Sunday, March 20, 2016

Nadeswara College - நடேஸ்வராக் கல்லூரி

Nadeswara College back to College Road, Kankesanturai





நடேஸ்வராக் கல்லூரி 

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 26 வருடங்களாக அகப்பட்டிருந்த காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியைத் (ஜே 234 கிராமசேவகர் பிரிவு) திரும்பவும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் அழிக்க முடியாத செல்வம் இந்தக் கல்விச் செல்வம்தான். நடேஸ்வராக் கல்லூரி எனக்கு ஆரம்பக்கல்வியைத் தந்த கல்லூரி மட்டுமல்ல, எனது தந்தையாரும் அங்கே அதிபராகக் கடமையாற்றியவர் என்பதால் அவரைப் போன்றவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. 


நடேஸ்வராக் கல்லூரி மண்டபம்

கல்லூரியை விடுவிப்பதற்காக நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் மூலம் நாங்களும் பல வழிகளிலும் முயற்சி எடுத்திருந்தோம். எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும், கடிதங்களுக்கும் பலன் கிடைத்திருப்பது மட்டுமல்ல, அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. 



காங்கேசந்துறை கலங்கரைவிளக்கம்.

சுற்று மதில்கள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் எரிக்கப்பட்டு, அங்கே இருந்த முக்கியமான கட்டிடங்கள் தொலைந்து போயிப்பதாகக் கல்லூரி அதிபர் நேற்று அறிவித்திருந்தார். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்த எங்களுக்கு இது ஒன்றும் பெரிதல்ல, அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நாங்கள் நகரவேண்டும். தற்போதைய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெல்லிப்பழையில் உள்ள மாணவர்களுக்கு முக்கியமாகப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள தளபாடங்களையும் பழைய இடத்திற்குக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். 


நீராவியில் இயங்கும் கரிக்கோச்சி

அதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள ஒழுங்குகள் செய்கின்றோம். கல்விதான் எங்கள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிச்சயம் செய்யும் என்பதால் ஒன்றுபட்டு உழைப்போம். 


தொடர் வண்டிகள் ஓடாத காலத்தில் ரயில் பெட்டியில் உணவு விடுதி.


காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை இன்னும் இயங்காமலே இருக்கின்றது.




கீரிமலை, நகுலேஸ்வரத்தில் உள்ள நன்னீர் தீர்த்தம்.


காங்கேசந்துறை பழைய துறைமுகம்



மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.


காங்கேசந்துறை கூத்தியவத்தைப் பிள்ளையார் கோயில்.
கூத்தியவத்தை வயல் வரம்பில் நடந்து, மழைகாலத்தில் வெள்ளம் அலம்பி, மாட்டுவண்டில் சவாரி பார்த்த நாட்கள் எல்லாம் யுத்தம் என்ற அரக்கனிடம் பறிபோனதே!









No comments:

Post a Comment