Sunday, December 31, 2017

Story Books - Kuru Aravinthan

Happy New Year - 2018


                               Happy New Year - 2018
                               புதுவருட வாழ்த்துக்கள்


                                அன்புடன்
                            குரு அரவிந்தன்

Monday, December 18, 2017

Peel 150 - Ontario-150


                                                   Regional Diversity Round-table
                                                           Canada- 150 Years
Sunday, November 26, 2017

Thinakural-Award-2017
எழுத்தாளர் குரு அரவிந்தனுக்குக் கனடாவில் கிடைத்த விருதைப் பற்றிய செய்தியை இலங்கையில் இருந்து வெளிவரும் தினக்குரல் ஞாயிறு இதழ் வெளியிட்டுப் பாராட்டி  கௌரவித்திருந்தது.

ஒன்ராரியோ மாகாண ஆளுனர் கௌரவ எலிசபெத் டவுன்ஸ்வெல் அவர்கள் (Honorable Elizabeth Dowdeswell, Lieutenant Governor of Ontario) ஆரம்ப உரையை நிகழ்த்தி விருது வழங்கும் விழாவை தொடக்கி வைத்தார்.

இவ்வருடத்திற்கான இலக்கிய, சமூக தன்னார்வத் தொண்டருக்கான விருது - 2017 எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 25 வருடகால இலக்கிய சேவைக்காகவும், பல்வேறு சமூகம் சார்ந்த மன்றங்களில் தன்னார்வத் தொண்டராகச் சேவையாற்றுவதற்காகவும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களைச் செந்தாமரை ஆசிரியர் ராஜி அரசரட்ணம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார். ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரும், சர்வதேசப் புகழ்பெற்ற ஒருவருமான குரு அரவிந்தன் அவர்களை, அவரது திறமைகளைப் பாராட்டியே தான் அவரைப் பரிந்துரைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Sunday, November 19, 2017

National Ethnic Press Awards - 2017 To Kuru Aravinthan

National Ethnic Press Awards- 2017 to Kuru Aravinthan


                                            Kuru Aravinthan - Writer
On November 17th the National Ethnic Press and Media Council of Canada hosted its annual awards show at Toronto City Hall celebrating various individuals and ethnic media outlets for their contributions in 2017.The show was opened by the Honorable Elizabeth Dowdeswell, Lieutenant Governor of Ontario for presentation of the Awards. 
Writer Mr. Kuru Aravinthan was given an award in the Individuals category for his services rendered to local cultural communities. Specifically, for his volunteer work over the past 25 years with the Tamil Writers Association, Ontario Tamil Teachers Association, and the Screen of Peel Community Association. He is recognized for all his distinguished achievements to literary world and his volunteer engagement in order to serve the new comers settle in Canada. We congratulate Kuru Aravinthan on this tremendous recognition and all his contributions to the Tamil community. Category Individuals:

For services rendered to cultural communities of Canada

Mr. Kuru Aravinthan                     Sri Lankan -Writer

Mr. Arsalan Baraheni                       Persian - Filmmaker
Mr. Saeed Hariri                               Iranian - Journalist
Mr. Michael Homsi                           Syrian - Social Worker
Ms. Fereshteh Molavi                       Persian - Editor
Mr. Paul Nguyen                               Vietnamese  - Volunteer                                    

Mr. Najib Tahiri                                Afghani - Social Worker

Wednesday, November 8, 2017

Mahajanan-2017 - முத்தமிழ் விழாமகாஜனாவின் முத்தமிழ் விழா  சென்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி (28-10-2017) மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர். கல்லுர்ரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.

Writer Kuru Aravinthan - Kavignar Cheranமுதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.


