Friday, July 22, 2016

VISION-20 கண்டதும் கேட்டதும்

                                                        


                                                         VISION-20

                                               கண்டதும் கேட்டதும்
                                               
                                                  by: Kuru Aravinthan
                             
                           Ishwaria Chandru is a Toronto-based young artist who performs dance, vocal, and violin. She was the first gold medal winner for a Carnatic music competition.She did her Arangetram under the guidance of her mother, Guru Nirainjana Chandru in 2011.In her Arangetram, She was the first person in Canada to perform a Bharathanatya dance piece and with singing at the same time.


Courtesy: Canada Uthayan 22-07-2016Wednesday, July 13, 2016

Tamilinni Vellum - தமிழ் இனி வெல்லும்

            கனடாவில் தமிழ் இனி வெல்லும் Kuru Aravinthan- Rajee(TET) -Dr.Senthilmohanபுலம் பெயர்ந்த மண்ணான கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற தெலை நோக்கோடு ரிஈரி (TET) தொலைக்காட்சியின் ‘தமிழ் இனி வெல்லும்’ - தொடர் -2 இன் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் 2016 ஆம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , TET தொலைக்காட்சியின் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அமரர் வை. சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக, கனேடிய சிறார்களிடையே தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்குடன் , ஆநனஉநவெசந ஊழnநெஉவ  நிறுவனர் வைத்திய கலாநிதி செந்தில் மோகன் அவர்களின் ஆதரவுடன்  திருமதி ராஜி அரசரட்ணம் அவர்கள் இந்தத் தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.


Vasuki - Kuru - Vaneeகீழ்ப்பிரிவுப் போட்டியின் போது, முதலிடத்தை ஜஸ்மிதா சிவரூபன் , இரண்டாமிடத்தை அபிவர்ஷி பாலசுப்ரமணியம் , மூன்றாம் இடத்தை துவாரகா ஜீவனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேல் பிரிவுப் போட்டியில் முதலிடத்தை குபேரகா குமரேஸ்வரன், இரண்டாமிடத்தை ஆரணி சுகந்தன் , மூன்றாம் இடத்தை அகிலவன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன . நடிப்புடன் கூடிய இந்தப் போட்டி நிகழ்வில் மாணவர்களை விட அதிகமான மாணவிகளே கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது. இப்போட்டி நிகழ்வின்போது பிரதம நடுவராக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கடமையாற்றினார். ஏனைய நடுவர்களாக வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
தமிழினி வெல்லும் தொடரை தயாரிப்பதில் அரும்பணியாற்றிய வுநவு தொலைக்காட்சியின் இயக்குநர் ராஜி அரசரட்ணத்தையும், நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி செந்தில் மோகன் குடும்பத்தினர், நடுவர்களாக பங்குபற்றிய எழுத்தாளர் குரு அரவிந்தன், வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் இப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக இந்தப் போட்டி நிகழ்வை நடத்தி அதிக மாணவர்களை உள்வாங்கிப் பங்குபற்ற வைக்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். புலம் பெயர்ந்த இந்தக் கனடிய மண்ணில் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் நிலைத்து நிற்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்திருந்தனர். 
Canada OSA- Nadeswara College

சென்ற யூலை மாதம் 10 ஆம் திகதி நடேஸ்வராக் கல்லூரியின் ஒன்று கூடல் நிகழ்வு ஸ்காபரோ தொம்ஸன் பூங்காவில் இடம் பெற்றது.
காங்கேசந்துறை  நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நடேஸ்வராக் கலலூரி மீண்டும் காங்கேசந்துறையில் பழைய இடத்திலேயே இயங்கத் தொடங்கியிருப்பதைப் பலரும் பாராட்டினார்கள்.
சிறியோர் பெரியோர் களுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.பழைய மாணவர் சங்கக் காப்பாளர்களான பி. விக்னேஸ்வரன், எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
Monday, July 11, 2016

Mahajana-Anitha Jeganathan

                           ANITHA JEGANATHAN


தெல்லிப்பளை மகாஜனா கல்லுாரி மாணவி செல்வி.அனித்தா தேசிய விளையாட்டு விழாவில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கொழும்பில் (9-07-2016)  நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.30 மீட்டரைப் பாய்ந்து பதக்கத்தை வென்றுள்ளார். கனடா பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக எனது இனிய வாழ்த்துக்கள்.