Sunday, March 27, 2016

முகநக நட்பது - 8

கண்டதும்! கேட்டதும்!!

முகநக நட்பது நடபன்று – 8

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்ற வாரம் போட்டி முடிவுகளை அறிவித்திருந்தார்கள். பரிதா, ராஜகணபதி, சியாத், லக்ஷ்மி, ஆனந் அரவிந்த்; ஆகியோர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். இவர்களில் ஆனந் அரவிந்த் முதலாவது இடத்தையும், பரிதா இரண்டாவது இடத்தையும், ராஜகணபதி மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இது புதிய பாடகர்களுக்கான தேர்வு என்று சொன்னாலும், முதலாவதாக வந்த ஆனந் அரவிந் ஏற்கனவே ஆரோகணம், நீர்ப்பறவை போன்ற படங்களுக்கு மட்டுமல்ல, வேறு சில படங்களுக்காகவும் (2012) பாடியிருந்த பின்னணிப் பாடகராவார். ஜேர்மனியில் இருந்து சென்று போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான நிருஜனைப் பற்றி ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சிறந்ததொரு பாடகராக இருந்தும், இலட்சக் கணக்கான ஈழத்தமிழரின் வாக்குகளைத் தனது அலட்சியத்தால் இழந்தவர் இந்த நிருஜன். இசை ஆர்வம் கொண்ட ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பது போல, சாம் என்ற அன்பர் ஒருவர் நிருஜனின் முகநூலில் இப்படி ஒரு பதிவை ஆங்கிலத்தில் பதிந்திருந்தார்.
‘ I feel you haven't represented Eelam Tamils in anyway because you haven't selected any songs similar to Jessica to show our Eelam Tamils Pain to India. Jessica earned so much sympathetic with world Tamils but you have missed that opportunity. I feel you brought up in Germany without knowing much about the Eelam Tamils Painful stories. Any how you have gained much experience from India. At least now on wards you can select Eelam related songs to sing in musical programs. Similar to "En innamey En Saname" song, or Another song is Oru Theivam Thantha Poovey"  Have a nice Journey.’  
என்று அவர் எழுதியிருந்தார். ஈழத் தமிழரின் உணர்வுகள் ஆங்காங்கே நீறுபூத்த நெருப்பாய் இருக்கத்தான் செய்கிறது என்பது இப்படியான பதிவுகளில் இருந்து புலப்படுகின்றது.

வலிகாமம் கல்வி வலைய பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக்கல்லூரி பெண்கள் அணி 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுச் சாம்பியனாகியது. மகாஜனக்கல்லுர்ரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி போட்டியிட்டது. மகாஜனக் கல்லூரியின் பரீட்சை முடிவுகளும் இப்போது சிறப்பாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. யுத்தத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்டு அங்குமிங்கும் இடம் பெயர்ந்த கல்லூரியாக இருந்தாலும் மீண்டும் எழுந்து நிற்க முயல்வதைப் பாராட்டியேயாக வேண்டும். இந்தப் பாராட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களுக்கும் உரித்தானது. 

சென்ற சனிக்கிழமை யாழ். சென்.ஜோன்ஸ் மைதானத்தில் சென்.ஜோன்ஸ் - யாழ். மத்திய கல்லூரி துடுப்பாட்ப் போட்டி நடைபெற்றது. 14வது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் ஆட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென். ஜோன்ஸ் அணி 7வது தடவையாக இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்த துடுப்பாட்டத்தில் தனது திறமையினை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் விளையாட்டு வீரர் யதுசன் ஆட்ட நாயகநாகத் தெரிவு செய்யப்பட்டார்.  ஆறாவது உலகக் கிண்ண 20 போட்டிகளின் சுப்பர் 10 ஆட்டத்தின்போது, இலங்கை மேற்கிந்திய அணிகள் மோதிக் கொண்டன. இதில் மேற்கிந்திய அணி மிகவும் அபாரமாக விளையாடி இலங்கை அணியைத் தோற்கடித்தது. மேற்கிந்திய அணியினருக்காக பிளச்சர் 84 ஓட்ங்களை எடுத்து ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தார். மும்பை வான்கடே விளையாட்டு திடலில் நடைபெற்ற இன்னுமெரு சுப்பர் 10 ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணியினர் ஆப்கானிஸ்தான் அணியினரை 39 ஓட்டங்களால் தோற்படித்திருந்தனர். இந்தப் போட்டியில் 64 ஓட்டங்களை எடுத்து, ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த வில்லியர்ஸ் தெரிவானார். 

1961 ஆம் ஆண்டு கியூபாவுடனான உறவைத் துண்டித்துக் கொண்ட அமெரிக்கா மீண்டும் உறவு கொண்டாட ஆரம்பித்துள்ளது. நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரிகைகளுக்காக சென்றிருந்த பராக் ஒபாமா மற்றும் ராவுல் கஸ்ரோ ஆகியோர் பகிரங்கமாக கைகுலுக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, சென்ற வாரம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கியூபா அதிபர் ராவுல் கஸ்ரோ பராக் ஒபாமாவை வரவேற்றார். அங்கு நடந்த பேஸ்போல் ஆட்டத்தில் இருவரும் கலந்து சிறப்பித்தனர். கியூபாவைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகள் பலர் ‘கியூபா’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சீருடையுடன் இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். 55 வருட காலமாக ரஸ்யாவுடன் நெருங்கிய உறவை வைத்திருந்த கியூபா இன்று அமெரிக்காவுடனான தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டது.

Nadeswara College -7
                                                நடேஸ்வராக் கல்லூரி

                                                     
                                                    CANADA UTHAYAN                                             கண்டதும்! கேட்டதும்!!

                                             நடேஸ்வராக் கல்லூரி – 7

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 26 வருடங்களாக அகப்பட்டிருந்த காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியைத் (ஜே 234 கிராமசேவகர் பிரிவு) திரும்பவும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் அழிக்க முடியாத செல்வம் இந்தக் கல்விச் செல்வம்தான். நடேஸ்வராக் கல்லூரி எனக்கு ஆரம்பக்கல்வியைத் தந்த கல்லூரி மட்டுமல்ல, எனது தந்தையாரும் அங்கே அதிபராகக் கடமையாற்றியவர் என்பதால் அவரைப் போன்றவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

கல்லூரியை விடுவிப்பதற்காக நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் மூலம் நாங்களும் பல வழிகளிலும் முயற்சி எடுத்திருந்தோம். எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும், கடிதங்களுக்கும் பலன் கிடைத்திருப்பது மட்டுமல்ல, அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. சுற்று மதில்கள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் எரிக்கப்பட்டு, அங்கே இருந்த முக்கியமான கட்டிடங்கள் தொலைந்து போயிப்பதாகக் கல்லூரி அதிபர் நேற்று அறிவித்திருந்தார். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்த எங்களுக்கு இது ஒன்றும் பெரிதல்ல, அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நாங்கள் நகரவேண்டும். தற்போதைய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெல்லிப்பழையில் உள்ள மாணவர்களுக்கு முக்கியமாகப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள தளபாடங்களையும் பழைய இடத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள ஒழுங்குகள் செய்கின்றோம். கல்விதான் எங்கள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிச்சயம் செய்யும் என்பதால் ஒன்றுபட்டு உழைப்போம்.


யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்த துடுப்பாட்டப் போட்டி சென்ற வாரம் ஆரம்பமாகி, யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. கிருபாகரன் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜ+னா ரணதுங்க இந்த விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


ரஸ்யாவைச் சேர்ந்த பிரபல ரென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா ஊக்க மருந்து பாவித்த குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் ரென்னிஸ் போட்டிகளில் பங்கு பற்றுவதில் இருந்து தடைசெய்யப்பட்டிருக்கின்றார். பெண்கள் ரென்னிஸ் ஆட்டத்தில் 2005 ஆம் ஆண்டு முதலிடத்தை வகித்த இவர் தற்போது 7வது இடத்தை வகிக்கின்றார். 28 வயதான இவர், 1994 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பிரஜையாக இருக்கின்றார்.


ஆறாவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிகெட் போட்டியின் சுப்பர்10 சுற்று சென்ற செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. முதற் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொண்டன. தெரிவான 10 அணிகளில் இலங்கை, மேற்கிந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதலவது குழுவிலும், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இரண்டாவது குழுவிலும் இடம் பெறுகின்றன.


‘ஹார்மெனி ஒவ் த சீஸ்’ என்ற பெயரைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய கப்பலான  உல்லாசப் பயணக் கப்பல் பிரான்சில் இருந்து சென்ற ஞாயிற்றுக் கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. 18 தளங்களில், 16 பயணிகளுக்கான தளங்களைக் கொண்ட இந்தக் கப்பல் 210 அடி உயரமுள்ளது. 1,187 அடி நீளமும் 216 அடி அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் 6000 பயணிகள் பயணிக்க முடியும். 227,000 தொன் நிறையைக் கொண்ட இந்தக் கப்பல் 1.1 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டது. றோயல் கரீபியன் இன்ரநாஷனல் நிறுவனத்திற்காக கட்டப்பட்ட இந்தக் கப்பல் 22 நொட்ஸ் வேகத்தில் செல்லக்கூடியது.


விஜே தொலைக்காட்சியினர் சுப்பர் சிங்கர் போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பரிதா, ஆனந் அரவிந்த், ராஜகணபதி, லட்சுமி, சியாட் ஆகிய ஐவரும் போட்டியாளராக இருக்கின்றார்கள். சில நடுவர்கள் பரிதாவை அளவிற்கு மீறிப் புகழ்ந்தாலும் ஆனந் அரவிந்த்திற்கு அதிக புள்ளிகள் போட்டு முன்னிலைப் படுத்துவதில் கவனமாக இருக்கின்றார்கள். சிலருக்கு மொழி உணர்வைவிட மத உணர்வுதான் அதிகம் என்பதால், நடக்கப் போகும் வாக்கெடுப்பிலும் அதைத்தான் காட்டுவார்கள். அதிக வாக்கு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பது இப்போதே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அடுத்த வாரம் முடிவு என்வென்று தெரிய வந்தாலும் இப்பொழுதே ஓரளவு முடிவை ஊகிக்க முடிகின்றது. அதிக கனடிய ரசிகர்களைச் சுப்பர் சிங்கரைப் பார்க்க வைத்தவர் என்ற பெருமை கனடியரான பாடகி செல்வி ஜெசிகா யூட்டுக்கே உரியது.


ஈழத்து எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான புண்யாமீன் அவர்கள் சென்ற வாரம் காலமாகி விட்டார். அண்மையில் புனித மக்காவிற்குச் சென்று திரும்பிய இவர் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் சென்ற 10 ஆம் திகதி உடதலவின்னையில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Mahajana - O.L
மகாஜனக்கல்லூரி விளையாட்டுப் போட்டி 

முடிவுகள் - யூன் 28 2016

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி முடிவுகள்.


1. 19 வயதுப் பிரிவு பெண்கள் உதைபந்தாட்ட அணி 1ம் இடம்.
2. 15 வயதுப் பிரிவு பெண்கள் சதுரங்க அணி 2ம் இடம்.
3. 17 வயதுப் பிரிவு பெண்கள் கரப்பந்தாட்ட அணி 2ம் இடம்.
4. 15 வயதுப் பிரிவு பெண்கள் கரப்பந்தாட்ட அணி 3ம் இடம்.
5. 19 வயதுப் பிரிவு ஆண்கள் கொக்கி அணி 3ம் இடம்.     Mahajana O/L


Sandilipay Hindu College

                                                           

                                                  Sandilipay Hindu College
Monday, March 21, 2016

Mahajana College - மகாஜனக்கல்லூரிமகாஜனக்கல்லூரி

வலிகாமம் கல்வி வலைய பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக்கல்லூரி பெண்கள் அணி சாம்பியனாகியது.
மகாஜனக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி போட்டியிட்டது. 3:0 என்ற கணக்கில் இறுதியில் மகாஜனக்கல்லூரி வெற்றி பெற்றது.


விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல, கல்வியிலும் மகாஜனாவின் முன்னேற்றத்தைக் கடந்தகால பரீட்சை முடிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. யுத்த சூழ்நிலையில் அங்குமிங்கும் இடம் பெயர்ந்து அவதிப்பட்ட மகாஜனா இன்று மீண்டும் எழுந்து நிற்கின்றது. இதற்கெல்லாம் காரணமான அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும்,பழைய மாணவர் சங்கங்களுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அமரர் ரி. பத்மநாதன் நினைவாக உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இருந்து சில காட்சிகள்.  பழைய நினைவுகளை மீட்கச் சில படங்கள். 


மனித நேயம் - Mankind


மனித நேயம் 


ன்று எல்லோராலும் பேசப்படுகின்ற மனித நேயம் என்ற சொல் எதைக் குறிக்கின்றது, அதை மனிதனிடம் இருந்து ஏன் எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள் என்பதைச் சற்று விரிவாக பார்ப்போம்.


‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் கூற்றே, மனிதநேயம் என்றால் என்ன என்பதை மிகவும்; தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு உயிரின் மீது வைக்கும் அன்பு, பாசம், பக்தி, கருணை, இரக்கம், நட்பு, காதல், நேயம், ஜீவகாருண்யம் என்றெல்லாம் இதை வகைப்படுத்த முடியும். மனிதன் மீது மட்டுமல்ல, மிருகம், பறவை, மரம் செடி கொடி என்று எதன் மீதாவது இளகிய மனம் கொண்டு அன்பு காட்டியிருந்தால், அதனுடைய நன்மைக்காக, அறிவுபூர்வமாகப் பகுத்தறிவுடன் நாம் ஏதாவது முயற்சிகளை மனதார மேற்கொண்டிருந்தால் அதை மனித நேயம் என்று குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை முன்னிறுத்தும் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர். மனித நேயத்தைச் செலுத்தும் தன்மையானது ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடலாம், மேலும் அவை காலத்தின் சூழ்நிலைக்கேற்பவும் மாறுபடக் கூடியன. ஒருவன் எதை நேயமாக கருதுகின்றானோ அது அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம். எனவே அன்புதான் மனிதநேயத்தின் முக்கிய அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இயலாமையால் வருந்தும் பிறரின் துன்பத்தைப் போக்குவதற்கு இரக்க சுபாவத்துடனும், இளகிய மனதுடனும், உறுதியான செயல்பாடுகளுடனும் ஒருவர் செயற்பட்டால் அதை மனிதநேயம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் இயற்கையிலேயே பிறரை நேசித்தல், பிறருக்காக வருத்தப்படுதல், பிறருடன் நல்லதைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற இன்றியமையாத உணர்வுகளையும், சிறந்த நற்பண்புகளையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். குறிப்பாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த இயற்கை உணர்வுகள் அவர்களிடம் இருப்பதை அவதானிக்க முடியும். ஆனால் சில பெறோரின் தவறான வழி நடத்தலால் சில பிள்ளைகள் இந்த நற்பண்புகளைக் காலப்போக்கில் இழந்து விடுகின்றார்கள். இதுவே மனிதநேயம் அற்ற ஒரு சூழ்நிலை இந்த உலகில் உருவாகக் காரணமாகிறது.


கோபம், வெறுப்பு, பழிவாங்கல், காழ்ப்புணர்வு, அலட்சியம் போன்ற உணர்வுகள் மனிதனிடம் குடிகொண்டால் அதுவே மனிதநேயத்தை முற்றாக அழித்து விடுகின்றது. தவறான வழிநடத்தலால் ஒரு சமுதாயம் அழிந்து போகக்கூடாது. ‘அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்’ என்று மனிதநேயமற்றவர்களை மக்கட்பண்பு இல்லாவர்கள் என்று வள்ளுவர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அந்த சமுதாயத்தில் உள்ள குழந்தைகளை நற்பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும். காழ்ப்புணர்வுகளைக் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது. நற்பண்புகளோடு குழந்தைகள் வளர்க்கப்பட்டால், நிச்சயமாக இனி வரும் காலத்தில் மனித நேயமிக்க புதிய சமுதாயத்தை அவர்களால் உருவாக்க முடியும்.

Sunday, March 20, 2016

Nadeswara College - நடேஸ்வராக் கல்லூரி

Nadeswara College back to College Road, Kankesanturai

நடேஸ்வராக் கல்லூரி 

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 26 வருடங்களாக அகப்பட்டிருந்த காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியைத் (ஜே 234 கிராமசேவகர் பிரிவு) திரும்பவும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் அழிக்க முடியாத செல்வம் இந்தக் கல்விச் செல்வம்தான். நடேஸ்வராக் கல்லூரி எனக்கு ஆரம்பக்கல்வியைத் தந்த கல்லூரி மட்டுமல்ல, எனது தந்தையாரும் அங்கே அதிபராகக் கடமையாற்றியவர் என்பதால் அவரைப் போன்றவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 


நடேஸ்வராக் கல்லூரி மண்டபம்

கல்லூரியை விடுவிப்பதற்காக நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் மூலம் நாங்களும் பல வழிகளிலும் முயற்சி எடுத்திருந்தோம். எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும், கடிதங்களுக்கும் பலன் கிடைத்திருப்பது மட்டுமல்ல, அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. காங்கேசந்துறை கலங்கரைவிளக்கம்.

சுற்று மதில்கள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் எரிக்கப்பட்டு, அங்கே இருந்த முக்கியமான கட்டிடங்கள் தொலைந்து போயிப்பதாகக் கல்லூரி அதிபர் நேற்று அறிவித்திருந்தார். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்த எங்களுக்கு இது ஒன்றும் பெரிதல்ல, அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நாங்கள் நகரவேண்டும். தற்போதைய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெல்லிப்பழையில் உள்ள மாணவர்களுக்கு முக்கியமாகப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள தளபாடங்களையும் பழைய இடத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். 


நீராவியில் இயங்கும் கரிக்கோச்சி

அதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள ஒழுங்குகள் செய்கின்றோம். கல்விதான் எங்கள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிச்சயம் செய்யும் என்பதால் ஒன்றுபட்டு உழைப்போம். 


தொடர் வண்டிகள் ஓடாத காலத்தில் ரயில் பெட்டியில் உணவு விடுதி.


காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை இன்னும் இயங்காமலே இருக்கின்றது.
கீரிமலை, நகுலேஸ்வரத்தில் உள்ள நன்னீர் தீர்த்தம்.


காங்கேசந்துறை பழைய துறைமுகம்மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.


காங்கேசந்துறை கூத்தியவத்தைப் பிள்ளையார் கோயில்.
கூத்தியவத்தை வயல் வரம்பில் நடந்து, மழைகாலத்தில் வெள்ளம் அலம்பி, மாட்டுவண்டில் சவாரி பார்த்த நாட்கள் எல்லாம் யுத்தம் என்ற அரக்கனிடம் பறிபோனதே!

Wednesday, March 16, 2016

2013 TX 68 - Kuru's Page - 6


கண்டதும்! கேட்டதும்!!
குரு அரவிந்தன்
‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’
எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
..........................................................................................................................