தொடர்ந்து ‘மகாஜனன் மலர் - 2017’ வெளியிடப்பட்டது. மலராசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் எம்மினத்திற்கு ஆதரவு தந்த கனடா நாட்டின் 150 வது பிறந்தநாளைப் பற்றிச் சிறப்புரையாற்றினார். மேலும் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நினைவாக ரொறன்ரோ மல்வேன் பூங்காவில் மரம் ஒன்று ஏற்கனவே நடப்பட்டு அதன் கீழ் இருக்கை ஒன்றும் அமைய இருப்பதை எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து மலராசிரியர் குரு அரவிந்தனிடம் இருந்து முதற்பிரதியை சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை கவிஞர் சேரன், அதிபரின் மகன் க. மணிவண்ணன், பிரதம விருந்தினர் ரவி சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து சண்முகநாதன் இரமணீகரன் வழங்கிய ‘சிங்கம் ஒன்று சோலைக்குள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து தாமிரா றஜீகரனின் பாடலுக்கு ஜனனி ஜயந்தனின் நடன அமைப்பில் ‘ஆடவா நடனமாடவா’ என்ற நாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது. இறுதியாக நாகராஜா சசிகரனின் ‘திரைஇசை நடனம்’ இடம் பெற்றது. எந்தவொரு தொய்வும் இல்லாமல் அத்தனை நிகழ்ச்சிகளும் மிகவும் தரமானவையாக அமைந்திருந்தன. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பல பிள்ளைகள் கலைநிகழ்வுகளில் பங்குபற்றித் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இந்த விழா சிறப்பாக அமையத் தன்னார்வத் தொண்டர்களாகப் பாடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவராவார்.


நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக திரு. ரி.பி.ஏ. ரஞ்சித்குமார், செல்வி கேசினி ஸ்ரீராம் ஆகியோர் மிகவும் சிறப்பாக நிகழ்வைக் கொண்டு நடத்தினர். செல்வி கேசினியின் முதலாவது மேடை நிகழ்வைச் சிறப்பாகச் செய்து முடித்தமைக்காக அவருக்கு எனது பாராட்டுக்கள். ஒலி, ஒளி அமைப்புக்களில் சில குறைகள் இருந்தாலும் பெரியவர்கள், இளையோர், சிறுவர்களுக்கு ஏற்றமாதிரிப் பலவகையான நிகழ்ச்சிகளும் இம்முறை இடம் பெற்றதால் நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகப் பலரும் பாராட்டியிருந்தனர். இறுதியாக மன்றச் செயலாளர் முத்துலிங்கம் மதிவண்ணனின் நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது. தமிழ் மொழியை மட்டுமல்ல, முத்தமிழான இயல் இசை நாடகத்தை இந்த மண்ணில்  வளர்ப்பதிலும், அதை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதிலும் மகாஜனா தன் பங்களிபபைத் தொடர்ந்தும் செய்து வருவது பாராட்டுக்குரியது.

Tuesday, November 7, 2017

Dr. Parveen Sultana

ரொறன்ரோவில் நடந்த தமிழ் மிரர் 2017 ஆம் ஆண்டு விழாவின் போது தமிழ் மிரர் எழுத்தாளர்களால் கலாநிதி. பர்வீன் சுல்தானா அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
                                                  Professor Dr. Parveen Sultana


Writer Kuru Aravinthan - Dr. Parvee Sultana

Editor Charls- Kuru Aravinthan- Pareen Sultana - A.Suresh


Canada - 150 - Birthday


கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மகாஜனன்கள் கௌரவம் பெற்றனர்
கனடா நாட்டின் 150 வது 
       பிறந்த நாள். 
                         
கனடா நாடு இன்று 150 வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றது. எமக்கு அடைக்கலம் தந்து எம்மைக் கனடிய குடிமக்களாக ஏற்றுக் கொண்ட கனடா நாட்டிற்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இந்த மண்ணில் ஈழத்தமிழர்களின் வரலாறு சுமார் 40 வருடங்களாகத் தொடர்கின்றது. அதே சமயம் எம்மை வாழவைத்த இந்த மண்ணில் எமது சங்கமான மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 28 வது வருடத்தை நிறைவு செய்து 29 ஆவது வருடத்தை நோக்கிக் காலடி எடுத்து வைப்பதில் நாங்கள் பெருமைப் படுகின்றோம்.


மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இந்த மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நாம் கல்விகற்ற எமது கல்லூரிக்கு எம்மால் முடிந்தளவு உதவுவது, மற்றும் இங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கும் எமது இளைய தலைமுறைக்கும் ஏற்ற செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்தி அவர்களின் ஆற்றலை வெளிக் கொண்டு வருவதன் மூலம் அவர்களைச் சிறந்த கனடிய பிரஜைகளாக உருவாக்குவது போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எமது கல்லூரியை மீளக் கட்டி எழுப்புவதற்காக எல்லாவகையிலும் முடிந்தளவு உதவிகளைக் கனடா பழைய மாணவர் சங்கம் இதுவரை செய்திருக்கின்றது. தொடர்ந்தும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.


எம்மால் முடிந்த அளவு கனடா நாட்டின் பெருமையைக் காப்பாற்றக் கூடிய வகையில் இந்த மண்ணில் எமது முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஒன்று கூடல், விருந்தபசாரங்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் மூலம் மகாஜனன்களாகிய நாங்கள் உறவுகளை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல, மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரத்தையும் வளர்த்துக் கொள்கிறோம். இளைய தலைமுறைக்கான தேவைகளை நிவர்த்தி செய்யவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பயிற்சிப்பட்டறைகள், பரீட்சைகள் போன்றவற்றை நடத்துவதன் மூலமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு வழி அமைத்துக் கொடுக்கிறோம். கணித, பொது அறிவுப் போட்டிகளை வருடாவருடம் நடத்திப் பரிசுகள் கொடுத்துக் கௌரவிக்கின்றோம்.
இச் சந்தர்ப்பத்தில் கனடா நாட்டின் வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். கனடா 1867 ஆம் ஆண்டு அரசியல் சட்ட அமைப்பு கொண்ட சுமார் 30 லட்சம் குடிமக்களைக் கொண்ட நவீன கூட்டாட்சி நாடாக உருவானது. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இவர்களை முதற்குடிமக்கள் (First Nations, Inuit, Metis) என்று அழைப்பர். 1605 இல் பிரென்சு மக்களும், 1610 இல் ஆங்கிலேயரும் இங்கு வந்து குடியேறினர். கனடா இன்று 350 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்லின மக்களைக் கொண்ட ஜனநாயக நாடாக உருவாகியிருக்கின்றது. பத்து மாகாணங்களையும், மூன்று ஆட்சிப் பிரிவுகளையும் கொண்ட கனடா நாட்டின் தலைநகராக ஒட்டாவா நகரம் இருக்கின்றது.
கனடாவின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல மகாஜனன்கள் கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். பன்னிரண்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கனடா தேசிய கீதத்தில் மகாஜனா குடும்பத்தைச் சேர்ந்த கவிஞர் கந்தவனம் அவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் கனடிய தேசிய கீதமும் பாடப்பட்டது பெருமைக்குரியதாகும். எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆங்கிலத்தில் எழுதிய ‘பிறீடம் இஸ் பிறி’ ( Freedom is Free) என்ற கதை தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 கதைகளில் ஒன்றாகத் தெரிவாகி, ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பல்லின மக்களையும் சென்றடைந்தது. கனடிய பிரதமரின் சார்பில் நாடாளுமன்ற பிரதிநிதியான ஹரி ஆனந்தசங்கரி அவர்களால் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.


ரொறன்ரோவில் கனடாவின் 150 பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரொறன்ரோ நகரமன்றத்தின் சார்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன், மணிவிழி கனகசபாபதி, ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா போன்ற கலை, இலக்கியக் கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு, நகரமன்றப் பிரதிநிதியான நீதன் சண்முகராஜா  அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். மகாஜனாவில் கல்வி கற்ற பல்துறை சார்ந்த கல்விமான்களும், இயல், இசை, நாடகம் போன்ற கலை, இலக்கியத் துறைசார் கலைஞர்களும், விளையாட்டுத்துறையில் சிறந்தோரும் கனடிய மண்ணில் எம்முடன் தோள் கொடுத்திருப்பது எமக்குப் பலம் சேர்ப்பதாக இருக்கின்றது. இந்சந்தர்பத்தில் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் கனடா நாட்டிற்கும், இந்த மண்ணின் முதற்குடி மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்து நீடூழி வாழ, வாழ்த்துகின்றோம். ஓ கனடா, நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம்!The Canadian Race Relations Foundation

Selected from Tamil community writer Kuru Aravinthan

Canada 115/150: Freedom is Free in Canada
Freedom is Free in Canada

By: Kuru Aravinthan

It’s been almost 25 Years since I was sitting by Lake Ontario with my son when he shouted, "Dad, run;” and started running to hide under a bush. I didn’t know why he was yelling, but I chased after him and eventually caught up with him. I asked him why he was running. Scared and shivering, he pointed out to the sky and said “Helicopter coming!” I looked up and there was a small black helicopter slowly passing by, and then I realized why he was so scared.

I tried to comfort him, “Oh son, don’t worry; this is not like the country where you were born, this is Canada. You don’t need to get scared when helicopters fly over you because they won’t shoot at you.” I watched as he slowly calmed down and he gazed at the helicopter as it passed by. “Nothing happened,” my son said with a surprised smile. During the civil war in Sri Lanka we faced many life-threatening incidents that are hard to forget. In Colombo in 1983, a mob looted and burned our house to the ground. We fled our home and moved to Northern Sri Lanka, where we hid with family.

We became refugees within our own country. Slowly, the internal conflict escalated to a civil war with aerial bombings and artillery shelling. Almost every day we had to run and hide in a bunker. We eventually took our chances and escaped Sri Lanka, thankfully attaining asylum in Canada. Unlike back home, we found that “freedom is free” in this country, and we’re able to walk anywhere without fear. Regardless of our religion, race, or what have you, we’ve never felt persecuted. That’s why I love Canada.

Family home destroyed during Civil WarBecause the Canadian education system provides second-language classes, I was able to get a job as an International Language Instructor at the Toronto District School Board. I’m proud that Canada encourages second-generation children to learn their mother-language and preserve an important part of their heritage. Today, I am constantly reminded of the freedoms and luxuries afforded to me by previous generations. I appreciate the freedom to express myself where I previously couldn’t. I appreciate our health care and support systems where I previously had none. I appreciate everyone’s curiosity to learn about my culture and identity.

 As a Tamil, we were raised in the Hindu faith, and we celebrated Thaipongal, a holiday like Canadian Thanksgiving. As a Canadian, I am happy that the Canadian government not only recognizes this holiday but has also declared every January as “Tamils Heritage Month” in respect for the contributions our community has provided to Canadian society.

It was 25 years ago, by Lake Ontario where I came to realize how lucky my family and I were to have been granted the opportunity to live here. Sometimes we forget that the necessities of a good life – health, safety, education, and freedom – are things we in enjoy in Canada but are rare in most parts of the world.

kuru2

When I look at the quality of upbringing for my children in Canada, it’s hard to ignore all of the things we take for granted.

Mahajana Family Tree - P. Kanagasabapathy


கனடா பழைய மாணவர சங்கம் வெளியிட்ட, குரு அரவிந்தனை மலராசிரியராகக் கொண்ட  மகாஜனன் - 2017 மலரில் இடம் பெற்ற கட்டுரை.

அதிபர் பொ.கனகசபாபதி

மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சமூகசேவையாளருமான திரு. பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்ததினம் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அவரைக் கௌரவிக்கும் முகமாகவும் அவரின் நினைவாகவும் மல்வேன் நூல் நிலையத்திற்கு அருகே உள்ள மல்வேன் பூங்காவில் கென்ரகி கொபி மரக்கன்று ஒன்று ( (Kentucky Coffee Tree)
 
 அவரது மாணவர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் நடப்பட்டிருக்கின்றது. கனடா பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் அந்த மரத்தின் கீழ் இருக்கை ஒன்றும் இடம் பெற இருக்கின்றது. 1989 ஆம் ஆண்டு மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான இவர் சங்கத்தின் தலைவராகவும் ஆறு ஆண்டுகள் கடமையாற்றி, கடைசிவரை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார்.


1957 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில்  Madras residency தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு விலங்கியல் ஆசிரியராகவும், அதன் பின் 1976 ஆம் ஆண்டு கல்லூரி அதிபராக இணைந்து கடமையாற்றினார். இவரது காலத்தில் கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் கல்லூரி புகழ் பெற்றிருந்தது. இவர் நைஜீரியா நாட்டுக்குச் சென்று கடமையாற்றிய பின் 1987 ஆம் ஆண்டு கனடாவிற்குப் புலம் பெயர்ந்திருந்தார். 1991 இல் தமிழ் மொழியை ஒரு பாடமாக கல்விச் சபையில் கற்பிப்பதற்கு முன்னின்று பாடுபட்டார்.
1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ‘ஒரு அதிபரின் கூரிய பார்வை’,1998 இல் ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’, 2000 ஆண்டு மாறன் மணிக் கதைகள், 2008 ஆம் ஆண்டு மாறன் மணிக்கதைகள்-2, மனம் எங்கே போகிறது, திறவு கோல், மற்றும் ‘எம்மை வாழ வைத்தவர்கள், ‘மரம் மாந்தர் மிருகம்’ ஆகிய இவரது நூல்களும் வெளியிடப்பட்டன. புலம் பெயர்ந்த சமூகத்திற்கு முக்;கியமான ஆலோசகராகவும், ரொறன்ரோ கல்விச் சபையின் பல்கலாச்சார ஆலோசகராகவும் இருந்த இவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பது வேதனைக்குரியது. ‘தோன்றில் புகழோடு தோன்றுக’ என்று குறள் சொல்வது போல புகழோடு தோன்றிய அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் என்றென்றும் எங்கள் மனதில் நிலைத்து நிற்பார்.

Monday, October 2, 2017

கவிதைகள் - நிலந்தொழு கவிதைகள்

நிலந்தொழு கவிதைகள்   

 குரு அரவிந்தன்

வளர்மதி சிவகுமாரன் அவர்களின் நூல் வெளியீடு
இந்த விழாவிற்கு தலைமைதாங்கும் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்களே, மற்றும் மேடையில் அமர்ந்திருக்கும் இனிய நண்பர்களே, சபையோர்களே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம் உரித்தாகுக.

இந்த நூலின் தொகுப்பாசிரியரான மொன்றியல் நகரத்தில் இருந்து வந்திருக்கும் இன்றைய விழா நாயகி வளர்மதி சிவகுமாரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இதுபோன்றதொரு நூலைத் தொகுத்து வெளியிடுவது என்பது இலகுவான காரியமல்ல, ஆழ்கடலில் முத்துக் குளிப்பது போன்ற தொரு நிலைதான் இது. கவிதை மீது கொண்ட ஈடுபாடு காரணமாக கவிதை உலகம் என்ற ஆழ்கடலில் இந்த அரிய முத்துக்களை இவர் தேடி எடுத்திருக்கின்றார்.


இவர் யாழ்ப்பாணத்தில் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பனித்த விழிகள் என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியரும் இவரே. அபிநயா என்ற பெயரிலும் இவரது ஆக்கங்கள் சில வெளிவந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளிலும் உள்ள சுமார் 60 கவிஞர்களின் கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் ஐயா அவர்கள் ‘தம்முயிர் காக்க தாய் தந்தையரால் காவிவரப்பட்டு உலக நாடுகளில் விதைக்கப்பட்ட பிஞ்சு விதைகளின், ஈழத்தாய் மடியின் இன்பங்ளை இழந்த துயரின் வடிகால்களாக இக் கவிதைகள் இடம் பெறுகின்றன’ என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். உலக நாடுகளில் விதைக்கப்பட்ட ‘பிஞ்சுவிதைகளின் கவிதைகள்’ என்று இவர் இக்கவிதைகளை அடையாளம் காண்கிறார்.


‘துன்பியல் கவிதைகளின் எல்லை வரை சென்று வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். இன அழிப்பிற்கு உட்பட்ட ஒரு இனத்தின் தற்கால கவித்துவ எழுச்சியை இவை அடையாளம் காட்டுவதாக இருக்கின்றது. குறிப்பாகச் சொன்னால் இந்நூல் தனிமனித பேரவலத்தின் முழுமையைச் சித்தரிக்க முயல்கின்றது. அதற்குள் காலங்காலமாக தோற்கடிக்க முடியாத  பெருமூச்சுகள் அடைக்கப்பட்டிருப்பதை உணர முடிகின்றது.’ என்று மதிப்புரை எழுதிய குட்டி ரேவதி அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

நிலந்தொழு கவிதைகள் என்ற இந்த நூலை வெளிக் கொண்டு வருவதற்கான தொகுப்பாசிரியர் வளர்மதி சிவகுமாரன் அவர்களின் எண்ணக் கரு என்ன வென்று தேடிப்பார்த்தேன்.


தாய் மண்ணில் நேர்ந்த அவலங்களையும், இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளையும், இடம் பெயர்ந்தாலும் ‘அந்தத் துன்பியல் உளநிலையில் வாழும் படைப்பாளிகள்’ அதை உலகிற்கு எடுத்துக் காட்டவேண்டும் என்ற வேட்கை காரணமாக அப்படியான படைப்பாளிகள் சிலரிடம் இருந்து பெறப்பட்ட கவிதைகள் தான் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நூலைத் தொகுத்து வெளியிடும் முயற்சியின் போது அவர் பட்ட கஸ்டங்கள் பற்றியும் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். ‘கவிதை தந்தவர்களில் சிலர் இத் தொகுப்புக்குக் கவிதை தந்தவர்கள் யாரென விபரம் கேட்டு, சில பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் கவிஞர்கள் அல்ல, அவர்களின் கவிதைகளுடன் தங்கள் கவிதைகளும் வந்தால் தங்கள் தகுதி என்ன, மரியாதை என்னாவது என்று கூறித் தங்கள் கவிதைகளை தர மறுத்துவிட்டார்கள்.’ என்று குறிப்பிடுகின்றார்.


அன்புச் சகோதரிக்கு நான் சொல்ல விரும்புவது என்வென்றால் தொடக்கத்தில் இது போன்ற தடைகள் பல வரத்தான் செய்யும், தங்களைத் தவிர வேறுயாரும் மேலே வரக்கூடாது என்ற எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தாங்களும் செய்ய மாட்டார்கள், மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். பணத்தையும் பதவியையும் வைத்துத் தாங்கள் உச்சத்தில் இருப்பதாகக் கற்பனையில் வாழ்பவர்களை உண்மையான வாசகர்கள் என்றுமே மதிப்பதில்லை. திறமை இருந்தால், நல்லதைச் சொன்னால் நல்ல வாசகர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இந்த மண்ணில் இருந்து மட்டுமல்ல உலகெங்கும் இருந்தும் தேடி  வருவார்கள்.


தமிழில் படைப்பிலக்கியங்களில் ஒன்றான கவிதை பற்றிப் பார்ப்போமேயானால் இரண்டாயிரம் ஆண்டுக் காலக் கவிதை மரபு எங்களிடம் இருக்கின்றது. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக, மொழி ஆளுமை கொண்டதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாக நாம் கருதலாம். சொல்லப்படும் கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் போன்றவற்றால்  சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும். யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும். மரபுக்கவிதையைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாகும். அதனால்தான் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாகப் புதுக் கவிதைகளையும் நவீன கவிதைகளையும் படைக்கிறார்கள். புதுக் கவிதையில் இருந்து நவீன கவிதைகள் வரை பல வடிவங்களில் இணையத் தளங்களில் இன்று கவிதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.


மரபுக்கவிதை இந்த மண்ணில் இருந்து மறைந்து விடக்கூடாது என்பதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தில் செயலாளராக நான் இருந்த போது கவிநாயகர் வி. கந்தவனம், மா.சே.அலெக்ஸாந்தர் ஆகியோரின் உதவியுடன் மரபுக்கவிதை பயிற்சிப் பட்டறையை 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பித்தோம். அதில் பங்குபற்றிய கவிஞர்களுக்கு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சான்றிதல் கொடுத்து கௌரவித்திருந்தோம். தொடர்ந்தும் எழுத்தாளர் இணையத்தின் செயற்பாட்டால் இன்று கனடாவில் பல மரபுக் கவிஞர்களை எங்களால் உருவாக்க முடிந்தது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

வளர்மதி சிவகுமாரனால் தொகுக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் மொத்தமாக 188 பக்கங்களைக் கொண்டதாக இருக்கின்றது. எம்.கே.சி அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பை சந்தோஷ் நாராயணன் அவர்களும், புத்தக வடிவமைப்பை அந்தோணி ரவி அவர்களும் செய்திருக்கின்றார்கள்.

இந்த நூலில் இடம் பெற்ற கவிஞர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால்
கனடா – 15 இலங்கை – 26 பிரான்ஸ் - 4 சுவிற்சர்லாந்து – 3 ஜேர்மனி – 3 டென்மார்க் - 3 இங்கிலாந்து – 2 அவுஸ்ரேலியா – 1  மலேசியா – 1 சிங்கப்பூர் - 1 இது போன்ற நாடுகளில் இருந்து பல கவிஞர்கள் எழுதியிருக்கின்றார்கள்.

கவிதைகளைப் பார்க்கும் போது அவர்கள் பிறந்த மண் இலங்கையாகத் தான் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. இதில் கனடாவில் இருப்பவர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம், இரா. சும்பந்தன், ஒளவை, களப்பூரான் தங்கா, மட்டுவில் ஞானக்குமாரன், அ. பகீரதன், இரஞ்சிதம் தம்பிப்பிள்ளை, வீணை மைந்தன், ராஜாஜி ராஜகோபாலன், சாந்தி தங்கராஜா, கலாராணி அசோகன், ராஜி கருணாநிதி, கல்கிதாசன், ரதிதேவி சண்முகநாதன், ஆரண்யா ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நேரம் போதாமை காரணமாக ஏனையோரின் பெயர்களைக் குறிப்பிட முடியவில்லை.

இந்த நூலில் ஒவ்வொரு கவிஞர்களும் தங்கள் உள எழுச்சியைக் கவிதைகளாகப் பதிந்திருக்கின்றார்கள். தனிப்பட்ட எவரின் கவிதையையும் நான் ஆய்வுரைக்கு உள்ளாக்கவில்லை. காரணம் ஒவ்வொரு கவிதையும் ஒட்டு மொத்தமாக நடந்த சம்பவங்களின் வெளிப்பாடாக, எம்மினத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அரசியல் மட்டுமல்ல அழகியலும் கவிதைளில் இருக்கின்றன. போரின் கொடுமை மட்டுமல்ல சுனாமியின் பழிவாங்கலும் தெரிகின்றது. எங்கள் சமுதாயத்தில் பெண்களின் நிலை, மலையக மக்களின் துயர், சிறப்பு முகாம்களில் எம்மவரின் உயிரிழப்பு போன்ற பல விடயங்களை எமது கவிஞர்கள் கவிதை வடிவில் கொண்டு வந்து இன்று நிலந்தொழு கவிதை நூல் மூலம் உலகறியச் செய்திருக்கின்றார்கள். இத் தொகுப்பில் பங்கு பற்றிய அத்தனை கவிஞர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

‘இன்று போர்க்கப்பல்கள் மார்தட்டும் கடலில்தான் அன்று உலகின் முதல் தமிழ்க்கப்பலை என் மூதாதையன் ஒடவிட்டான்’ என்ற ஜேர்மனியில் வசிக்கும் உதயகுமாரின் கவிதை வரிகளில் இருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இது போன்ற முக்கியமான சரித்திர சம்பவங்களை எடுத்துச் சொல்லும் பல விடயங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இது போன்றதொரு ஆவணத்தை துண்pந்த தொகுத்து தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்த வளர்மதி சிவகுமாரன் அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். சிறந்த நோக்கத்தோடு, குடும்பச் சுமைகளுக்கு நடுவே தனது நேரத்தைச் செலவிட்டு கனடிய தமிழ் இலக்கிய உலகிற்கு சிறந்ததொரு ஆவணத்தைத் தந்திருக்கின்றார். அந்த வகையிலே அவர் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியைப் பாராட்டி, இந்தக் கவிதைத் தொகுப்பை நீங்களும் வாங்கிப் படிப்பதன் மூலம் எம்மவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், இதை ஒரு ஆவணமாகக் காப்பாற்றி வைத்திருக்கவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு, மீண்டும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டி விடை பெறுகின்றேன்.

LAS VEGAS NEVADA


U S A


 

                                                        News:     By: Kuru Aravinthan

Monday, September 25, 2017

அனிதா ஜகதீஸ்வரன்.- Anitha Jegathesewaran


Mahajana College

விளையாட்டுத்துறையில் மகாஜனாவின் சாதனைமாத்தறையில் இடம்பெறும் 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய சாதனை படைத்தார்

மகாஜனாக்கல்லூரி மாணவி  அனிதா ஜகதீஸ்வரன்.

 சாதனையை நிகழ்த்தியதன் பின்னர் அவர்  தெரிவித்த கருத்து
எனது அடுத்த இலக்கு ஆசிய மட்டப் போட்டிகள் - அனிதா ஜகதீஸ்வரன்

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துஇ இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார். இவர் மகாஜனாக் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத் தக்கது.

போட்டிகளின் ஆரம்பத்தில் 3.42 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து 2016ஆம் ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட (3.41 மீற்றர்) போட்டிச் சாதனையை முறியடித்த அனித்தாஇ 2ஆவது முயற்சியாக 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட முயற்சி மைதானத்தில் தீடீரென பெய்த மழையால் தடைப்பட்டது.

Monday, September 4, 2017

Mr. P. Kanagasabapathy - Mahajana Collage   In Memory of  Mr. P. Kanagasabapaty

மகாஜனா முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பிறந்த நாள் இன்று. (04-09-2017)

எம்மைவிட்டுப் பிரிந்த அவரின் நினைவாக ரொறன்ரோ மல்வேன் பூங்காவில் ஒன்றுகூடல் இடம் பெற்றது.

அவரின் நினைவாக  மல்வேன் பூங்காவில் கென்ரகி கொபி மரம் ( Kentucky Coffee tree) ஒன்று நடப்பட்டது. இந்த மரத்தின் கீழ் அவரின் நினைவாக இருக்கை ஒன்றும் இடம் பெற இருக்கின்றது.

இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினரும்,நண்பர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Malini- Kuru - Thennu - Pillaiஏற்கனவே அவரது நினைவாக லான்ஸ்டவுன் என்ற இடத்தில் உள்ள தமிழ் கூட்டுறவு இல்லத்தில்  நூல் நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடுவதாகவும் மாணவர்களால் முடிவெடுக்கப்பட்டது.  Friends of our former principal late Mr.Kanagasabapathy has

planted a Kentucky Coffee tree in his memory at Toranto

Malvern  park near his home. Monday September 04 th 2017 being his birthday.
kuruaravinthan@hotmail.com


When Kentucky was first settled by the adventurous pioneers from the Atlantic states who commenced their career in the primeval wilderness, almost without the necessaries of life, except as they produced them from the fertile soil, they fancied that they had discovered a substitute for coffee in the seeds of this tree; and accordingly the name of coffee-tree was bestowed upon it. But when communication was established with the sea-ports, they gladly relinquished their Kentucky beverage for the more grateful flavor of the Indian berry; and no use is at present made of it in that manner.
— Andrew Jackson DowningTuesday, August 1, 2017

Short Story -' Neeinkkatha Ninaivukal'

Neeinkkatha Ninaivukal

நீங்காத நினைவுகள் - சிறுகதைத் தொகுப்பு