Friday, May 13, 2016

Dr.Neelamalar.Maraimalai - An Endless Refuge

                                                    An Endless Refuge

                         Workshop at Toronto By Canadian Tamil Writers Association

                Neela Senthil teaches media sciences at Anna University, Chennai.
                An Endless Refuge is her first published work of fiction.
This fiction was released at the World Book Fair 2016 at New Delhi ih the first week of January.




கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் நடந்த விழாவிற்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் அறிமுக உரையில் இருந்து சில வரிகள்.:



Mrs s. Mukunthan- Writer Kuru Aravinthan - Dr. Neelamalar Maralmalai

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல எழுத்தாளர்களை பலதடவை கௌரவித்திருக்கின்றது. அந்த வகையில் கலாநிதி நீலமலர் அவர்களையும் கௌரவிக்கும் பாக்கியம் இன்று எழுத்தாளர் இணையத்திற்குக் கிடைத்திருக்கின்றது. கலாநிதி நீலமலர் அவர்களின் இலக்கியக் கருத்துரையைச் செவிமடுக்க வந்திருக்கும் உங்களுக்கு வணக்கம்கூறி, அவரைப்பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.


Kuru Aravinthan - Dr. Neelamalar  (Neela Senthil)

கலாநிதி நீலமலர் அவர்களின் தாத்தாதான் தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். தமிழ் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்படாலும் மனம் தளராது தாய் மொழிக்காகப் போராடியவர்.

Writer Kuru Aravinthan and Dr. Neelamalar Maraimalai 

அவர் தனது மகனுக்கும் மறைமலை அடிகளாரின் பெயரையே சூடியிருந்தார். கலாநிதி நீலமலர் அவர்களின தந்தையான மறைமலை இலக்குவனார் ‘பிரசிடென்ஸி கொலீச்சில்’ தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உரையைப் பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக உலகத்தாய் மொழி நாளன்று சண் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையைக் கேட்க முடிந்தது. நீலமலரின் தாயாரும் ஒரு பேராசிரியர்.

Canadian Tamil Writers with Dr.Neelamalar Maraimalai
திருமதி நீலமலர் செந்தில்குமார் அவர்கள் எதிராஜ் கல்லூரியில் கல்வி கற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் தொடக்கத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.









No comments:

Post a Comment