கண்ணாமூச்சி விளையாடும் விண்கல் - 6

சென்றவாரம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவோடு கவிநாயகர் வி. கந்தவனம் போன்ற சில தமிழ் அறிஞர்களினால் திருக்குறள் விழா ரொறன்ரோ நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல அறிஞர்கள் இந்த திருக்குறள் விழாவில் உரையாற்றினார்கள். தமிழைத், தமிழர்களை உலகறியச் செய்த நூல்களில் திருக்குறள் முதன்மையானது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்ட, நூலான திருக்குறள் இதுவரை சுமார் 80 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. எல்லாமாக 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்களைக் கொண்ட திருக்குறளில் மொத்தம் 12000 சொற்கள் அடங்கி இருக்கின்றன. நாங்கள் கல்வி கற்ற காலத்தில் அறம், பொருள் ஆகிய இரண்டு அதிகாரங்களை மட்டுமே பாடசாலைகளில் சொல்லித் தந்தார்கள். மூன்றாவது அதிகாரமான ‘இன்பம்’ என்ற அதிகாரம் எங்களுக்குத் தவிர்க்கப்பட்டிருந்தது. பெரியவர்களானதும் அதில் என்ன இருக்கிறது என்று நாங்களாகவே தேடிப்படிக்க வேண்டி வந்தது. சூழ்நிலை மாறியதால் புலம் பெயர்ந்த மண்ணில் உள்ள மாணவர்களுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விடையமாகவே இருக்கின்றது. இணையத் தளங்கள் மூலம் நிறையவே பார்க்கக்கூடிய சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது. இதைவிட பாலியல் கல்வியும் இங்குள்ள மாணவர்களுக்கு அறிமுகமாகி இருக்கின்றது. எனவே புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் இந்த அதிகாரத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ரொறன்ரோவில் நடந்த இந்த திருவள்ளுவர் விழாவிற்கு வந்திருந்தவர்களின் தொகை மிகக் குறைவாகவே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இப்படியான இலக்கிய விழாக்களை அடுத்த தலைமுறை ஏன் தவிர்க்கிறார்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்று. அவர்களுக்கு ஏற்றமாதிரி நிகழ்ச்சிகள் அமையாததும் ஒரு காரணம். இங்கே நடக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிலர் அடுத்த தலைமுறையினரையும் சேர்த்து தடம்மாறி எங்கோ அழைத்துச் செல்வது போலத் தெரிகின்றது.


விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இறுதிச் சுற்றுக்காக ஐவரைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சியில் நடுவர்களால் ஏற்கனவே பரிதா, ராஜகணபதி, சியாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வைல்ட்காட் போட்டி மூலம் ஒன்பது பேர் போட்டி போட்டு அதில் ஆறு பேர் போட்டிக்குத் தகுதியாகி இருந்தனர். இவர்களில் வாக்கெடுப்பின் மூலம் ஆனந் அரவிந் மட்டுமே தெரிவாகி இருந்தார். மிகுதியான ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்கு இந்த வாரம் போட்டி நடைபெற்றது. அதில் இறுதியாகப் பிரியாவும் லட்சுமியும் போட்டி போட்டதில் லட்சுமி தெரிவாகி இருந்தார். கொஞ்சம் மிருகம், கொஞ்சம் கடவுள், சந்திரலேகா என்ற பாடலைப் பாடிய லட்சுமி, பாடகி பிரியங்கா பாடுவது போலவே சிரித்த, மலர்ந்த முகத்தோடு பாடினார். இறுதிச் சுற்றுக்காக இப்போது பரிதா, ராஜகணபதி, சியாட், ஆனந் அரவிந்த், லட்சுமி ஆகிய ஐவரும் தெரிவாகி இருக்கிறார்கள். திறமையின் அடிப்படையில் இவர்களில் ஒருவர் சுப்பர் சிங்கராகத் தெரிவாக இருக்கின்றார். ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகள் என்ன என்பதை நிருஜனாவது புரிந்து கொண்டிருந்தால், திறமை இருக்கிறதோ இல்லையோ, வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகி இந்த ஐவரில் ஒருவராக இருந்திருப்பார் என்று உணர்வாளர் ஒருவர் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தவறிவிட்டார்’ என்பதையும் சொல்லிக் காட்டினார். பல வருடங்களைக் கடந்து காலம் சென்றாலும் நீறு பூத்த நெருப்பாய் தமிழ் மக்களின் உணர்வுகள் அழியாமலே இருக்கின்றன என்பதையே இது காட்டி நிற்கின்றது.


சுமார் 100 அடி அகலம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக சென்றவாரம் வந்த செய்திகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. என்ன நடக்குமோ என்ற பயத்தோடு மக்கள் இருந்தாலும், எதிர் பார்த்ததைவிடக் குறைந்த தூரத்தில், எதிர்பார்த்த நேரத்தைவிட முன்பாகவே இந்த விண்கல் சென்ற திங்கட்கிழமை காலை பூமியைக் கடந்து சென்று விட்டது. இப்படி ஒரு பாரிய விண்கல் பூமியைக் கடந்து சென்றதுகூடப் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் விண்வெளிக் கற்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2013 ரிஎக்ஸ் 68 என்ற பெயரை இந்த விண் கல்லுக்குச் சூட்டியிருக்கின்றது. அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த விண்கல் அடையாளம் காணப்பட்டது. மூன்று மில்லியன் மைல்களுக்கு அப்பால் இந்த விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்த்தாலும் அதைவிடக் குறைவாக 2.5 மில்லியன் மைல்கள் தூரத்தில்தான் கடந்திருக்கின்றது. 34, 279 மைல் வேகத்தில் இந்த விண்கல் பூமியைக் கடந்து சென்றது மட்டுமல்ல, மறுமுறை பூமியைக் கடக்கும் போது சிலசமயம் இன்னும் அருகே வருவதற்குச் சந்தர்ப்பமும் உண்டு. 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஸ்யாவின் வான்வெளிக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்திய  விண்கல்லை விட இது இரண்டு மடங்கு பெரியதாகும். கண்ணாமூச்சி விளையாடும் இது போன்ற கற்கள் புவியீர்ப்புக்குள் அகப்பட்டால் புவியின் கதி என்னவாகும்?


செங்கையாழியான் - Kuru's Page - 5

கண்டதும்! கேட்டதும்!!
குரு அரவிந்தன்
‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’
எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
----------------------------------------------------------------------------------------------------------

கண்ணீர் அஞ்சலி - 5

எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்களும் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்திற்குச் சென்றபோது, அங்கு அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன். இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்பட்டபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் இனிய நண்பர் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன்  நடித்திருந்தார். இச்சந்தர்ப்பத்தில் செங்கையாழியானின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

மகளிர் தினத்தை ஒருபக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், சென்ற வருடம் இலங்கையில் இடம் பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் போது 1854 துஷ்பிரயோக முறைப்பாடுகள் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. இதில் சுமார் 1500 சம்பவங்கள் பதினாறு வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு எதிரானதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தில் சராசரி இரண்டு அல்லது மூன்று வன்முறைகளாவது தினமும் நடப்பதாகப் பதிவுகள் கூறகின்றன. யுத்தம் காரணமாக சுமார் 40,000 பெண்கள் வரை குடும்பத் தலைவரை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. இவர்களுக்கான உதவிகள் ஒருபக்கம் நடந்தாலும், பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான உதவிகள் போதாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிப் பத்திரிகையில் புகைப்படங்களைப் போட்டால் மட்டும் போதாது, இத்தகைய வன்முறைகளை எங்கு நடந்தாலும் கண்டிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்பதே சிறந்தது.


88 வது ஆஸ்கார் விருது விழா சென்ற ஞாயிற்க் கிழமை 28-02-2016 நடைபெற்றது. மாட்மாக்ஸ் (ஆயன ஆயஒ குரசல சுழயன) என்ற படம் ஆறு விருதுகளைத் தட்டிக் கொண்டது. சிறந்த நடிகராக றிவெனன்ற் படத்தில் நடித்த லியோனார்டோ டி கப்றியோவும், சிறந்த நடிகையாக றூம் படத்தில் நடித்த பெரி லாஸனும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். சிறந்த படமாக ஸ்பொட்லைட் (ளுpழவடiபாவ) தெரிவு செய்யப்பட்டது. சிறந்த துணை நடிகராக மார்க் ரைலோன்ஸ், சிறந்த துணை நடிகையாக அலிஸியா விக்காண்டர், சிறந்த இசைஅமைப்பாளராக என்னியோ மோரிகோணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். சிறந்த ஆவணக் குறும்படமாக ஏ கேர்ள் இன்த றிவர் தெரிவு செய்யப்பட்டது.  இந்திய சினிமா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு தனது ஆடை அலங்காரத்தால்  எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். காரணம் அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 80 இலட்சம் என்று தெரிகின்றது. தொகுப்பாளராக நகைச்சுவை நடிகர் கிறிஸ் ஹாரிஸ் பணியாற்றினார். கறுப்பின நடிகர்கள் இந்த விழாவில் ஒதுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், வில் ஸ்மித் போன்ற பிரபல நடிகர்கள் இந்த ஆஸ்கார் விருது விழாவைப் புறக்கணித்திருந்தனர். (புகைப்படம் நன்றி : ABC)


சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் தெரிவு இவ்வாரம் நடைபெறுகின்றது. ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மூவரைத் தவிர ஒன்பது பேர் போட்டி போடுகின்றார்கள். சென்ற வாரம் இவர்கள் எல்லோரும் தங்கள் திறமையைக் காட்டியிருந்தார்கள். வாக்கு வங்கியை நிரப்ப வேண்டும் என்றால் ஒரு உண்மையை இவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஈழத்தமிழரின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் அவர்களின் கடந்தகால சோகங்களைப் பாடல் மூலம் கொண்டு வந்து நினைவூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்; இருப்பதால், அதை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்போம் என்று பலர் குறிப்பிட்டது எனது நினைவில் நிற்கின்றது. புத்திமான் பலவான்.

சென்ற செவ்வாய்க்கிழமை மார்ச் 2 ஆம் திகதி 2016 நாசாவின் ஸ்கொட் ஹெலி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பினார். அமெரிக்கரான இவர் வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தில் தொடர்ச்சியாகத் 340 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார். தலைமன்னார் பகுதியில் சர்ச்சைக்குரிய இராமர் அணை பத்தடி தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதை வானத்தில் இருந்து படம் எடுத்துக் காட்டியது இவர்தான்!

Rubies - Ballet


Rubies:

National Ballet of Canada.

Rubies is the centerpiece in Ceorge Balanchine's master work. Blatant athleticism and classical positions turned inside out are the counterpoints of the Ballet.


Ballet- The Four Temperaments - Rubies - Cacti

This was an amazing performance. Great job to the dancers in Cacti, 
Rubies and the Four Temperaments.  
We Canadian Tamils are proud supporters of the Canadian artists 
who create our collective image.


The National BALLET of Canada.:

The National BALLET of Canada is privileged to have it's own full
Orchestra with over 60 members.  The National ballet of Canada is
regarded as the premier classical ballet company in Canada.
The National Ballet School was founded in 1959 by Celia Franc

The Four Temperaments:

Set to a rich and evocative score by Paul Hindemith.
The Four Temperaments is a variations based on the ancient concept of the four humours - melancholic. The Four Temperaments challenged all the senses in a new venue of jarring inventiveness.
The Four Temperaments

Rubies:

Rubies is the centerpiece in Ceorge Balanchine's master work. Blatant athleticism and classical positions turned inside out are the counterpoints of the Ballet.

Rubies & Cacti

Cacti:

Cacti, the first co- production between The National Ballet of Canada. Boston Ballet and Atlanta Ballet, is a witty, tongue - in - check, thought provoking work by Swedish choreographer Alexander Ekman that satirizes modern dance and the critical response.