Thursday, January 28, 2016

Kuru's Page - 1- Vijay TV Super singer
கண்டதும்! கேட்டதும்!!

குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’

எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
-------------------------------------------------------------------------------------------------

விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் - 1


சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜே தொலைக்காட்சியில் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து பல பாடகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார்கள். விஜே தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கான வசதிகள் கனடாவில் அதிகரிக்கப்பட்டதால் பார்வையாளர்களும் அதிகரித்தனர். இங்கே உள்ள தொலைக்காட்சிகளும் நல்ல பல நிகழ்ச்சிகளைத் தந்த வண்ணமே இருக்கின்றன. சிலருக்குப் பிடிக்கலாம், வேறுசிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தற்போது இசை ஆர்வமுள்ள கனடிய தமிழ் இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து (ஐனுநுயுடு ஐளுயுஐ ஐNஊ.) இசைக் குழு ஒன்றை இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல முயற்சி, சிறப்பாக, ஒற்றுமையாகச் செயற்பட்டால் முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வாழ்த்துகின்றேன்.


இன்று பொது இடங்களில் யாராவது இசையில் ஆர்வமுள்ளவர்கள் சந்தித்தால் அவர்களின் பேசுபொருளில் சுப்பர் சிங்கரும் ஒன்றாக இருக்கின்றது. கனடாவில் இருந்து சென்ற சுபவீன் சண் தொலைக்காட்சியின் சண்சிங்கர் போட்டியில் பரிசு பெற்றிருந்தார். அதே போல கனடாவில் இருந்து சென்ற ஜெசிகா யூட் (ளுளுது10 துநளளiஉய) வைல்ட்காட் ( றடைன உயசன ) மூலம் விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர்- யூனியர் 4 இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தார். ஆனாலும் பெப்ரவரி 2015 நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பூர்த்தி முதலாவது இடத்தையும், ஜெசிகா இரண்டாவது இடத்தையும், ஹரிப்பிரியா மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஜெசிகா தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அனாதை இல்லங்களுக்குத் தானமாகக் கொடுத்திருந்தார். ஜெசிகாவின் நல்ல மனது பாராட்டுக்குரியது. இப்பொழுது சுப்பர் சிங்கர் சீனியர் - 5 நடைபெறுகின்றது.


இதுவரை நடந்த சுப்பர்சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில், நிகில் மத்யூ, அஜீஸ், சாய்சரன், திவாகர் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றிருந்தனர். சுப்பர்சிங்கர் 5வது நிகழ்ச்சியில் ராஜகணபதி, ஆனந் அரவிந், பரிதா, லட்சுமி, பிரியா, சியாட், அர்ஜ+ன் ஆகிய ஏழு பாடகர்கள் சென்ற வாரம் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் லட்சுமியும் அடுத்த சுற்றில் பிரியாவும் வெளியேற்றப்பட்டனர். ஆனந் வைத்திய நாதனுக்குப் பிரியாவை வெளியேற்றுவதில் உடன்பாடு இல்லாததால் அவர் வெளிநடப்பு செய்வதாகச் சொல்லி வெளியேறினார். பார்வையாளர்கள் புத்திசாலிகள், எல்லாமே திட்டமிட்டு நடப்பதுபோலத் தெரிந்தது. ஆனாலும் இப்படி ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து  நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதும் எமக்குத் தெரியும். இப்பொழுது ராஜகணபதி, ஆனந் அரவிந், பரிதா, சியாட், அர்ஜ+ன் ஆகிய ஐவரும் இடம் பெற்றிருக்கின்றனர். மனோ, ஸ்ரீனிவாஸ், உன்னிகிருஷ்னன் ஆகியோர் இவ்வாரம் நடுவர்களாக இருந்தனர். மா.கா.பாவும் பிரியங்காவும் நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டு நடத்தினர். இனி வரும் சுற்றுக்களில் வைல்ட்காட் முறையில் தெரிந்தெடுக்கப் பட்டவர்களும் இனி உள்ளே வருவார்கள். பார்வையாளர்களுக்காக ஸ்ரீனிவாசும் அவரது மகள் சரணியாவும் ‘மாண்புறு மங்கையே’ என்ற பாடலை அழகாகப் பாடி எல்லோர் மனதையும் கவர்ந்தார்கள்.


‘இரண்டு யானைக்குட்டிகள் கண்ணாமூச்சி விளையாடுவது போல இருந்தது’ என்று யாரோ பரிதா பற்றி முகநூலில் எழுதியது அவரை மனரீதியாக நோகவைப்பதற்காகவே என்பது மட்டும் புலனாகின்றது. இதைத்தான் ‘காய்க்கிற மரத்திற்குத்தான் எறி விழும்’ என்று எமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எது எப்படி இருந்தாலும் ஐவரில் ஒருவராகப் பரிதா எடுபட்டிருக்கின்றார். குரல் வளத்தைவிட உடல் வளத்தைத்தான் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இதுவரை பொய்யாக்கி இருக்கிறார்கள் நடுவர்கள். இனிவரும் வாரங்கள் சிறப்பாக அமையலாம்.  இம்முறை இறுதி முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment