Thursday, November 10, 2016

America-Vision- 36 - Donald TrumpKuru Aravinthan

America
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சென்ற வாரம் சூடுபிடித்த போது யார் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. தாய் மண்ணில் இருக்கும்போது ஈழத்தமிழர்களில் அனேகமானவர்கள் எப்படி இலங்கை அரசியலைவிட இந்திய அரசியலில் அக்கறை காட்டினார்களோ அதே போன்ற நிலைமை கனடாவிலும் உருவாகியிருந்ததைச் சென்ற வாரம் அவதானிக்க முடிந்தது. சிக்காகோவில் நாங்கள் நின்ற போது பலர் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்த போதே ஒரளவு அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தேர்தலில் டொனால்ட் றம்ப் அவர்கள் போட்டியிடுவதால் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாக நாங்கள் பயணித்த படகின் படகோட்டியும் உறுதி செயதிருந்தார். ஊபர் வண்டிகளில் பல இடங்களுக்குப் பயணித்த போதும் வண்டி ஓட்டிகள் உள்ளுரில் றம்ப்பிற்கு ஆதரவு கூடியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். மக்கள் தீர்ப்பா அல்லது கணணியின் தீர்ப்பா மகேசன் தீர்ப்பு என்பது தெரியவில்லை. அமெரிக்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி இருப்பதாகத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்பதால் முடிவுகளை அமைதியான முறையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மக்களிடம் இருக்கின்றது.

Trump Tower - Chicago


அயல் நாடான அமெரிக்காவின் எல்லையைக் கடந்து செல்வதற்கு இதுவரை கனடியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அந்த நிலை இன்னும் தொடரும் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் பற்றி நீங்களும் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. 1946 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் திகதி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில்தான் இவர் பிறந்தார். 70 வயதுடைய வர்த்தகரான இவர் குடியரசுக்கட்சியில் போட்டி போட்டு வெற்றி பெற்றுத் தற்போது அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி ஆகியிருக்கின்றார். இவரது தந்தை வழியினர் ஜேர்மனியையும்இதாய் வழியினர் ஸ்கொட்லாந்தையும் சேர்ந்தவர்கள். 1999 ஆம் ஆண்டு இவரது தந்தை இறந்தபோது அவரது சொத்து 250 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

டொனால்ட் றம்பின் மனைவியின் பெயர் மிலானியா. 2005 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே இவானா என்ற பெண்ணை 1977 இல் திருமணம் செய்த இவர் 1991 இல் மணமுறிவை ஏற்படுத்திக் கொண்டார். மீண்டும் 1993 ஆம் ஆண்டு மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்து 1999 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். முதல் மனைவியான இவானாவிற்கு டொனாலட் யூனியர்இஎறிக் என்று இரண்டு ஆண் பிள்ளைகளும்இஇவேகா என்ற ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இரண்டாவது மனைவியான மரியாவிற்கு ரிபானி என்ற 23 வயதுப் பெண் இருக்கின்றார். அமெரிக்காவின் முதற்பெண்மணியான மிலானியாவிற்கு பரொன் (Barron) என்ற பத்து வயது ஆண் பிள்ளை ஒருவர் இருக்கின்றார்.

தனது தந்தையான டொனால்ட் றம்ப் அவர்களின் வெற்றி உரையின் போது அந்த உரையைக் கேட்பதற்காக அதிகாலை 3 மணிவரை அரைகுறைத் தூக்கத்தோடு மேடையில் அவருக்கு அருகே பரொன் நின்றதாக ருவிட்டர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பொதுவாக அரசியலில் அடுத்த தலைமுறை வழித்தோன்றல்கள் பலர் பிற்காலத்தில் தலைமைத்துவம் ஏற்று நடந்ததற்குச் சரித்திரமே சான்று பகிர்கின்றது. நியூயோர்க் நண்பர்களைத் துறந்து வெள்ளை மாளிகைக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை சிறுவனுக்கு இருந்திருக்கலாம்.

றம்ப் அவர்கள் ஜனாதிபதியாக வந்தால் எங்களுக்கு அவருடன் நின்று புகைப்படம் எடுக்கச் சந்தர்ப்பமே கிடைக்காதுஇஆனால் றம்ப் டவருக்கு முன்னால் நின்று எடுத்த செல்பியை முகநூலில் போடலாமல்லவா? என்று எங்களுடன் சிக்காகோ ஆற்றில் படகில் பயணித்த சில இளம் பெண்கள் செல்பி எடுக்கும் போதுஇகுறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. எங்களுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததால்இஎதற்கும் கைவசம் இருக்கட்டுமே என்று நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்கள் தங்கள் முகநூலில் அந்தப் படங்களைப் போட்டார்களோ தெரியவில்லை.

இந்தத் தேர்தல் முடிவுகள் பலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம்.
சென்ற 9 ஆம் திகதி புதன்கிழமைநியூயோர்க்சான்பிரான்ஸிஸ்கோ சிக்காகோ போன்ற பெரிய நகரங்களில் ஜனாதிபதி றம்ப் அவர்களுக்கு எதிப்புத் தெரிவித்து ஊர்வலம் ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதுவரை பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக சொத்துள்ளஇஅதாவது 4 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக இவர் தற்போது இருக்கின்றார். அது மட்டுமல்லஇஉலகிலே அதி நவீன அணு ஆயுதங்களைக் கொண்டதும்இஅதிக நவீன படைகளுக்குச் சொந்தமான நாட்டினது ஜனாதிபதியாகவும் இவர் இப்போது கடமை ஏற்றிருக்கின்றார். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment