Wednesday, May 4, 2016

Sandilipay United Society - Canada.

SANDILIPAY UNITED SOCIETY

 Annual Dinner and Cultural Show - 2016

In Canada we live in diverse communities. We must respect one another, accept those around us.

Understand our differences and embrace our heritage.

சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின்













தமிழ் கலாச்சார விழா - 2016


(மணிமாலா)




சென்ற சனிக்கிழமை சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலாச்சார ஒன்றுகூடலும், இராப்போசன விருந்தும், கனடா, ஸ்காபரோவில் உள்ள ஈஸ்ட்ரவுண் மண்டபத்தில் இடம் பெற்றது. சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது ரொறன்ரோவில் வசிப்பவருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும், திருமதி மாலினி அரவிந்தன் அவர்களும் இந்த விழாவில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத் தலைவர் அமிர்தராஜன் தேவதாசன் திருமதி தேவதாசன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து கனடிய தேசிய கீதமும், தமிழ் வாழ்த்து பாடலும் ஷிரியா ஈசானந்தாவால் இசைக்கப்பட்டன. அடுத்து திருமதி பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரையும் அதைத் தொடர்ந்து பிறிதம் சுரேசனின் வீணை இசையும் இடம் பெற்றன. ரம்யா கணேசனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சிமிதா ராம்தாஸின் ஹ{லாகூப் நடனமும் இடம் பெற்றது. அடுத்து செல்வி தேவிகா ஞானேஸ்வரன், ஷிரியா ஈசானந்தா ஆகியோரின் பாடல்கள் இடம் பெற்றன.




அபிரா ஆதித்தன், சயிரா ஆதித்தன் சகோதரிகளின் நடனம் அடுத்து நடைபெற்றது. செல்வன் சுமன் டெனிஸ் விஜயநாயகம் தனது ஈழத்துப் பயணத்தின் போது சண்டிலிப்பாயில் தான் பார்த்து அனுபவித்த சில இடங்களைக் காட்சிப் படுத்திக் காட்டினார். பல வருடங்களின் பின் சொந்த மண்ணை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் திரையில் பார்த்துத் தங்கள் குறையைத் தீர்த்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடன ஆசிரியை தேவகி  பாரதியின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. ஆஷா ஜெயானந்தன், பைரவி ஞானமனோகரன், ஜோர்ஸி ரவிச்சந்திரன், ஜெனிஷா கமலநாதன், பரனிகா பாலச்சந்திரன், ரமணா ராஜசேகரம், தாரணி சாந்தபவான், உஷா சிவபாலன், வைஷ்ணவி ஞானமனோகரன் ஆகியோர் பங்கு பற்றிய நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி வரகுணன் மகாதேவன் அவர்களின் பாடலுடன் கூடிய வாழ்த்து நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது. அதன்பின் சினிமா பாடலுக்கான நடனத்தை கிருத்திக்கா சிவகுமார், துர்க்கா சிவகுமார் சகோதரிகள் வழங்கினர்.




அதைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத் தலைவர் அமிர்தராஜன் தேவதாசன் அவர்களின் உரை இடம் பெற்றது. சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம் கனடாவிலும், சண்டிலிப்பாயிலும் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட்டு, மானிப்பாய் வைத்தியசாலைக்கு மன்ற அங்கத்தவர்களின் உதவியோடு வாங்கிக் கொடுத்த வைத்திய உபகரணங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.




அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம் மானிப்பாய் வைத்திய சாலைக்குச் செய்த நற்பணியைப் பாராட்டித் தானும் அந்த வைத்திய சாலையில்தான் பிறந்ததாகவும், இப்படியான கலாச்சார ஒன்று கூடல்கள் மூலம் ஒற்றுமையாகச் செயலாற்றி உதவிகளைச் செய்ய முடியம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் தமிழ் மொழியின் தேவை பற்றியும், எமது பிள்ளைகள் தமிழ் கற்கப் பெற்றோர்கள் ஊக்கம் தரவேண்டும் என்பதையும், மொழி அழிந்தால் இந்த மண்ணில் தமிழ் இனம் அழிந்து விடும் என்பதையும் பெற்றோருக்கு நினைவூட்டினார்.



அடுத்து கணபதி ரவீந்திரனின் நகைச்சுவை நடிப்பு இடம் பெற்றபோது பலரும் அதை ரசித்துச் சிரித்துக் கரவொலி எழுப்பினார்கள். கிழமை நாட்களில் வேலைப் பளுவில் மூழ்கிப் போனவர்களுக்கு, இப்படியான ஒன்றுகூடலின்போது மகிழ்ச்சியாக சிறிது நேரத்தைச் செலவிடுவது மனதுக்கு ஆறுதலாக இருப்பதுண்டு. அடுத்து மன்றத்தின் செயலாளர் சிவானந்தன் விஜயானந்தனால் நன்றி உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து திரை இசைப்பாடலுடன் இரவு விருந்துபசாரம் நடைபெற்று, விழா இனிதே நிறைவு பெற்றது.













No comments:

Post a Comment