outstanding performance at her Arangetram on Friday July 24th 2015.  It is my pleasure to introduce this talented Bharathanatya student Miss. Abarna Selvarajah to mark her ‘Niruththa Niraignar’ graduation ceremony organized by the Kalaimanram of Fine Arts and Yoga.


I would like to take some time today to briefly speak about Abarna’s recent achievements and interests. Abarna has been enrolled at Kalaimanram and actively involved with dance for the past 12 years. She recently passed the teacher’s grade examination under Kalaimanram – academy for Fine Arts and Yoga.  She   was recently awarded the Nirutha Nirainger title. She has also participated in various dance programs through Kalaimanram such as FeTNA.


She recently completed her High School diploma and I.B. program at Turner Fenton Secondary school. While at Turner, she also finished the International Languages program in Tamil, earning 3 high-school credits up to the date. During high school Abarna also received many awards, including the Principal Reception as well as Honour Roll every year. In September began attendance at the University of Ottawa to obtain a Joint Honors bachelor degree in Political Science and History. She is also still continuing Baranatyanam while in Ottawa.


Outside of academics, Abarna was volunteering part-time with her local elementary school’s Kindergarten class. Last year she was on the executive team of SOAR, a conference designed to help middle schoolers better accommodate themselves into high school. Two years ago, she served on the Student Council at her high-school and also attended multiple leadership conferences, such as Count Me In, IMPACT, and START. In the future, Abarna would like to work for the United Nations to combat international poverty related issues, and further her dance career as the end of her Arangetram is only the beginning of her dance journey.


I wish ‘Nirutha Niraingnar’ Abarna all the best in her future journeys, and look forward to the next stage of her dance career.  Her Guru Smt. Nirainjana Chanthuru and her parents Mr. and Mrs. Selvarajah deserve my thanks as they have been instrumental in passing on our traditions onto the next generation.

Thank You.

Kuru Aravinthan
Writer, Teacher, Accountant.
V.P: Canada Tamil Writers Association.
Patron: Ontario Tamil Teachers Association.
NISAGINI LOGENDRAN (Teachers Grade)


No comments:

Post a Comment